பிரபல யூடியுபர் நடிகர் VJ ரவி காதல் திருமணம்.; மணப்பெண் யார்.?

பிரபல யூடியுபர் நடிகர் VJ ரவி காதல் திருமணம்.; மணப்பெண் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல யூடியுபர் நடிகர் VJ ரவிக்குமார் காதல் திருமணம்.; மணப்பெண் யார்.?

யூடியுப் சேனல்களில் பிரபலமானவர் விஜே ரவிக்குமார். இவரது நடிப்பில் உருவான வெப் சீரியல்கள் டியூப் லைட் மற்றும் செக்மேட் என்ற சேனல்களில் வெளியானது..

இவரது நடிப்பில் உருவான நிறைமாத நிலவே மற்றும் காதலே காதலே உள்ளிட்ட தொடர்கள் இணையதள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

தற்போது ‘மன்னிப்பாயா’ மற்றும் ‘நிரா’ வலைத்தொடர்களில் ரவி நடித்து வருகிறார்.

இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லட்சக்கணக்கான பாலோயர்கள் உள்ளனர். இவருக்கென ரசிகை கூட்டமும் உள்ளது.

இதில் செக்மேட் என்ற யூடியுப்பில் ஒளிபரப்பாகி வரும் நிரா என்ற வெப்சீரியலை ரவி இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். இதில் திரைப்பட நடிகை வெண்பா ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார் வி ஜே ரவி.

புதுமுக இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன் இயக்கி வரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ரவி.. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

மேலும் விக்ரம் பிரபு நடித்து வரும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ரவி.

இந்த நிலையில் வருகிற ஜூன் பத்தாம் தேதி சென்னை போரூரில் இவரது திருமணம் நடைபெற உள்ளது.

சுபஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்த இவர் பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடிக்க உள்ளார். இது தொடர்பான வீடியோவை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Youtuber Actor VJ Ravi marriage news

புது படம் ‘பித்தல மாத்தி’ ரிலீஸ்..; மகிழ்ச்சியில் புது மாப்ள உமாபதி ராமையா

புது படம் ‘பித்தல மாத்தி’ ரிலீஸ்..; மகிழ்ச்சியில் புது மாப்ள உமாபதி ராமையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புது படம் ‘பித்தல மாத்தி’ ரிலீஸ்..; மகிழ்ச்சியில் புது மாப்ள உமாபதி ராமையா

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜூன் மாதம் 11ம் தேதி திரு உமாபதி ராமையா வின் திருமணம் நடைபெற உள்ளது. இதே மாதம் 14ம் தேதி வெளியாகும் இந்த பித்தளை மாத்தி திரைப்படம் வெற்றி பெற்று அவர் மென்மேலும் உயர வாழ்த்துகிறோம் .

Umapathys PithalaMathi releasing on 14th June 2024

ரொமான்டிக் சித்தார்த்தை ‘மிஸ் யூ.’ சொன்னீங்களா.? இனிமே சொல்ல மாட்டீங்க

ரொமான்டிக் சித்தார்த்தை ‘மிஸ் யூ.’ சொன்னீங்களா.? இனிமே சொல்ல மாட்டீங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரொமான்டிக் சித்தார்த்தை ‘மிஸ் யூ.’ சொன்னீங்களா.? இனிமே சொல்ல மாட்டீங்க

*மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”.

பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் நிறுவனம் ‘7 MILES PER SECOND’.
இந்த நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ முதன் முதலாக பட தயாரிப்பில் இறங்குகிறார்.

இவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு “மிஸ் யூ” என்று பெயர் வைத்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக சித்தார்த் நடிக்கிறார். ‘சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையும், புதுமையான திரைக்கதையும் அமைந்ததால் இந்த காதல் கதையை ‘மிஸ்’ பண்ணாமல் நடிக்க ஒத்து கொண்டுள்ளார் சித்தார்த்.

இதில், தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்கிறார்.

‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N.ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்கு படமாக உருவாக்கியுள்ளார் டைரக்டர் .

ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், நகைச்சுவை மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படத்தைக் கலகலப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குனர்.

ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பின்னணி இசைக்கு பேர் போன ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காக சிறப்பாக மெனக்கெட்டு 8 பாடல்களை வழங்கியுள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த KG.வெங்கடேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குனரோடு திரைக்கதை அமைத்துள்ளார்.

இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரும் காதலித்து ரசித்து பார்த்த ‘பழைய’ சித்தார்த்தைப் பார்க்கலாம்.

பாடல்கள்: மோகன் ராஜன் & ரோகேஷ்
கலை: சிவசங்கர்
சண்டைப் பயிற்சி: தினேஷ் காசி

Siddharth and Aashika starring Miss You movie

INDIAN2 EVENT அப்பா பாட்டுக்கு ஆட்டம்.. ஆரத்தழுவிய கமல்.. நெகிழ்ந்த ஸ்ருதி

INDIAN2 EVENT அப்பா பாட்டுக்கு ஆட்டம்.. ஆரத்தழுவிய கமல்.. நெகிழ்ந்த ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

INDIAN2 EVENT அப்பா பாட்டுக்கு ஆட்டம்.. ஆரத்தழுவிய கமல்.. நெகிழ்ந்த ஸ்ருதி

*இசை வழியே என் தந்தையுடன் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி – உருக்கமாக பகிர்ந்த ஸ்ருதிஹாசன்

இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார்.

ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது.

இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்..

” என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வெற்றிப்பாடல்களில் சிலவற்றை திறம்பட ஒன்றிணைத்து, தொகுத்து, ஒரு அற்புதமான மெலடியாக தயாரித்து வழங்கியதற்கு பெரு உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அன்பும், ஆதரவும், தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்” என்றார்.

இந்நிகழ்வில் மேடையில் ஸ்ருதிஹாசனுடன் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோரும் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றினர்.

‘இந்தியன் 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் இந்த ஆண்டில் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பில், ஸ்ருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஆத்வி ஷேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான டகோயிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பல அற்புதமான திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது உருவாக்கத்தில் சமீபத்தில் வெளியான சுயாதீன இசை ஆல்பம் “இனிமேல்” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Always glad when dad and me connect through music says Shruthi

நாம் செய்த தவறு விடாமல் துரத்தும்..; வித்தியாசமான கதையில் விதார்த் – ஜனனி

நாம் செய்த தவறு விடாமல் துரத்தும்..; வித்தியாசமான கதையில் விதார்த் – ஜனனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் செய்த தவறு விடாமல் துரத்தும்..; வித்தியாசமான கதையில் விதார்த் – ஜனனி

ஹைபர் லிங்க் கதையில் நடிக்கும் விதார்த் – ஜனனி.. மூன்று கதை ஒரு முடிவு… விதார்த், ஜனனி நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமாவில் பல வெற்றி பெற்ற படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை செய்து வந்த குவியம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தற்போது குவியம் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பில் இறங்கியுள்ளது. 

குவியம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் லால்குடி எம்.ஹரிஹரன் தயாரிக்கும் புதிய படத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த புதிய படத்தில் விதார்த், ஜனனி, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுத லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார். கோவிந்த்.நா படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி கிருஷ்ணா குமார் இயக்குகிறார்.

இப்படம் குறித்து கிருஷ்ணா குமார் கூறும்போது..

நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. எதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன்.

இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம். சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகளாக திரைக்கதை நகர்ந்து ஒரே புள்ளியில் கதை முடியும். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் தொடர்ந்து நடத்த இருக்கிறோம் என்றார்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

நடிகர்கள்:

விதார்த்
எம்.எஸ்.பாஸ்கர்
ஜனனி
சரவணன்
பப்லு பிரித்விராஜ்
நமிதா கிருஷ்ணமூர்த்தி
ஷாரிக் ஹாசன்
விகாஸ்
மகா

தொழில்நுட்ப கலைஞர்கள்:

எழுத்து – இயக்கம் : கிருஷ்ணா குமார்
ஒளிப்பதிவு : பிரபு ராகவ்
இசை : லால்குடி எம்.ஹரிஹரன்
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா
எடிட்டர்: கோவிந்த்.நா
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சரண்யா ரவிச்சந்திரன்
ஆடை வடிவமைப்பாளர்: லேகா மோகன்
தயாரிப்பு: குவியம் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்: லால்குடி எம் ஹரிஹரன்
மக்கள் தொடர்பு : சதீஷ்வரன்

Vidharth and Janani unite for Hyperlink Story

வெள்ளிவிழா நாயகனுடன் ஒன்று.. வெண்பாவுடன் ஒன்று..; சந்தோஷத்தில் சந்தோஷ்

வெள்ளிவிழா நாயகனுடன் ஒன்று.. வெண்பாவுடன் ஒன்று..; சந்தோஷத்தில் சந்தோஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகனுடன் 1.. வெண்பாவுடன் 1.. இரட்டிப்பு சந்தோஷத்தில் சந்தோஷ் பிரபாகர்

”வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் பத்திரிகையாளர் மகன்..

