அபியும் அனுவும் விமர்சனம்

அபியும் அனுவும் விமர்சனம்

நடிகர்கள் : டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகினி, மனோபாலா, கலைராணி, உதயபானு மகேஷ்வரன், தீபா ராமனுஜம் மற்றும் பலர்
இயக்கம் – பி.ஆர். விஜயலட்சுமி
ஒளிப்பதிவு – அகிலன்
இசை – தரண்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு – விக்ரம் மெஹ்ரா, பி.ஆர். விஜயலட்சுமி

கதைக்களம்…

இதுவரை தமிழ் சினிமா பாத்திராத கேட்காத ஒரு புதிய கதைக்களம். இந்த சிக்கலான புதிய அரிய முயற்சிக்காகவே டைரக்டரை பாராட்டலாம்.

ஐடி கம்பெனியின் வேலை பார்க்கிறார் நாயகன் டோவினோ தாமஸ்.

நாயகி பியா ஊட்டியில் தன் அம்மா ரோகினியுடன் வசிக்கிறார்.

சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்ட பியா, தான் செய்யும் நல்ல செயல்களை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போடுவதை வாடிக்கையாக கொண்டவர்.

அதை பார்க்கும் டோவினோ தாமஸ் அவருடன் காதல் கொள்ள, சில தினங்களில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

அதன்பின்னர் பெற்றோருக்கு தெரியப்படுத்துகின்றனர்.

திருமணத்திற்குப் பிறகு பியா கர்ப்பமாகிறார். அப்போது பியா அம்மா சென்னைக்கு வர, அங்கே அவருக்கு முன்பே தெரிந்த வேலைக்காரி வருகிறார்.

அவரை சந்தித்தபின் தான் அவருக்கு ஒரு உண்மை தெரிகிறது. தன் மகளின் கணவனும் தன் வயிற்றில்தான் பிறந்தார் என்று.

அதன்பின்னர் என்ன ஆனது? மகன் எப்படி மருமகன் ஆனார்? அப்படியென்றால் அந்த குழந்தை..? ஆகிய கேள்விகளுக்கு விடையே இந்த படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

அபி கேரக்டரில் டோவினோ தாமஸும், அனு கேரக்டரில் பியாவும் காதல் ஜோடிகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.

லிப் லாக் காட்சிகளில் நிஜ காதலர்களையே மிஞ்சிவிடுவார்கள் போல. ரசிகர்களை அப்படி லாக் செய்துவிடுகிறார்கள்.

தங்கள் திருமணம் செல்லாது என்று தெரிந்த பின் இவர்கள் படும் வேதனை படத்தின் ஹைலைட். முடிவு என்னாகுமோ? என்ற பதைக்க வைக்கிறது.

காதல், கல்யாணம் எல்லாம் சட்டென்று முடிகிறதே, என்று பார்த்தால், இடைவேளைக்கு பிறகுதான் கதை சூடு பிடிக்கிறது.

இவர்களுடன் பிரபு, சுஹாசினி, ரோகினி, தீபா ஆகியோர் நடிப்பு படத்தின் தரத்தை உயர்த்தும் வகையில் உள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தரண் குமார் இசையில் பாடல்கள் ஓகே. படத்தின் அனைத்தும் காட்சிகளையும் பளிச்சென கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அகிலன். அதுவே படத்தின் ஸ்லோவான காட்சிகளை கண் சிமிட்டாமல் ரசிக்க வைக்கிறது.

சுனில் ஸ்ரீநாயரின் படத்தொகுப்பும் கச்சிதம்.

ஒரு வித்தியாசமான கதையை வித்தியாசமாக கையாண்டுள்ளார் இயக்குனர் விஜயலட்சுமி.

கணவன் மனைவி, அண்ணன் தங்கை என்பது போல காட்டி கடைசியில் க்ளைமாக்ஸில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

ஆனால் எல்லார் தரப்பிலும் க்ளைமாக்ஸை ஏற்றுக் கொள்வார்களா? என்பது மக்களுக்கே வெளிச்சம்.

அபியும் அனுவும்… வித்தியாசமான கரு

Abhiyum Anuvum movie review and rating

Comments are closed.

Related News

கடந்த சில வருடங்களாகவே வருடத்திற்கு 200க்கும்…
...Read More