தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
முன்கதை…
ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது. அதாவது ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு என்கிறார் இயக்குநர்.
இப்படத்தை எழுதி இயக்கியவர் ராகுல்.ஆர். கிருஷ்ணா. இவர் தமிழ், மலையாளத்தில் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளார்.
எவருக்கும் தீங்கு நினைக்காத இரு மனிதர்களுக்கு ஏற்படும் துரோகம் ஏமாற்றம்.. இவற்றை எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் ஆட்டமே ‘ஐமா’.
தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films ) நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் நாயகனாக யூனஸ், நாயகியாக எல்வின் ஜூலியட், முக்கிய கேரக்டர்களில் அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் திருப்புமுனை கேரக்டரில் வருகிறார்.
கதைக்களம்…
விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறார்.
மற்றொரு பக்கம் ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்.
சில தினங்களில் இவர்கள் இருவரையும் எவரோ ஒருவர் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர்.
வாயை கட்டி.. கை கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு அடைத்து துன்புறுத்துகின்றனர். குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலை.
கடத்தியவர்கள் யார்? இவர்களை கடத்த திட்டமிட்டது ஏன்? இருவருக்கும் என்ன தொடர்பு? இருவரையும் ஒரே இடத்தில் அடைத்து வைக்க என்ன காரணம்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கிறது.
கேரக்டர்கள்…
நாயகன் – நாயகி இருவரை சுற்றிதான் படம். இடைவேளை வரை இவர்கள் மட்டுமே திரையில் ஆக்கிரமிக்கின்றனர். இடைவேளைக்குப் பிறகு வில்லன் மற்றும் சில கலைஞர்கள் வந்து செல்கின்றனர்.
நாயகனாக யூனஸ் ரசிகைகளை கவரும் லுக்கில் வருகிறார். சேவ் செய்து முகத்தை காட்டும் போது நார்மலான பையனாகவும் தாடி வைத்த பின் 1990களின் நடிகர் விஜய்யை நினைவுபடுத்துகிறார். நடிப்பில் ஓகே ரகம்தான்.
நாயகன் கயிற்றை அவிழ்க்கும் காட்சிகள் 10 நிமிடம் காட்டப்படுகிறது.. ஆனால் நாயகி கட்டை அவிழ்க்கும் காட்சிகள் இரண்டு நிமிடத்தில் முடிந்து விடுகிறது.
அடடா இப்படி கூட கட்டை அவிழ்த்திருக்கலாமே என் நாயகனே நினைக்கும் வகையில் நமக்கும் சிரிப்பு வருகிறது. தவிக்கும்போது எவ்லின் ஜூலியட் முக பாவனைகள் முதிர்ச்சி.
ஒரு சீனில் லிப் டூ லிப் கிஸ் கொடுத்து பெருசுகளையும் சூடேற்றுகிறார் ஹீரோயின் ஜூலியட்
வில்லனாக தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி. வில்லத்தனம் காட்ட முயற்சித்துள்ளார். சில நேரம் பார்ப்பதற்கு விஜய்சேதுபதி போல இருக்கிறார்.
“இவன் அவனில்லை அவன் இவனில்ல” என சொல்லி சொல்லி சுவாரஸ்யம் கூட்டுகிறார் வில்லன் சண்முகம்.
டெக்னீசியன்கள்..
கே ஆர்.ராகுல் இசையில் 10 பாடல்கள். சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் 10 பாடலா? தேவையற்றது. ரசிகரின் மனநிலை அறிந்து எடிட்டர் கட்டிங் போட்டு இருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணனின் பணி பாராட்டுக்குரியது. ஒரே அறைக்குள் முன்பக்கம் பின்பக்கம் தலைப்பக்கம் என ஆங்கிள் மேல் ஆங்கிள் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
திரில்லர் படமாக தொடங்கி பின்னர் சைன்ஸ் பிக்ஷனாக படம் மாறுகிறது. ஆனாலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குநர்.
இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா.. நாயகன் நாயகியை மையப்படுத்தி கதை சொல்லி அதன் பின்னர் சில முகங்களை திரையில் காட்டி இருக்கிறார் இயக்குனர். இது வித்தியாசமான சிந்தனை தான் என்றாலும் ரசிகர்களுக்கு கதை சொன்ன விதத்தில் தடுமாறி இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்..
ஆக ஐமா… அறைக்குள் அவர்கள்
AIMA movie review and rating in tamil
