ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ விமர்சனம்

ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ விமர்சனம்

படம் விவரம்.

ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ. என்று பெயரிட்டுள்ள இப்படத்தை சி. ராம்தாஸ் தமது ஸ்ரீபெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். நான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஒளிப்பதிவு செய்து டைரக்ட் செய்துள்ளார் பகவதி பாலா.

புதுமுகம் செல்வாவுடன் அனிதா ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன். நளினி, வையாபுரி, மீரா கிருஷ்ணன், கிங்காங், கொட்டாச்சி, போண்டா மணி, புரோட்டா முருகேஷ், சரோஜா பாட்டி என பலரும் நடித்துள்ளனர்.

தேவா இசையில் கபிலேஷ்வர், சுதந்திரதாஸ் பாடல்களை எழுதி உள்ளனர். ராம் நாத் படத்தொகுப்பையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், ரமேஷ் ரெட்டி நடன பயிற்சியையும், நாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.

கதைக்களம்.. நாயகன் ராகுல் மற்றும் செல்வா இருவரும் நண்பர்கள். பலரை ஏமாற்றி பணம் பறிப்பதை இவர்களின் வேலை.

ஒரு கட்டத்தில் பக்கத்து ஊருக்கு சென்று மற்றொரு நண்பன் கொட்டாச்சி உதவியுடன் போட்டோ ஸ்டூடியோ ஆரம்பிக்கின்றனர்.

அந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக இருக்கும் சுந்தர்ராஜன். இம்முறை தேர்தலில் நிற்காமல் தன் சகோதரரான வையாபுரியை நிறுத்த முயற்சிக்கிறார்.

ஒரு கட்டத்தில் வையாபுரியை தன் சூழ்ச்சியால் வென்று எம் எல் ஏ-வாகி விடுகிறார் கராத்தே ராஜா.

ஆனால் ஒரு கட்டத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். எம் எல் ஏ. அத்துடன் அந்த பிணத்தை காணவில்லை.

எம்எல்ஏவை கொலை செய்தது யார்.? பிணம் என்னாச்சு? ஹீரோ என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

நாயகன் ராகுல் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுக்க வேண்டும். ஆக்‌ஷன் காட்சியில் அசத்தல். நாயகியை வெறுக்கும் காட்சிகளில் இன்னும் முகபாவனைகள் போதவில்லை.

ரவுடி போல நாயகி அனிதா. நல்ல உடல்மொழி.. உச்சரிப்பு உள்ளது. ஆனால் சில நேரங்களில் ஓவராக தெரிகிறது. இவரும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருசில காட்சிகள் மட்டுமே வருகிறார் நளினி. வில்லனாக கராத்தே ராஜா.

வையாபுரி மற்றும் செளந்தர்ராஜன் ஆகியோரின் நடிப்பு சிறப்பு.

சில இடங்களில் காமெடி காட்சிகளை வைத்துள்ளார் இயக்குனர் பகவதி பாலா. அத்துடன் சமுதாய கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

தேவாவின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ”லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்” பாடல் ஓகே ரகம். பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே கை கொடுத்துள்ளது. ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தால் படத்தை இன்னும் ரசித்திருக்கலாம்.

இயக்குனர் பகவதி பாலாவே ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

Aal Illatha Oorla Annan Than Mla movie review and rating in Tamil

Related Articles