நாம் காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு.

திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர் நேபோட்டிசம் அடிப்படையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி தோல்வி கண்டு காணாமல் போகும் காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கல்லூரி படிப்பை முடித்து ஒருவன் சினிமாவை அடைகிறான் என்றால் அவனுக்கு இந்த சினிமா ஏதோ ஒரு இடத்தை வழங்க காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.

அதிலும் முதல் படத்திலேயே வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் படமான “ஹரா” படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம். அதோடு திரை பிரபலங்கள் மைம்கோபி, சுரேஷ்கோபி, அனுமோல், மொட்ட ராஜேந்திரன், வனிதாவிஜயகுமார், அனித்ரா, கவுஷிக் என ஏராளமான நட்சத்திரங்களுடன் சந்தோஷ் பிரபாகர் நடித்திருக்கிறார்.

இவர் பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான கோடங்கி ஆபிரகாம் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விமர்சகர், பிரபல பத்திரிகையாளர் மகன் என்பதால் சிபாரிசு அடிப்படையில் வாய்ப்பு கிடைத்திருக்கும் என நினைத்தால் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள்…

பின் எப்படி “ஹரா” பட வாய்ப்பு கிடைத்த்து என அறிமுக நடிகர் சந்தோஷ் பிரபகரிடம் பேசினோம், “வணக்கம். அப்பா திரையுலகில் செய்தியாளராக இருந்தாலும் சிபாரிசு செய்வதை விரும்ப மாட்டார்.

“ஹரா” பட இயக்குனர் விஜய்ஸ்ரீஜி அவர்கள் அலுவலகத்திற்கு ஆடீஷனுக்கு போய் சின்ன ரோலில் நடிக்க தேர்வானேன். எனக்கு “ஹரா” முதல் படமல்ல… நான் நடிக்கத் தேர்வானது இதே இயக்குனர் விஜய்ஸ்ரீஜியின் ”பப்ஜி” படத்திற்காக. அதில் மிகச்சிறிய வேடம்.

அதில் எனது நடிப்பை பார்த்து அதன் பின்னர்தான் “ஹரா” வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன் மோகன் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.

இதற்கு காரணமான இயக்குனர் விஜய்ஸ்ரீஜி அவர்களுக்கு நன்றி.
ஹரா படம் சொல்லவேண்டிய கதை. இயக்குனர் விஜய்ஸ்ரீஜி மிக அழகாக எங்களை பயன் படுத்தி இருக்கிறார்.

இதோடு பெயரிடப்படாத இன்னொரு படத்தில் கதையின் நாய்கனாக நடித்து வருகிறேன். பொள்ளாச்சியில் முதற்க்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அந்தப்படத்தை இயக்கி வருபவர் திரையுலகில் எல்லாருக்கும் அறிமுகமானவர்தான் என்றாலும் அவரின் அறிமுக படம் என்பதால் படத்தின் பெயரும், இயக்குனர் பெயரும் இப்போதைக்கு வேண்டாமே… என்றார் சிரித்துக் கொண்டே…

சரி சந்தோஷ் அந்த பெயரிடப்படாத படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள்? என அடுத்த கேள்விக்கு போனோம்..

“பொன்வண்ணன் சார், மைம் கோபி சார், சத்யா அண்ணன் ஆகியோருடன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வெண்பா எனக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இன்ஸ்டா பிரபலம் அஞ்சனா என் தங்கையாக நடித்து இருக்கிறார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பில் இன்னும் பல பிரபலங்கள் இணைய உள்ளனர். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும், கேட்கும் ஒரு சம்பவம்தான் இந்த படம்” என்றார்.

Santhosh Prabakar in Haraa movie updates

More Articles
Follows