பயமறியா பிரம்மை விமர்சனம்.. கலைய கொன்னுட்டீங்களே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பயமறியா பிரம்மை விமர்சனம்.. கலைய கொன்னுட்டீங்களே

நடிகர் ஜேடி நாயகனாக நடித்துள்ள படம் ‘பயமறியா பிரம்மை’.

ஸ்டோரி…

25 ஆண்டுகளில் 96 கொலைகளை செய்த ஒரு சிறைக்கைதியை ஒரு எழுத்தாளர் நேரில் சந்தித்து பேட்டி எடுக்கிறார்.

தான் செய்த ஒவ்வொரு கொலைகளையுமே ஒவ்வொரு ஓவியமாக கலையாக என்னும் அந்த சிறைக் கைதி ஒவ்வொன்றாக விவரிக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடல்களே இந்த படத்தின் மீதிக்கதை. அவனின் நோக்கம் என்ன? அந்த கொலைகளின் பின்னணி என்ன? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இந்த படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் & பலர் நடித்துள்ளனர்.

இவர்களில் கதையின் நாயகனாக ஜெகதீஷ் என்றாலும், ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகியோர் ஜெகதீஷ் பாத்திரமாக ரசிகர்களுக்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் ஜெகதீஷ்-ன் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை பிரதிபலித்து இருக்கிறார்கள்..

ஜெகதீஷை பேட்டி எடுக்கும் எழுத்தாளராக ஒரு பத்திரிகையாளராக வினோத் சாகர்.. இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தால் மெகா சீரியல் தோற்றுவிடும்.. பேசிப் பேசியே படத்தை முடித்து நம்மையும் முடித்து விட்டார்கள்..

டெக்னீசியன்ஸ் …

இந்த படத்துக்கு கே இசையமைக்க அகில் பிரகாஷ் எடிட்டிங் செய்துள்ளார்..

பெரும்பாலான கேமரா ஆங்கிள்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் நமக்கு அயற்சியே தோன்றுகிறது.. பின்னணி இசையும் போதுமானதாக இல்லை.. காட்சிக்கு வைக்கப்பட்ட லைட்டிங் குறைவாக இருப்பதால் படத்தில் நடித்துள்ளவர்கள் முகம் கூட சரியாக காண்பிக்கப் படவில்லை.. அவர்களின் முகபாவனைகளை எப்படி காண முடியும்.?

அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ளது. இவரே இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

தனக்குத் தோன்றியதை ஒரு படைப்பாளி எப்படி வேண்டுமானால் எடுக்கலாம்.. ஒருவேளை தயாரிப்பாளர் வேராகவும் இயக்குனர் வேறாகவும் இருந்தால் நிச்சயம் இது போன்ற படத்தை எடுத்திருக்க முடியாது.

அவரே தயாரிப்பாளர் இயக்குனர் என்பதால் அதற்கான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து முழுக்க முழுக்க தனக்கு மட்டுமே புரியும் படியான ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார்..

கொலையை களையாக என்னும் ஒருவன் அவன் செய்த கொலைகளை ஒவ்வொன்றாக எழுத்தால் என்னிடம் விவரிக்கிறார் இது பன்றிய படத்தொகுப்பு இந்த படம்.

25 வருடங்களில் 96 கொலைகளை செய்த ஒரு கொலை குற்றவாளி அந்தக் கொலைகளை ஒரு கலை நயத்துடன் செய்ததை பற்றி விவரிக்கும் படமே..

ஆனால் 25 வருடங்களில் கொலை செய்த ஒருவனை போலீஸ் தண்டிக்கவில்லையா? பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுமே செய்யவில்லையா? அவனின் நோக்கம் என்ன?

ஒரு கலை ஓவியத்திற்காக கொலைகளை அரங்கேற்றும் இவன் எல்லாம் எந்த மனநிலை? என்பதற்கான விளக்கங்கள் இந்த படத்தில் இல்லை.

ஆனால் புத்தகங்கள் மனிதர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவை என்ற கருத்தோடு இந்தப் படத்தை வித்தியாசமான கோணத்தில் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராகுல் கபாலி.

