தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : உமாபதி, ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன், யோக்ஜேப்பி, தம்பிராமையா மற்றும் பலர்.
இயக்கம் : ஆர். இன்பசேகர்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : பிகே வர்மா
எடிட்டர்: ஜி. மதன்
பி.ஆர்.ஓ. : பிடி செல்வகுமார் (ராஜ்குமார்)
தயாரிப்பு : சிவரமேஷ் குமார் (சில்வர் ஸ்கீரின்)
கதைக்களம்…
நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி அறிமுகமாகியுள்ள படம் இது.
உமாபதி ஒரு கிதாரிஸ்ட். எப்போதுமே அதனுடன் எங்கும் திரிபவர். அந்த கிதாரிலேயே அவரின் போட்டோ, போன் நம்பர், அட்ரஸ் எல்லாவற்றையும் குறிப்பிட்டு இருப்பார்.
ஒரு முறை இவருடைய செக்யூரிட்டி நண்பருக்கு உதவ செல்கிறார். அன்றைய தினத்தில் அந்த வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து விடுகின்றனர்.
அப்போது தவறுதலாக அந்த கிதாரை அங்கு மிஸ் செய்துவிடுகிறார்.
இதனால் போலீஸ்க்கு தடயம் கிடைத்துவிடும் என்பதால் அந்த வீட்டிற்குள் டிடெக்கிவ் ஏஜெண்டாக செல்கிறார்.
அதன்பின்னர் அங்கு நடக்கும் சுவராஸ்யங்களே இப்படத்தின் கதை.
கேரக்டர்கள்…
நடிப்பை விட நடனத்தில் அதிகம் ஸ்கோர் செய்கிறார் உமாபதி. இவரது குரலில் கம்பீரம் இல்லாததால் ஹீரோ கொஞ்சம் தடுமாறுகிறார்.
ரேஷ்மா ரத்தோர் கண்களை உருட்டி அழகாக வருகிறார். ஆக்ஷன் மற்றும் பாடல்களில் கவர்கிறார்.
கருணாகரன் தன்னை பலசாலியாக காட்டிக் கொள்ளுவது கொஞ்சம் புதுசு.
நிறைய அடி வாங்கிய பின் குடும்ப சென்டிமெண்டை கூறி அடியாட்களை கருணாகரன் கவர்வது ரசிக்க வைக்கிறது.
எதற்காக திருடர்கள் வந்தார்கள் என்பது தெரியாமல் ஆடுகளம் நரேன் தவிப்பது அருமை.
எவரும் எதிர்பாராத வகையில் மனோபாலா வில்லனாக மாறுவது செம காமெடி ட்விஸ்ட்.
யோக் ஜேப்பி மற்றும் பாண்டியராஜன் கேரக்டர்களை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இமான் இசையில் அனைத்து பாடல்களும் அருமை. ஒரு குத்து பாடல் மற்றும் இதமான மெலோடிகள் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஏனடீ, நீ என்னை இப்படி ஆக்கின..? அந்த புள்ள மனசுக்குள்ள, இதற்குத்தானே ஆகிய பாடல்கள் இதமான ராகம்.
யுகபாரதியின் வரிகளும், ஸ்ரேயா கோஷல் தேன் குரலும் இமானின் எவர் கிரீன் மேஜிக் என்றே சொல்லலாம்.
ஆனால் டூயட் பாடல்கள் அனைத்தையும் ஒரே போலவே படமாக்கிவிட்டார். கொஞ்சம் வைரைட்டி காட்டியிருக்கலாமே.
வர்மாவின் ஒளிப்பதிவும் மதனின் படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது.
படத்தின் கதையில் பெரிதாக புதுமையில்லை என்றாலும் கலகலப்பாக படத்தை எடுத்து செல்கிறார் இயக்குனர்.
க்ளைமாக்ஸில் அதாகப்பட்டது மகாஜனங்களே… ஒரு பொருளை தொலைத்துவிட்டு எப்படி எங்கோ தேடுகிறோம்? என விளக்கம் அளித்து, டைட்டிலை சொல்லிவிட்டார்.
தம்பிராமையாவை அருமையாக பயன்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கலாம்.
ஆனால் அவரது மகன் படம் என்பதால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் காட்டிவிட்டு மோசம் செய்துவிட்டார்.
அதாகப்பட்டது மகாஜனங்களே… ஒருமுறை பார்க்கலாம்.
