தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி என்பவரின் 2வது படம் இது.
இதன் டிரைலர் வெளியான போதே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த படம் அதற்கான தகுதியை பெற்றுள்ளதா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்…
தனது மனைவி, மனைவியின் தங்கை ஆகியோரை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறார் நாயகன் ரிச்சர்ட் (ருத்ர பிரபாகர்),
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவரும் இவர் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக கேன் டீ வித்து சில திட்டங்களை தீட்டுகிறார்.
தன்னை சிறைக்கு அனுப்பியவர்களை பழி தீர்க்க திட்டம் போட்டு ஒவ்வொருவரையும் போட்டுத் தள்ளுகிறார்.
இத்துடன் தன் மனைவி திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றும் வரை ஓய மாட்டேன் என உறுதியேற்று போராடுகிறார்.
ஹார்ட் பத்திரம் பாஸ்.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம் 4.25/5
அதாவது போலி திருமணம் மற்றும் அதற்கான சான்றிதழ் அதன் பின்னணியில் உள்ள சட்ட ஓட்டை உடைசல்களை ஆகியவற்றை எதிர்த்து போராடுகிறார்.
இறுதியில் என்ன ஆனது? பழி வாங்கினாரா,? திரௌபதி சபதம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை கதை.
கேரக்டர்கள்..
நீண்ட நாட்களுக்கு பிறகு ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். ஆக்சன், ஆக்ரோஷம், அமைதி என அனைத்து விதமான வெரைட்டிகளிலும் தன் கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
கதையின் நாயகியே ஷீலா தான். திரௌபதி கேரக்டரில் தீப்பொறி. இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் பெண்களுக்கு தனி மரியாதையை உருவாக்கும்.
ஜேஎஸ்கே கோபி மற்றும் போலீஸ் அருண் (நிசாந்த்) ஆகியோரின் கேரக்டர்கள் நாடகத்தனமாக உள்ளது. கேரக்டர்களில் வலுவில்லை. போலீசுக்கு உரிய கம்பீரம் இருவரிடமும் இல்லை.
அம்பானி சங்கர், வக்கீல் கர்ணன் மற்றும் அரசியல்வாதி ஆகியோரின் கேரக்டர்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.
முக்கியமாக டாக்குமெண்டரி பெண் டைரக்டர், லேடீ டாக்டர் மற்றும் திரௌபதி ஆகியோர் பெண்களுக்கு தனி மரியாதையை கொடுத்துள்ளனர்.
அதிரடி வசனங்கள்…
பெண்களை நிர்வணமாக்கி அல்லது அவர்களது படங்களை மாஃபிங் செய்து விளையாடும் கும்பலுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.
அம்மணம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் என பேசி திரௌபதி செய்யும் வீர செயல் மரண மாஸ்.
இணையத்தை நெளிய வைத்த விக்ரமின் ‘கோப்ரா’; இதான்டா பெஸ்ட் லுக்
100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை திரௌபதி சுட்டிக் காட்டும்போது சூடு பறக்கிறது. பேன் பார்ப்பது, குறட்டை விட்டு உறங்குவது இதெல்லாம் அரசை ஏமாற்றும் வேலை என பேசுவது நச்.
அதுபோல் பெண் டாக்டர் ஒருவர்.. என்றைக்கு பெண்கள் சானிடரி பேட் வைத்துக் கொள்ள ஆரம்பித்தாமே அப்போதே குழந்தை பிறப்பதை கார்ப்பரேட் காரன் முடிவு செய்துவிடுகிறான் என்பதாகட்டும்…
நாய் வளர்க்குறோம்… மீன் வளர்க்க்குறோம்.. ஆனா யாரும் நாளைய சமுதாயத்திற்காக மரம் வளர்க்கல என பேசுவதாகட்டும்…
ஒரு வாட்டர் கேன் 30 ரூபாய் விற்று சம்பாதிக்கும் முதலாளி வர்க்கத்தை சாடுவதாகட்டும்..
நிலத்தடி நீர்க்காக கிராம பஞ்சாயத்தில் வாத்தியார் பேசும் வசனங்களாட்டும்…
போலி திருமண சான்றிதழ் பெறும் முறையாகட்டும் அதில் நடக்கும் ஊழல்கள் ஆகட்டும் என ஒவ்வொன்றையும் பிரித்து மேய்ந்திருக்கிறார் டைரக்டர்.