விருதுகளை மட்டுமே குறி வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் அனைவரையும் திருப்திப்படுத்தாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Bayamariya Brammai movie review

மகாராஜா விமர்சனம் 4.25/5.. மகள் பாதம் பட்ட மண்ணில் மலர்ந்த நேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகாராஜா விமர்சனம் 4.5/5.. மகள் பாதம் பட்ட மண்ணில் மலர்ந்த நேசம்

ஸ்டோரி…

தேனப்பன் நடத்தும் ராம்கி சலூனில் வேலை செய்து வருகிறார் விஜய் சேதுபதி.. ஒரு அழகான குடும்பம் மகள் என வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் வீடு இடிந்த விபத்தில் தன் மனைவியை இழக்கிறார்.. அப்போது தன் மகளைக் காப்பாற்றிய ஒரு குப்பை தொட்டியை எடுத்து லட்சுமி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்.

மகள் வளர்ந்து பெரியவள் ஆனதும் மகள் ஜோதி பெயரில் சலூன் நடத்தி வருகிறார்.. இந்த சூழ்நிலையில் 10 நாட்கள் பள்ளி முகாமிற்காக தன் மகள் வெளியூர் செல்கிறார்..

அந்த சமயத்தில் வீட்டில் உள்ள லட்சுமி என்ற குப்பைத் தொட்டியை 3 திருடர்கள் எடுத்து செல்கின்றனர்.. எனவே காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார் விஜய் சேதுபதி.

ஆனால் இந்த புகாரை போலீஸ் நட்டி மற்றும் அருள்தாஸ் முனீஸ்காந்த் உள்ளிட்டவர்கள் ஏற்க மறுக்கின்றனர்… தன் குடும்ப உறுப்பினராக இருக்கும் அந்த குப்பைத் தொட்டியை கண்டுபிடித்தால் ஏழு லட்சம் வரை தர சம்மதிக்கிறார் விஜய்சேதுபதி.

எனவே காவல்துறை வேட்டையில் இறங்குகிறது.. 500 ரூபாய் கூட மதிப்பில்லாத குப்பைத்தொட்டிக்கு 7 லட்சம் வரை விஜய்சேதுபதி செலவழிப்பது ஏன்.? போலீசார் என்ன செய்தனர்? திருடர்கள் என்ன செய்தனர்? என்பதெல்லாம் மீதிக்கதை.!

கேரக்டர்ஸ்…

பொதுவாக நடிகர்கள் 50 வது படம் 100வது படம் என்றால் மாஸ் காட்டி நடிக்க வேண்டும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்ற விரும்புவார்கள். ஆனால் பாசமிக்க தந்தையாக.. மனிதநேய மக்கள் செல்வனாக.. சாந்தமான சவரத் தொழிலாளியாக தன் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி..

தன் மகள் செய்யாத குற்றத்திற்காக கல்லூரி நிர்வாகம் அவரை திட்டிய பின் மன்னிப்பு கேட்க சொல்லும் விஜய் சேதுபதியும் அந்த பிடிவாத காட்சியும் தியேட்டரையே அதிர வைக்கும்..

விஜய் சேதுபதியின் மகளாக நடித்தவரும் அருமை.. தன் தந்தையை திட்டுவது அவருக்கே பிடிக்கும் என்று சொல்லும் காட்சியில் செல்ல மகளாக ரசிக்க வைக்கிறார்.

பிடி பீரியட் தானே என அலட்சியம் காட்டும் ஆசிரியர்களுக்கு அதிரடி பதில் கொடுக்கிறார் PT Teacher மம்தா மோகன்.

பாலிவுட் வில்லன் அனுராக் காஷ்யாப் அதிரடியாக மிரட்டி இருக்கிறார். சாதாரண மொபைல் கடை நடத்தும் நபராகவும் ஒரு பக்கம் திருடனாகவும் அவர் போடும் நாடகம் செம வில்லத்தனம்..

