தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
நிறைய ரசிகர்கள் யுவனை ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்கள்? என கேட்டனர்.
இளையராஜா மகனை மாற்றிவிட்டீர்கள்? நீங்கள் ஏன் இந்துவாக மாறியிருக்க கூடாது என பல கேள்விகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்துள்ளார் ஷாஃப்ரூன்.
எங்கள் திருமணத்திற்கு முன்னரே இஸ்லாம் மதத்தை தேர்வு செய்துவிட்டார் யுவன். அவருக்கு இஸ்லாம் பிடித்துவிட்டது.
அவர் இஸ்லாமை பின்பற்ற தொடங்கிய பின்னர் தான் எனக்கு அவரைத் தெரியும். அவருடைய தேடலுக்கான விடைகள் குரானில் கிடைத்திருக்கலாம். அதனால் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கலாம் என பதிலளித்துள்ளார்.