கோவை மாவட்ட தொழில் மையத்தில் குளறுபடி.; பூனைக்கு மணி கட்டுவது யார்.?

News about Kovai District Industries Centerகோவை மாவட்ட தொழில் மையத்தில் (District Industries Center) இதற்கு முன் பொது மேலாளராக இருந்தவர் ஓய்வு பெற்ற பிறகு, கண்ணன் என்பவர் தொழில் மையத்தில் இருந்து கோயமுத்தூர்தான் வேண்டும் என்று ஒத்த காலில் நின்று மேல் இருப்பவர்களை கவனித்து ட்ரான்ஸ்பர் வாங்கி வந்துள்ளார்.

இவர் வந்த பிறகு தொழில் மையத்தில் இவருக்கு கீழ் பணிபுரியும் பெண் உதவி பொறியாளர்கள் மற்றும் மேலாளர்களை மிகவும் கீழ்தரமாக நடத்துகிறாராம்.

இவர் “நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை, என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது” என்று திமிராக பேசி அனைவரையும் மிரட்டுகிறாராம்.

தொழில் மையத்திற்கு வரும் தொழில் முனைவோரிடத்திலும் ஏக வசனத்தில் பேசி சத்தம் போடுகிறாராம். தன்னை கவனிக்காமல் ”எப்படி மானியம் பெறுகிறீர்கள்” என்று பார்த்து விடுகிறேன் என்று சவால் விடுகிறாராம்.

இவருடைய நிர்வாக திறமையின்மையால் பணிகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் மற்றும் தொழில் முனைவோர்கள் மிகவும் கஷ்ட்டத்திற்கு உள்ளாகின்றார்களாம்.

மேலும் அவருக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியர்களில் சிலர் திருப்பூரில் இருந்து ட்ரான்ஸ்பரில் வந்தவர்களுக்கு மிகவும் உறுதுனையாகவும் மற்ற பெண் அதிகாரிகளை மிகவும் கீழ்தரமாகவும் நடத்துவதாக நம்மிடம் சில ஊழியர்கள் முறையிடுகிறார்கள்.

இதற்கு முன் இருந்த பொது மேலாளரிடம் இருந்த அனைவரையும் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் செய்து விட வேண்டும் என்று சில பல உள்ளடி வேலைகளையும் செய்து வருகிறாராம்.

இது மட்டும்மல்லாமல் வருகிற தொழில் முனைவோர்களிடம் இதற்கு முன் இருந்த தொழில் மேலாளர் அசோகன் என்பவர் மேல் பொய் புகார் அளிக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறாராம் அப்படி புகார் கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு மானியம் கிடைக்காது என்று மிரட்டுகிறாராம்.

இதையெல்லாம் பார்த்து வரும் தொழில் முனைவோர்கள் நொந்து கொண்டு செல்கின்றனர் என்று சில ஊழியர்கள் புலம்புகின்றனர்.

மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் என்ற ஊழியர் ஒருவர் சக ஊழியர்களுக்கு கம்யூட்டர் மற்றும் பிற அலுவலக ப்ரிண்டர்களை உபயோகப்படுத்த விடமாட்டேன் என்று சக பெண் ஊழியர்களை மிரட்டுகிறாராம்.

இதை பொது மேலாளரிடம் முறையிட்டால் அவர் அந்த ஊழியரை பார்த்து பயப்படுகிறாராம்.

பொது மேலாளர் ஏன் இந்த ஊழியருக்கு பயப்பட வேண்டும் என்று குழம்பி போய் உள்ளனர் மற்ற ஊழியர்கள்.

இதையெல்லாம் பொது மேலாளரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கும்படி கூறினால் “உங்கள் அனைவரையும் வேறு ஊருக்கு மாற்றல் செய்துவிட்டு என்னுடன் முன்னால் திருப்பூரில் பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கோயமுத்தூருக்கு கொண்டு வந்துவிடுவேன் என்று மிரட்டுகிறாராம்.

இதையெல்லாம் பார்த்து அவரிடம் பணிபுரியும் நேர்மையான ஊழியர்கள் தமக்கு எப்போது மாறுதல் உத்தரவு வரும் என்று புலம்பி கொண்டு உள்ளனராம்.

மேலும் “என்னை இன்னும் மூன்று வருடங்களுக்கு எதுவும் செய்ய முடியாது. நான்தான் இங்கு அரசன் நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை. commissioner முதல் minister வரை எல்லோரையும் கவனித்துதான் இங்கு வந்துள்ளேன்”என்று மார்தட்டிக் கொண்டு இருக்கிறாராம்.

பொதுமேலாளர் கண்ணன், மேலாளர் சந்திரசேகர் மற்றும் திருப்பூர் மேலாளர் திருமுருகன் ஆகிய மூவரும் கூட்டனி சேர்ந்துதான் இத்தனை அக்கிரமங்களையும் செய்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் தங்களுக்கு ஆகாத நேர்மையான ஊழியர்கள் மேல் பொய் புகார்கள் கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

News about Kovai District Industries Center

Leave a Reply

Your rate

Latest Post