வில்லன் அனுராக்கின் மனைவியாக அபிராமி.. நீண்ட நாட்களுக்குப் பிறகு அழவைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்.. கொலைக்கார திருடனின் மனைவியா? என சொல்லும் வசனக்காட்சியில் குற்ற உணர்வை காட்டியிருக்கிறது..

நீண்ட நாட்களுக்குப் பிறகு பாய்ஸ் மணிகண்டன்.. அவரது கொடூர குணம் படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.. காமெடி செய்து கொண்டிருந்த சிங்கம் புலி-யை இந்தப் படத்தில் வித்தியாசமாக நடிக்க வைத்திருக்கிறார்.. அவரைப் பார்த்தால் நீங்களே கடுப்பாகி திட்டுவீர்கள்.

வில்லனின் நண்பனாக வினோத் சாகர், போலீசாக திருடன் கல்கி உள்ளிட்டோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

போலீஸ் நட்டி மற்றும் அருள்தாஸ்.. – கொஞ்சம் காமெடி.. கொஞ்சம் நேர்மை.. கொஞ்சம் பணத்தாசை.. கொஞ்சம் மனிதநேயத்தையும் காட்டியிருப்பது சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…

அனல் அரசு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.. கற்பனைக்கு எட்டாத காட்சியை வைக்காமல் யதார்த்தமாக கையாண்டுள்ளது சிறப்பு..

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய பிலோமீன் ராஜ் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் பெரிய அளவில் பேசப்படும்.. முக்கியமாக எடிட்டிங் வித்தியாசமாக கையாளப்பட்டுள்ளது.. திடீர் திடீரென நகரும் காட்சிகள் இடைவேளைக்குப் பின்பு அதற்கான விளக்கம் கொடுக்கும் ட்விஸ்ட் சூப்பர்..

கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுத அஜீனிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். மகளுக்காக எழுதப்பட்ட பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசையில் அதிர வைத்துள்ளார் அஜீனிஷ் லோக்நாத்.

‘குரங்கு பொம்மை’ படத்தை தொடர்ந்து மகாராஜா படத்தை இயக்கி இருக்கிறார் நித்திலன்.. இவரது முதல் படத்திலேயே கிளைமாக்ஸ் அதிர வைத்திருக்கும்.. இந்த மகாராஜாவில் கிளைமாக்ஸ் காட்சி உங்களை கண்கலங்க வைக்கும்.. முக்கியமாக பாதம் பட்ட மண்ணில் ரத்தம் நிரம்பும் அந்த ஒரு காட்சியே போதும்..

அப்பா மகள் பாசத்தை காட்டும் இந்த மகாராஜாவில் ஏன் இத்தனை வன்முறை.. என்ற கேள்வி எழுகிறது.. ரத்தம் தெறிக்கும் அளவுக்கு தேவையா.?

காட்சிகளில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் இருப்பதால் படத்தை விவரிக்க முடியாது.. ஆனால் இடைவேளைக்கு பிறகு நகரம் ஒவ்வொரு காட்சிகளும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது..

ஆக இந்த மகாராஜா.. உங்கள் மனதை மயக்கும் ராஜா

Vijaysethupathis Maharaja review

வெப்பன் விமர்சனம்.. சூப்பர் ஹியூமன் சூப்பரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெப்பன் விமர்சனம்.. சூப்பர் ஹியூமன் சூப்பரா..?

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம். சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’..

ஸ்டோரி…

Youtuber வசந்த் ரவி தனது வித்தியாசமான படைப்புக்காக ஓர் இடத்திற்கு செல்கிறார். அங்கு ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கிறது.. இதனை அடுத்து அந்த இடத்தில் இருக்கும் இவர் மீது சந்தேகம் எழவே போலீசார் இவரை விசாரிக்கின்றனர்.

இவர் மேல் தீராத சந்தேகத்தில் இருக்கும் போலீசார் இவரை துருவித் துருவி விசாரிக்க இவர் எந்த பதிலும் சொல்லாமல் அனுப்புகிறார். இதனை எடுத்து மாஸ்க் அணிந்த ஒருவர் விசாரிக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவர் சூப்பர் ஹியூமன் ஒருவர் இருக்கிறார். அவரை உங்களால் அழிக்க முடியாது என்கிறார்.

