விஜய்சேதுபதி-சீனுராமசாமி இணையும் படத்தை தயாரிக்கும் யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை இயக்கியவர் சீனுராமசாமி.

நடிகர் ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார்.

தற்போது இந்த நடிகர், இசையமைப்பாளர், டைரக்டர் கூட்டணி மீண்டும் இணைகிறது.

விஜய்சேதுபதி நடிக்கவுள்ள படத்தை சீனுராமசாமி இயக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பியார் பிரேமா காதல் பட இசை வெளியீட்டு விழாவில் இந்த தகவலை அறிவித்தார் சீனுராமசாமி.

தற்போது உதயநிதி நடித்துள்ள கண்ணே கலைமானே படத்தை இயக்கி முடித்துள்ளார் சீனுராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

Yuvan shankar raja will produce Vijay Sethupathi and Seenuramasamy movie

ரஜினி-அனிருத் இணையும் படத்துக்கு இளம் கவிஞரின் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸ்தீன் சித்திக்கும் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை தான் எழுத உள்ளதாக பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே கபாலி, மெர்சல் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

மேலும் தற்போது உருவாகி வரும் சர்கார், சூர்யா38, சிவகார்த்திகேயன் 14 ஆகிய படங்களுக்கும் பாடல் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vivek penning lyrics for Rajinis Thalaivar 165 in Anirudh music

தனுஷ்தான் அடுத்த உலகநாயகன்…; கஸ்தூரி கண்டுபிடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ், டைரக்டர் வெற்றிமாறன் கூட்டணி என்றாலே பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும்.

இவர்கள் இணைந்த பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது வடசென்னை படம் உருவாகியுள்ளது.

‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் முதல் பாகத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு டிரெண்டிங்கானது.

இதைப் பார்த்த நடிகை கஸ்தூரி, ‘வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான்!’ என்று கூறியிருக்கிறார்.

இந்த படத்தை தயாரித்துள்ள தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருடன் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாகிறது.

லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

Dhanush is next Kamalhassan says Actress Kasthuri

Kasturi Shankar  @KasthuriShankar

வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் ! #VadaChennaiTeaser @VetriMaaran @dhanushkraja @LycaProductions @aditi1231

தந்தையின் ஆசையை நிறைவேற்ற *அரளி* எடுத்த மகன் சுப்பாராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைதான் எப்போதும் ராஜா என தமிழ் சினிமாவில் பலமுறை நிரூபணமாகி இருக்கிறது. அரளி படமும் அந்தப்பட்டியலில் இடம் பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது.

பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும் தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மையமாக கொண்டு நகர்கிறது அரளி.

சினிமாவில் எப்போதும் மகன் நடிப்பதற்கு ஆசைப்பட்டால் தந்தைதான், கடன் வாங்கியேனும் படம் தயாரிப்பார் ஆனால் இந்த அரளி பட இயக்குனர் சுப்பாராஜோ சற்று வித்தியாசமானவர் தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற தனது தந்தையை கதையின் நாயகனாக வைத்து படம் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக மதுசூதனும், நாயகியாக மஞ்சுளாவும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரின் தந்தை அண்ணாமலை மற்றும் இயக்குனர் சுப்பாராஜும் நடித்துள்ளார்.

ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு எம்.எஸ்.ஜான் மற்றும் அனில் முத்துக்குமார் இசையமைத்துள்ளார். விசாகன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

படம் பழிவாங்கும் த்ரில்லராக உருவாகி இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த ராதாரவி, எஸ்.பி.முத்துராமன், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறும்போது,

“எப்போதுமே நான் இப்படிப்பட்ட படங்களை பார்க்கும்போது பேப்பரும் பேணவும் கையில் வைத்துக்கொண்டு அதில் உள்ள குறைநிறைகளை சொல்வதற்காக அவ்வப்போது குறிப்பெடுத்துக்கொள்வேன். ஆனால் அரளி படம் பார்த்தபோது என்னால் கடைசிவரை குறிப்பெடுக்க முடியவில்லை. காரணம் படம் அவ்வளவு வேகத்தில் செல்கிறது” என்றார்.

நடிகர் நாசர் படத்தை பற்றி சிலாகித்து கூறியதாவது…

“இந்தப்படத்தின் மையக்கதை இதுவரை தமிழ்சினிமாவில் பார்த்திராத ஒன்று என சொல்லலாம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படத்தில் மைய கதாபாத்திரமாக குழந்தைகள் நல காப்பாளராக நடித்துள்ள அருணாச்சலத்தின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.

இடைவேளைக்குப்பின் கதை எப்படி போகும் என்பதை அனுமானிக்கவே முடியவில்லை” என்றார்.

நடிகர் ராதாரவி படத்தை பற்றி பாராட்டி கூறும்போது,

“திருக்குறளில் இரண்டு அடியில் விஷயத்தை சுருக்கமாக சொல்வது போல இந்தப்படத்தில் கதையை சொல்லியிருக்கிறார்கள்.