வெறுமனே ஆணவக்கொலை கௌரவக் கொலைகளை காட்டாமல் அதையும் மீறி பெண் குழந்தைகளை பெற்றவர்களிடம் பணம் பறிக்கும் முறையை போலி திருமண சான்றிதழ் மூலம் சொல்லியிருப்பதும் புதுசு.
ஒரு கோடியில் கிரவுட் ஃபண்டிங் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
மைனஸ்…
ஒரு சாதியினரை உயர்த்தி காட்டுவதாக சில காட்சிகள் உள்ளது. இதனால் மற்ற சாதியினர் மனம் புண்பட வாய்ப்புள்ளது. அதை தவிர்த்திருக்கலாம்.
காட்டப்பட்டிருக்கும் காட்சிகள் மற்றும் நபர்கள் ஒரு சில அரசியல் தலைவர்களை சித்தரித்தே வைக்கப்பட்டுள்ளது. இதனால் சலசலப்புகள் ஏற்படலாம்.
ஒரு சில நடிகர்கள் தேர்வு சரியில்லை. அதாவது நடிப்பு எடுபடவில்லை.
பெண்களை இழிவுபடுத்தும் சொற்களை தவிர்த்திருக்கலாம்.
அவள அங்க அங்க தடவி… அப்படியே மாசமாக்கு என்ற வசனம் முதல்..….
பணக்கார பெண்ணை மயக்கி அவர்களை திருமணம் செய்தால் லைஃப் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணத்தையும் இது சிலருக்கு விதைக்கலாம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இரண்டு பாடல்கள் இருந்தாலும் இரண்டும் கவரவில்லை. அதிலும் வேல்முருகன் பாடும் கண்ணாமூச்சி பாடல் ஏன்? பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் உள்ள அதே ஸ்டைலில் பாட்டை வைத்திருக்கிறார் டைரக்டர். அந்தளவு அவரின் கற்பனை பஞ்சமா..?
ஒளிப்பதிவில் குறையில்லை. காட்சிகளை திறம்பட படமாக்கியுள்ளார்.
ஆனால் எடிட்டர்தான் தன் வேலையை சரியாக செய்யவில்லை. தேவையில்லாத பாடலை கட் செய்திருக்கலாம். படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் மக்களின் கவனத்தை இன்னும் ஈர்த்திருக்கலாம்.
இறுதியாக க்ளைமாக்ஸில் சொல்லப்பட்ட காட்சிகள் செம.
பணத்தை பார்த்தால் அலையும் நாய்கள் போல அரசு அதிகாரிகள் இருப்பதால் ஏற்படும் சமுதாய சீர்கேட்டையும் அரசு வக்கீல் இறுதிவரை பாய்ண்ட் பை பாய்ண்ட்டாக பேசும் வசனங்களும் சிந்திக்க வைக்கின்றன.
மணப்பெண்ணே இல்லாமல், பெற்றோர் இல்லாமல் போலியாக நடத்தப்படும் திருமண சான்றிதழ் பதிவுகளை அப்பட்டமாக காட்டியிருப்பது அரசாங்க அதிகாரிகளின் ஊழலை தோலுரித்துள்ளது.
இனி ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்கும் போது நிச்சயம் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை கோர்ட் போடும்போது சபாஷ் போட வைக்கிறது.
நாடக காதலால் ஏற்படும் விளைவுகளை சொன்ன விதத்தில் இளம் பெண்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே நிறைய சாதி கட்சி சார்ந்த குறியீடல்கள் உள்ளது. அதை தவிர்த்து இருக்கலாம்.
இந்த படத்தை சாதி கண்ணோத்துடன் பார்க்காமல் வெறும் படமாக மட்டுமே பார்த்தால் படத்தை ரசிக்கலாம்.
ஆக.. அரசு அதிகாரிகளின் அலட்சியம், வக்கீல்களின் விதண்டாவாதம், உள்ளிட்ட பல சீர்கேட்டை மோப்பம் முடித்து அதற்கு ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறார் மோகன்.
தீப்பொறி.. திரௌபதி