மேலும் விசாரணையில் பல சம்பவங்கள் தெரிய வருகிறது.. வசந்த ரவி உண்மையில் யார்.? அவருக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு என்பதே மீதிக்கதை.

கேரக்டர்ஸ் …

சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை மற்றும் பலர்.

சத்யராஜ் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இதுவரை ஏற்காத சூப்பர் ஹியூமனை சிறப்பாக செய்து இருக்கிறார்.. இவரும் வசந்த ரவியும் மோதும் அந்த கிளைமாக்ஸ் ஃபைட் அதிர வைக்கிறது..

ஜெயிலரில் சாந்தமாக வந்து கடைசியாக மிரட்டிய வசந்த் ரவி இந்த படத்தில் ஆரம்பம் முதலே மிரட்டி இருக்கிறார்.. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் வசந்த் ரவியின் இரட்டை வேடம் செம.. சில நேரங்களில் கத்தி ஓவர் ஆக்டிங் செய்தாலும் அந்த கேரக்டருக்கு இது தேவை தான் என்பதை உணர வைத்திருக்கிறார்.

வழக்கமாக வந்து செல்லும் நாயகியாக தான்யா ஹோப்.. அவரது தடித்த உதடுகளும் உருளைக் கண்களும் கவிதை பேசுகிறது..

மாஸ்க் போட்டு பேசும் விசாரணை அதிகாரி கொஞ்சமாவது வாயை திறந்து பேசி இருக்கலாம்.. டப்பிங் பிரச்சினை வரும் என்று நினைத்து விட்டார் என்னவோ அவர் பேசும் குரல் சுத்தமாக புரியவில்லை..

யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன்,
வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் இப்படியாக பல நட்சத்திரங்கள் வந்து சென்றாலும் இவர்கள் கதைக்கு ஒத்துழைத்திருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய கலை சுபேந்தர்.. ஆக்‌ஷன் – சுதீஷ்.

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கிறார்..

கலை இயக்குனரும் VFX கலைஞர்களும் முழு உழைப்பை கொடுத்திருக்கின்றனர். இவர்கள் இல்லாவிட்டால் இந்த படத்தை ரசிக்க முடியாது கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது..

பாடல்களுக்கு நிறைய இசையமைப்பாளர்கள் இருந்தாலும் பின்னணி இசைக்கு இளையராஜா யுவன் ஜிப்ரன் உள்ளிட்ட ஒரு சிலரையே சொல்லலாம்.. இதில் ஜிப்ரனின் இசை மிகப்பெரிய பலத்தை சேர்த்துள்ளது. தெறிக்கும் இசையை கொடுத்து படத்தில் திரில்லருக்கு ஏற்ப நம்மை படபடக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது.. முக்கியமாக படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிளாக் அண்ட் ஒயிட்டில் படமாக்கப்பட்டு இருக்கிறது.. இது ஆங்கில படத்திற்கு நிகராக இருக்கிறது.

வித்தியாசமான இந்த சயின்ஸ் பிக்சன் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை கதை எதை நோக்கி நகர்கிறது என்ற குழப்பத்தில் நாம் இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு முக்கியமாக சத்யராஜ் வந்த பிறகு கதையின் வேகம் சூடு பிடிக்கிறது கிளைமாக்ஸ் வரை அது நீடிக்கிறது.

சத்யராஜுக்கும் வசந்த ரவிக்கும் என்ன தொடர்பு என்பதும் மாஸ்க் மனிதனின் உண்மையான முகம் என்ன என்ற காட்சிகள் அதிர வைக்கிறது.

அதிலும் சூப்பர் ஹியூமன் கதையை சுதந்திரப் போராட்ட காலத்தில் தொடங்கி ஹிட்லர் நேதாஜி வரை கொண்டு சென்று கதையாக விவரித்து இருப்பது குகன் சென்னியப்பனின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது..

