தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒரு புட்பால் அணியில் 11 பேர் விளையாடி பார்த்திருப்போம். விளையாடியும் இருப்போம். ஆனால் இது 7 பேர் விளையாடும் புட்பால் விளையாட்டை பற்றிய கதை.
நாயகன் ஜடா (கதிர்), கால்பந்து வீரர். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவரது கோச் அருண் அலெக்சாண்டர்.
ஒரு கட்டத்தில் பல வருடங்களாக தென் சென்னையில் நடைபெறாமல் இருந்த ’செவன்ஸ்’ (7 பேர்) கால்பந்து போட்டியை நடத்தியே ஆக வேண்டும் என நினைக்கிறார் கதிர்.
செவன்ஸ் ஆட்டத்தை பொறுத்தவரை எந்த விதமான விதிமுறைகளும் கிடையாது. அவர்களின் டார்கெட் பந்து அல்ல. பந்தை எடுத்து செல்பவனே டார்கெட் நினைப்பார்கள். அதன் மூலம் அவனை அடித்து வீழ்த்தி பின்னர் கோல் போடுவார்கள். எனவே கதிரை அந்த ஆட்டத்தை ஆட வேண்டாம் என கோச் முதல் நண்பர்கள் வரை சொல்கிறார்கள்.
இதனால் பலர் கால்களை இழந்து, உயிரை இழந்துள்ளனர் என எச்சரிக்கின்றனர்.
ஆனால் ஜடா அவரின் முடிவில் இருந்து ஜகா வாங்கவில்லை.
அதன் பின்னர் அவர் சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதை.
அந்த ஆட்டம் ஏன் நின்றது? யாரால் நிறுத்தப்பட்டது? திரும்பவும் அந்த ஆட்டத்தை ஆரம்பிப்பது ஏன்? இதனால் கதிருக்கு என்ன பயன்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
ஒரு கால்பந்து வீரராக அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். அதே சமயத்தில் சென்னை லோக்கல் வாலிபராகவும் தன் கேரக்டரை பலப்படுத்தியுள்ளார்.
யோகிபாபு இருந்தும் காமெடி ஒரு துளி கூட இல்லை, ஆனால் படம் முழுவதும் கதிரின் நண்பராகவும் புட் பால் ப்ளேயராகவும் வருகிறார் யோகி.
இடையில் அர்ஜீன் ரெட்டி விஜய் போல வேசம் வேற போட்டுள்ளார்.
படத்தில் 2 நாயகிகள் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.
இவர்களுடன் கிஷோர், லிஜேஷ் மற்றும் கோச் ஆகியோரின் நடிப்பு கூடுதல் பலம்.
வில்லனாக அறிமுகமாகியிருக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர் தனது பார்வையிலும் கேரக்டரிலும் மிரட்டல்
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஏ ஆர் சூர்யாவின் ஒளிப்பதிவு காட்சிகள் கச்சிதம். 2ஆம் பாதியில் நடக்கும் பேய் மிரட்டலுக்கு கைகொடுத்துள்ளது.
சாம் சி எஸ் பின்னனி இசை வழக்கம்போல பேய் பயத்தை கொடுத்துள்ளது. அதுபோல் புட் பால் காட்சியிலும் ரசிக்க வைக்கறிது-
பாடல்கள் ஓகே ரகம் தான்.
முதல் பாதி விறுவிறுப்பாக புட் பால் வேகத்துடன் செல்கிறது. ஆனால் 2ஆம் பாதியில் என்ன ஆனதோ? கொஞ்சம் புதுமை செய்ய வேண்டும் என பேய்யை உள்ளே கொண்டு வந்துவிட்டார்.
புட் பால் விளையாட்டில் பேய் புதுமை தான். ஆனால் அது வேறு மாதிரியான கதைக்களத்தை கொண்டுள்ளது.
ஆக புட்பால் புள்ளிங்கோ
Jada movie review rating