மாரி 2 இசையமைப்பாளர் தகவல்; அனிருத் ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கவுள்ள படம் மாரி2.

இப்படத்தில் சாய்பல்லவி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் நாயகி, செகண்ட் ஹீரோ மற்றும் வில்லன் குறித்த அறிவிப்பு வெளியானாலும் படத்தின் இசையைமப்பாளர் யார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

ஆனால் இதில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அனிருத் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ படத்துக்கு இசையமைத்திருந்த யுவன், ஒன்பது வருடங்களுக்குப் பிறகு இணைகிறார்.

இதுகுறித்த அதிகாரபூர்வமாக செய்தி தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Yuvan shankar raja may compose music for Maari 2

எந்த ஹாலிவுட் படத்திற்கும் 2.ஓ குறைவானது அல்ல.. ரஜினி உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0.

லைகா நிறுவனம் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம் குறித்து ரஜினிகாந்த் இதன் மேக்கிங்கில் கூறியுள்ளதாவது…

டைரக்டர் ஷங்கர் என்னை வசீகரித்துவிட்டார்.

3டி ஷாட்டுகளை கண்டு வியக்கிறேன். எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

எந்தவொரு பெரிய ஹாலிவுட் படத்திற்கும் 2.0 படம் குறைவானது அல்ல.

ரசிகர்களை ரியாக்சனை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

Rajini praises Shankar direction of 2point0

கார்த்திக்கும் அவரது மகனும் நடிக்கும் படத்தில் இணைந்தார் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அப்பா கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்திக் ஆகியோர் முதன்முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை திரு என்பவர் இயக்க, கார்த்தியும் கௌதமும் அப்பா & மகனாகவே நடிக்கிறார்களாம்.

கௌதமுக்கு ஜோடியாக நடிக்க ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

தற்போது இன்னொரு ஹீரோயினியாக சரத்குமார் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம்.

Varalakshmi teams up with Karthik and his son Gautam

விஷால் அறிவிப்பால் லாபம் அடைந்த கருப்பன்; விஜய்சேதுபதி ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேனிகுண்டா படத்தை தொடர்ந்து பன்னீர் செல்வம் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் கருப்பன்.

இதில் விஜய்சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடிக்க, இமான் இசையமைத்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இப்படம் வெளியானது.

இந்நிலையில் தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து புதிய படங்கள் அக்டோபர் 6 முதல் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

எனவே 8 படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருந்தும் வெளியாகவில்லை.

எனவே முன்பு ஓடிக்கொண்டிருந்த படங்களையே தியேட்டர்களில் திரையிட்டு வருகின்றனர்.

இதனால் புதிய படங்களுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தியேட்டர்களிலும் ‘கருப்பன்’ படத்தை திரையிட்டு வருகின்றனர்.

இதனால் கருப்பனுக்கு கூடுதலாக 100 தியேட்டர்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விஜய்சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருகிறார்களாம்.

Since new movies not released Karuppan screens increased

ஸ்கெட்ச் படத்தில் விக்ரமின் வில்லன் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலு படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தை இயக்கி வருகிறார் விஜய்சந்தர்.

இதில் விக்ரம் உடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்க, தமன் இசையமைத்துள்ளார்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார்.

இதன் டீசரை தீபாவளி தினத்தன்று அக்டோபர் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் யார்? என்ற கேள்வி பல நாட்களாக ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இப்படத்தின் கதைக்களம் வடசென்னை என்பதால், நிறைய பேர் ஹீரோவுக்கு எதிரியாக இருப்பார்களாம்.

எனவே இதில் வில்லன்கள் உள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன.

Who is the baddie of Vikram in Sketch movie

பஜனை கூட்டணியின் அடுத்த பூஜை… இருட்டு அறையில் முரட்டு குத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த ஹரஹர மஹாதேவகி படம் அண்மையில் வெளியானது.

அடல்ட் காமெடி படமாக உருவான இந்த பஜனை படம் இளைஞர்களை கவர்ந்தது.

இப்படம் வெளியாகும் முன்னரே தங்களின் அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி அக்டோபர் 7ஆம் தேதி இதன் பூஜை போடப்பட்டது.

அதன் விவரம் வருமாறு….

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சந்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார்.

பிரசன்னா G K படத் தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது,‘ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்.’ என்றார்.

இதன் டைட்டில் லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் காண்டம் மற்றும் பிரா உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Iruttu Araiyil Murattu Kuthu movie Pooja and First look updates

More Articles
Follows