ஆனால் ஒரு திரைக்கதையை வடிவமைக்கு போது பாமர மக்களுக்கும் புரியும் வகையில் கொடுத்திருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். டெக்னிக்கிலாக படம் வலுவாக இருந்த போதிலும் திரைக்கதையில் கொஞ்சம் வலு சேர்த்து இருக்கலாம்.

அதற்கு அழகான படங்களுடன் விளக்கமும் கொடுத்து படமாக்கி இருப்பது இந்த ‘வெப்பன்’ படத்திற்கு புகழ் சேர்க்கிறது..

Weapon Tamil movie review

காழ் விமர்சனம்..; வீட்டை கட்டிப்பார்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காழ் விமர்சனம்.. வீட்டை கட்டிப்பார்.!?

ஸ்டோரி…

ஆஸ்திரேலியாவில் தன் மனைவி மிமி லியோனார்டுடன் வசிக்கிறார் யுகேந்திரன் வாசுதேவன்.. இந்த தம்பதிகளுக்கு எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதுதான் பெருக்கனவு. இதனால் இவர்கள் லோன் எடுக்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.. ஒருவனை நம்பி இவர்கள் இந்த விஷயத்தில் ஏமாற்றம் அடைகின்றனர்..

இப்படியாக இவர்கள் வாழ்க்கை ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்கையில் அடுத்த பக்கம்…

நித்யா பாலசுப்பிரமணியனைக் காதலிக்கும் சித்தார்த் அன்பரசுவுக்கு குடியுரிமை (பிஆர்) பெற வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது.. பெறாவிட்டால் இந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலையில் தன் சொந்த நாட்டில் இருக்கும் வீட்டை விற்க முயற்சிகள் எடுக்கிறார்.. அது என்னவானது.?

இவர்களின் வாழ்க்கை என்னவானது? கனவு நிறைவேறியதா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் யுகேந்திரனை பார்க்க முடிகிறது.. அவரது நிதான நடிப்பும் உடல் மொழியும் ரசிக்க வைக்கிறது… நாயகி மிமி கருப்பழகி அவரது இலங்கை தமிழ் ரசிக்க வைக்கிறது.

சித்தார்த் அன்பரசு – வித்யா பாலசுப்ரமணியம் ஜோடி நடிப்பிலும் அழகிலும் கவனிக்க வைக்கிறது..

அஸ்வின் விஸ்வநாதனும் தன் நடிப்பில் ஈர்க்கிறார். ஆனால் படம் முழுவதும் நிறைய பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.. கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய நாட்டில் தமிழர்களை வைத்து தமிழ் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன்ராஜ் விஜே.. மேலும் இலங்கைத் தமிழர்களையும் அவர்கள் மொழியிலே பேசவிட்டு அழகு பார்த்திருக்கிறார்.

எலி வலையாக இருந்தாலும் சொந்த வலையாக இருக்க வேண்டும் என்பது பழமொழி.. அதுபோல குடிசை வீட்டில் வசித்தாலும் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் கனவாகும்..

ஹெல்வின் கே எஸ் மற்றும் சஞ்சய் அரக்கலின் இசை வசந்த் கங்காதரனின் ஒளிப்பதிவும் ஓகே ரகம் மட்டுமே..

வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார் அப்பொழுதுதான் கஷ்டம் புரியும் என்ன முன்னோர்கள் சொல்லியிருப்பார்கள்.. அதுபோல ஒரு வீடு கட்டுவதற்கு உலகில் எந்த மூளை பகுதியாக இருந்தாலும் வீடு கட்டுவது எளிதானது அல்ல.. அதிலும் கடன் பெற்று வீட்டை கட்டுவது எளிதான காரியம் அல்ல.