கதை நம்மை கலங்க வைக்குது…மது நன்றாக நடித்துள்ளார். வயதான கேரக்டரில் நடித்துள்ளவரின் நடிப்பை பார்த்து கண்கலங்கிட்டேன்.. என்னா நடிப்பு.? தமிழ்சினிமாவுலகை காப்பாற்றவேண்டும் என்றால் இதுமாதிரி படங்கள் வெளிவர்றதுக்கு நாம துணையா நிக்கணும்” என்கிறார்.

இயக்குனர் பாலாஜி தரணீதரன் கூறும்போது,

“அரளிங்கிற டைட்டிலுக்கு ஏற்றமாதிரி சரியான அர்த்தம் கொடுத்திருக்கிறார்கள்.. பின்னணியில் ஒரு வலுவான கதையை எடுத்துக்கொண்டு அதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்” என்றார்.

இயக்குனரும் நடிகருமான சந்தான பராதி, “இந்தப்படத்தில் ‘பிகாலே’ அதாவது ஆன் விபச்சாரம் என்கிற புது விஷயத்தை கூறியுள்ளார்கள்.. நம் கலாச்சாரத்துக்கு புதுசு என்றாலும் அமேரிக்கா போன்ற நாடுகளில் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒரு ஏழை பட்டதாரி வாலிபன் எப்படி இதில் சிக்கி மீள்கிறான் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறார்க” என பாராட்டியுள்ளார்.

நடிகர் கரிகாலன் கூறும்போது, “மகனுக்காக படம் எடுக்க சினிமாவுக்குள் வரும் அப்பாக்களை பார்த்திருக்கிறோம்.. ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் சுப்பாராஜ், தனது தந்தைக்காக படம் எடுக்கவந்து, அவரையே மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார் என்பது தமிழ்சினிமாவுக்கு புதிய முயற்சி” என்றார்.

நடிகர் அழகு கூறும்போது,
“பொது ஒரு படத்தை பார்க்கும்போது க்ளைமாக்ஸ் நெருங்குபோதுதான் விறுவிறுப்பு கூடும்.

ஆனா இந்தப்படத்தில் இடைவேளையில் இருந்தே நம்மளை அப்படியே தூக்கிட்டு போகுது” என பாராட்டியுள்ளார்.

ARALI  An unconventional film that wins phenomenal acclaims from celebrities 

 

 

https://www.youtube.com/watch?v=evGta4lDBt8&feature=youtu.be

https://www.youtube.com/watch?v=5X8KxNnt5fA&feature=youtu.be

அக்‌ஷய்குமார் படத்துடன் ரஜினியின் 2.0 பட டீசரை வெளியிட திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ஷங்கர் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள 3டி படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வருகிற நவம்பர் 29ஆம் தேதி இப்பட வெளியாகவுள்ளது.

இதன் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் லீக்கானது.

எனவே புதிய டீசரை உருவாக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டனர்.

இந்நிலையில், அடுத்த மாதம் ஆகஸ்ட் 15-ந்தேதி 2.0 படத்தின் டீசர் வெளியிட இருக்கிறார்களாம்.

அதே நாளில்தான் அக்சய்குமார் நடித்துள்ள கோல்டு (ஹிந்திப்படமும்) ரிலீஸாகிறது.

எனவே கோல்டு படத்துடன் 2.0 ஹிந்தி டீசரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

2 Point 0 teaser release on 15th August along with Gold movie

மீண்டும் காமெடி நாயகன்களுக்கு ஜோடியாகும் திஷா பாண்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா நடித்த தமிழ்ப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திஷா பாண்டே.

அதன்பின்னர் மயங்கினேன் தயங்கினேன், கீரிப்புள்ள சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

அண்மையில் வெளியான தமிழ்ப்படம் 2வில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.

இப்போது காமெடி ஹீரோ லொள்ளுசபா ஜீவாவுடன் கொம்பு படத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, காயத்ரி, அஷ்மிதா உள்பட பலர் நடிக்கிறார்கள். தேவ்குரு இசை அமைக்கிறார், சுதீப் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்ராஹிம் இயக்குகிறார் ஸ்ரீசாய் ஸ்ரீனிவாசா நிறுவனத்தின் சார்பில் எம்.பன்னீர் செல்வம், பி.வானதி தயாரிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் இப்ராஹிம் கூறியதாவது:

இது ஒரு காமெடி திகில் படம். வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹீரோவுக்கான தகுதி அனைத்தும் உடையவர் ஜீவா. அவரை சரியாக இதில் பயன்படுத்தியிருக்கிறோம்.

திஷா பாண்டே அழகும், திறமையும் இருந்தும் அதை பயன்படுத்த வாய்ப்பு அமையவில்லை. அதை இந்த கொம்பு படத்தில் அமைத்து கொடுத்திருக்கிறோம்” என்றார்.

Disha Pandey to romance with Jeeva in Kombu

More Articles
Follows