மாயமில்ல… மந்திரமில்ல… ஒன்னுமில்ல… சூ மந்திரகாளி விமர்சனம் 2/5

மாயமில்ல… மந்திரமில்ல… ஒன்னுமில்ல… சூ மந்திரகாளி விமர்சனம் 2/5

ஒரு கிராமம் – அடுத்தவர் மீது பொறாமை பிடித்தவர்கள் முதலில் செய்யும் காரியம் அவனுக்கு பில்லி சூனியம் செய்து செய்வினை வைப்பதுதான். இப்படி ஊருக்கு ஒருவர் இருந்தால் ஓகே.. ஊரே அப்படியிருந்தால்…

அடுத்த கிராமம் – பில்லி சூன்யம் வைப்பதை தொழிலாக கொண்டவர்கள் வாழும் கிராமம்

கதைக்களம்…

ஒரு கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். இவர்கள் அனைவரும் பொறாமை குணம் கொண்டவர்கள். எனவே ஒருவருக்கொருவர் சூனியம் வைத்து அடுத்தவனை அழிப்பதையே எண்ணமாக கொண்டவர்கள்.

இவர்களின் அடுத்த கிராமத்தில் ஒரு காதலர்களின் சாபக்கேட்டால் எந்த பெண்ணும் கர்ப்பம் தரிப்பதில்லை. ஆனால் இங்கே தான் பில்லி சூன்யம் வைப்பவர்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

எனவே நாயகன். தன் பொறாமை கார ஊர் மக்களை திருத்த நினைக்கிறார். அதன்படி மாந்திரீகம் தெரிந்த ஒரு பெண்ணை அழைத்துவர முயற்சிக்கிறான்.

சென்ற இடத்தில் மாந்தீரிகம் தெரிந்த பெண் அழகில் மயங்கி விடுகிறான். எனவே அங்கே சில நாடகமாடுகிறார்.

பங்காளியூர் கிராமம் என்ன ஆனது? அவன் முயற்சி வெற்றி பெற்றதா-? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதாநாயகனாக கார்த்திகேயன் வேலு என்பவர் அறிமுகம். சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும் போதுமான முகபாவனைகள் இல்லை.

மாந்திரீகம் தெரிந்த பெண்ணாக சஞ்சனா புர்லி. தெய்வீகமான முகம் எனபார்களே அப்படியொரு முகம். அந்த கிராமத்து நிலவே தேவையில்லை போல. இவர் அப்படி அப்படி பளிச் சென்று இருக்கிறார் அந்த கிராமத்தில். அழகு பொம்மையாக வந்து செல்கிறார்.

பெண் வேடமிட்டு நாயகனின் நண்பனாக நடித்தவர் சூப்பர். அசல் பெண் போலவே நடித்துள்ளார்.

அருவி குருவி என 2 சிறுமிகள். இருவரும் படத்தை ஜாலியாக கொண்டு செல்கிறார்கள். இவர்கள் இல்லை என்றால் படம் போர்தான்.

இரண்டு கிராமத்திலும் நிறைய மனிதர்கள் உள்ளனர். ஒரு சிலர் ரசிக்க தக்க வகையில் நடிப்பை வழங்கியுள்ளனர். கதிரவன் என்பவரின் நடிப்பை பாராட்டலாம்.

மேக்அப்பில் நிறைய பேரின் முகங்கள் தெரியவில்லை.

பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் ஓகே ரகம். சதிஷ் ரகுநாதனின் இசையமைத்து இருக்கிறார். பின்னணி இசைக்கு நவிப் முருகன்.

ஒளிப்பதிவாளர் முகமது பர்ஹாணின் காட்சிகள் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

இசை மரம் நல்ல கற்பனை. படத்தின் பாதியே கற்பனையில் தான் உள்ளது. எனவே இதையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஈஸ்வர் கொற்றவை ஒரு ஜாலியாக படம் கொடுக்க வேண்டும் என வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார். அதை இன்னும் சிறப்பாக கொடுக்க முயற்சித்து இருக்கலாம்.

படத்தின் விளம்பரங்களை மட்டும் நம்பாமல் கதையை நம்பி படம் எடுத்தால் இன்னும் பெரியளவில் படம் பேசப்பட்டு இருக்கலாம்.

ஆக.. சூ மந்திரக்காளி… மாயமில்ல.. மந்திரமில்ல.. ஒன்னுமில்ல…

Choo Mandhirakaali movie review and rating in Tamil

Related Articles