நிறைய காட்சிகளில் லைவ் ரெக்கார்டிங் செய்திருப்பது தெரிகிறது.. சில காட்சிகளில் மட்டும் டப்பிங்..? மொத்தம் 5 – 10 நபருக்குள் படத்தின் முழு படத்தையும் முடித்து இருக்கிறார்.. ஒரு சில காட்சிகளில் மட்டும் கூட்டம் கூட்டமாக நண்பர்கள் உறவினர்களை காட்டி இருக்கிறார்கள்..

லோன் ஏஜெண்டுகள் புரோக்கர்கள் இவர்களை நம்பி வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு விழிப்புணர்வு படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன்ராஜ் விஜே.

Kaazh movie review

தண்டுபாளையம் விமர்சனம்..- உதவி கேட்டால் உஷார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தண்டுபாளையம் விமர்சனம்..- உதவி கேட்டால் உஷார்.!

டைகர் வெங்கட், சுமா ரங்கநாத், பூஜா காந்தி, சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், முமைத்கான், பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்ரமணி நடிப்பில் உருவான ‘தண்டுபாளையம்’..

டைகர் வெங்கட் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி தயாரித்து இருப்பதோடு, கே டி நாயக் என்பவருடன் இணைந்து இயக்கி இருக்கிறார்..

ஒன்லைன்…

தெருவில் போகும்போது வீடுகளை நோட்டமிட்டு வீட்டிற்கு வந்து தண்ணி கேட்பது போல கேட்டு திடீரென வீட்டுக்குள் நுழைந்து பெண்களை பலாத்காரம் செய்து நகை பணத்தை கொள்ளை அடிப்பது தான் கதை..

கன்னட மொழியில் 3 கோடி பட்ஜெட்டில் உருவாகி 2012 ஆண்டு வெளியான ‘தண்டுபால்யா’ படம் 42+ கோடி வசூல் செய்தது.. இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்றன. கன்னடத்தில் பூஜா காந்தி ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஸ்டோரி…

100+ கொலைகளுக்கு மேல் செய்த ‘தண்டுபாளையம்’ கும்பல் சம்பவத்தை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது..

வாழ வழி இல்லை என்று வேலை கேட்பது.. கையில் இருக்கும் கைக்குழந்தையை அழ வைத்து பால் கேட்பது… உதவி கேட்பது.. உணவு தண்ணீர் கேட்பது.. என வீட்டுக்குள் நுழைந்து பெண்களை பலாத்காரம் செய்து கொலை கொள்ளை அடித்து கொடூரமாக பதற வைக்கும் பின்னணி கொண்ட கும்பலை பிடிக்க போலீஸ் டைகர் வெங்கட் வருகிறார்.

அவர் இந்த கொடூர கொலை கும்பலை பிடித்தாரா? இறுதியில் என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்ஸ்….

கொடூரப் பெண்களாக சுமா ரங்கநாத், பூஜா காந்தி ஆகியோர் நடிப்பில் மிரள வைத்திருக்கின்றனர்.. இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கழுத்தை அறுத்து கொலை செய்யும் கொடூர காரிகளாக சோனியாவும் வனிதாவும் மாறி இருப்பது ஆச்சரியம்தான்.. இருவரும் குடிப்பது , சுருட்டு பிடிப்பது என வித்தியாசமான வேடத்தில்.. நடிப்பில் குறையில்லை.

இவர்களுடன் டைகர் வெங்கட்டும் மிரட்டி இருக்கிறார்.. சில இடங்களில் ஓவர் ஆக்டிங் கொடுத்திருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

பலாத்காரம் மற்றும் கொடூரக் கொலைகளை செய்யும் கொள்ளைக்கார கும்பலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது..

கன்னடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை தமிழில் இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டம் கொடுத்திருக்கலாம்.

சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் படத்தின் தரம் குறைவாகவே தெரிகிறது.

ஜித்தின் கே ரோஷனின் இசையில் ஒரு பாடல் ஆட்டம் போட வைக்கும்.. இந்த கொடூர படத்திற்கு பின்னணி இசை பக்க பலமாக அமைந்திருக்கிறது..

ஆக நம் வீட்டிற்கு உதவி கேட்க வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மிகப்பெரிய எச்சரிக்கையை பதிவு செய்திருக்கிறது இந்த தண்டுபாளையம்.

Thandupalaiyam movie review

ஹரா விமர்சனம்.. மோகன் மைக்கை பிடுங்கி துப்பாக்கி கொடுத்த விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரா விமர்சனம்.. மோகன் மைக்கை பிடுங்கி துப்பாக்கி கொடுத்த விஜய் ஸ்ரீ

ஸ்டோரி..

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கிறது.. இதற்காக போலீஸ் தரப்பில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமைக்கப்பட்டுள்ளது..

இந்த சூழ்நிலையில் ராம் (மோகன்) தொழுகை செய்துவிட்டு தாவூத் இப்ராஹிம் என தன் பெயரை மாற்றிக் கொண்டு வெளியே புறப்படுகிறார்.

தன் மகள் இறப்புக்கு என்ன காரணம்? அவர் தற்கொலை செய்து கொண்டாளா.? கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்விகளோடு புறப்பட்டு மொட்ட ராஜேந்திரனிடம் ஒரு கள்ளத்துப்பாக்கி வாங்கி கொண்டு வேட்டையாட புறப்படுகிறார் மோகன்.

மோகனால் வேலை பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயக்குமார் தனது சகாக்களுடன் இவரை துரத்துகிறார்.

இதனிடையில் மோகன் தேடுதல் வேட்டையில் மகளின் பாய் ஃப்ரெண்ட் சந்தோஷ் பிரபாகர் மற்றும் நர்ஸ் அனித்ரா மற்றும் அவரது பாய் பிரண்ட் கௌஷிக் உள்ளிட்டோர் இணைகின்றனர்.

தன் மகள் சுவாதியின் மரணத்திற்கு விடை கண்டுபிடித்தாரா மோகன்.? மகள் நிலை என்ன.? ராம் என்ற பெயரில் இருக்கும் இவர் தாவூத் இப்ராஹிம் என பெயரை மாற்றிக் கொண்டது ஏன்? அவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு.? தீவிரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருக்கிறதா?என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Mohan – Ram/Dhawood Ibrahim
Anumol – Nila
Yogibabu – Advocate
Kaushik Ram – Vamsi
Anitha Nair – Anithra
Charuhasan – Velu Nayakkar
Mottai Rajendran – Bullet Ravi
Suresh Menon – Nirav
Vanitha VijayKumar – Vijaya Bhaskar
Mime Gopi – Dhawood Ibrahim
Aadhavan – Aadhavan
Singam Puli – Puli
Deepa – Judge
Mano Bala – Professor
Santhosh Prabakaran – Dharshan
Swathi – Nimisha

14 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்தாலும் அதே எனர்ஜியுடன் கம்பைக் கொடுத்திருக்கிறார் மோகன்.. ஆக்ஷன் எமோஷன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

தன் மகளுக்கு என்ன ஆனதோ என ஏங்கும் காட்சிகளில் தந்தை உணர்வைக் காட்டி இருக்கிறார்.. போலி மாத்திரைகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் போது ஒன் மேன் ஆர்மியாக உயர்ந்து நிற்கிறார்.

மோகன் ஜோடியாக அனுமோல்.. கணவன் மீது நேசம்.. மகள் மீது பாசம் கொண்ட நிலவாக நிறைந்து இருக்கிறார்..

இளம் காதலர்களாக கௌஷிக் ராம் மற்றும் அனித்ரா.. இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி.. அழகிலும் அக்ஷனிலும் செம..

மற்றொரு ஜோடியாக சந்தோஷ் மற்றும் சுவாதி.. மிகையில்லாத யதார்த்த நடிப்பில் ஜொலிக்கின்றனர்..

போலீசாக வரும் ஜெயக்குமார், இளையா சாய் தீனா, மூவரும் கம்பீரத் தோற்றத்தில் கலக்கி இருக்கின்றனர்..

பழ கருப்பையாவும் வனிதாவும் பேசிக்கொள்ளும் அரசியல் திமுக அதிமுக கட்சிகளை தாக்கும் பளிச் வசனங்கள்..

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், பழ கருப்பையா, வனிதா விஜயகுமார், சுரேஷ்மேனன், யோகி பாபு, ரயில் ரவி, ஜெயக்குமார், ராஜன், மனோ பாலா, சாம்ஸ், ஆதவன், சிங்கம் புலி, தீபா, தர்மராஜ், அர்ஜுன், அலெக்ஸ், தர்மா, அன்பு கபில், பிரபா, விக்கி மற்றும் கல்லூரி பெண்கள் என பல நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.. மோகனுக்கு உதவும் முக்கிய கேரக்டரில் இவரும் வந்து செல்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

Director – Vijay Sri G
Music- Rashaanth Arwin
DOP Team – Prakath Munusamy Manodinakaran, Mohan Kumar, Vijay Sri G
Edit – Guna
Lyrics – Vijay Sri
Produced by – Kovai SP Mohanraj
Stunt – Vijay Sri G
PRO – Nikil Murukan

சின்ன பட்ஜெட்டில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ் பி மோகன்ராஜ்.

14 வருடங்களுக்குப் பிறகு மோகன் என்ட்ரி என்பதால் மோகன் ரசிகர்கள் இனிமையான பாடல்களை எதிர்பார்த்து இருப்பார்கள்.. அதை இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப கொடுத்து இருக்கிறார் ரஷாந்த் அர்வின்..

இயக்குனர் விஜய் ஸ்ரீ எழுதிய வாடா மல்லி மற்றும் மகளே இரண்டு பாடல்களும் தியேட்டர் விட்டு வந்த பின்னும் முணுமுணுக்க வைக்கிறது..

மோகன் கையில் துப்பாக்கி இருக்கும்போது பாட்டு எதற்கு பைட்டு தானே வேண்டும் என எண்ணி அதிரடி பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின்.

பிரகத் முனியசாமி மனோதினகரன் ஒளிப்பதிவில் காட்சிகளில் பிரம்மாண்டம் தெரிகிறது.. முக்கியமாக பாலக்காடு ரோட்டில் படமாக்கப்பட்ட கன்டெய்னர் சண்டைக்காட்சி வேற லெவல்.. கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடியாக துப்பாக்கி சத்தம் காதை பிளக்கிறது ஆனால் அது கொஞ்சம் நம்பும்படியாக இல்லை..

இடைவேளை வரை விறுவிறுப்பாக பயணிக்கிறது.. அடுத்தது என்ன நடக்கும் என நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து விட்டார் எடிட்டர் குணா.

ஆனால் இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பு ?? முக்கியமாக தீபா, யோகி பாபு, மைம் கோபி, ஆதவன், சாருஹாசன், நீச்சல் சரளா உள்ளிட்டோரின் காட்சிகளை எடிட்டர் குணா வெட்டி இருக்கலாம்.

ஒரு 14 வயது பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வது என்றால் பெண் போலீஸ் வேண்டும் என அந்த மாணவியே கேள்வி கேட்கும் காட்சி அதிர வைக்கிறது.. அடிப்படை சட்டங்களை அனைவரும் தெரிந்து கேள்வி கேட்டால் கெட்ட போலீசுக்கு வேலை இருக்காது என்பதற்கு அந்த காட்சி ஒரு உதாரணம்.

அப்பா மகள் பாசம்.. கோவை குண்டுவெடிப்பு.. தாவூத் இப்ராஹிம் தீவிரவாத தொடர்பு.. கள்ளத் துப்பாக்கி கலாச்சாரம்.. போலி மாத்திரை வியாபாரம்.. சாமானியனின் தைரியம்… மாதவிடாய் நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட அனைத்து கருத்துக்களையும் கலந்து ஒரு கமர்சியல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

ஆக ஹரா.. மோகன் கையில் இருந்த மைக்கை பிடுங்கி துப்பாக்கியை கொடுத்திருக்கிறார் விஜய் ஸ்ரீ ஜி.

Mohans Haraa movie review

More Articles
Follows