என் இசையால் உயிர் கொடுப்பேன் – இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி

என் இசையால் உயிர் கொடுப்பேன் – இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manoj Chinnaswamyஒரே வாரத்தில் ஒரு மில்லியனை கடந்த இசை ஆல்பம் – பாராட்டு மழையில் இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி

இசை ஆல்பம் மூலம் கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த இளம் இசையமைப்பாளர்

தமிழகத்தில் இசை ஆல்பங்கள் மீண்டும் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில், ‘ஹார்ட் பிரேக்கர்’ என்ற இசை ஆல்பம்
இளைஞர்களின் சமீபத்திய பேவரைட் ஆல்பமாக வரவேற்பை பெற்றுள்ளது. இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி
இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை நிறுவனமான திங்க் மியூசிக் தயாரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான ‘ஹார்ட் பிரேக்கர்’ குறுகிய நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பது
இசை உலகையே வியப்பில் ஆழ்த்தியிருப்பதோடு, இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமியின் மீது கோலிவுட்டின் பார்வையையும் பட
வைத்துள்ளது.

கோயமுத்தூரை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த மனோஜ் சின்னசாமி, ஆரம்பத்தில் இசை ரசிகராக இருந்தாலும், தனக்கு
இருக்கும் இசை ஆர்வத்தினால், வெறும் ரசிகராக மட்டும் இன்றி இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஐடி
துறையில் இருந்து இசைத்துறைக்கு வந்திருக்கிறார்.

ஏதோ, பாடல்கள் கேட்டும், இசையமைத்தோம், என்று இல்லாமல் முறைப்படி சங்கீதம் படித்தவர், சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான்
இசைப் பள்ளியில் முறைப்படி இசையை படித்து பட்டம் பெற்றார். பிறகு பல்வேறு விளம்பர படங்களுக்கு இசையமைத்ததோடு, ‘முத்தழகி’ உள்ளிட்ட இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

மனோஜ் சின்னசாமியின் இசை ஆல்பங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை கவனித்த திங்க் மியூசிக் நிறுவனம் அவருக்கு
வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அதன் மூலம் திங்க் மியூசிக் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘ஹார்ட் பிரேக்கர்’ இசை ஆல்பத்திற்கு
மனோஜ் சின்னசாமி இசையமைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் ஆகியோரது வரிசையில், சிறப்பான மெட்டுக்களோடு, இசையில் பல்வேறு வித்தியாசங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கும் மனோஜ் சின்னசாமி, மெலோடி பாடல்களை வெஸ்ட்டன் டைப்பில் கொடுப்பதில் வல்லவராக உள்ளார். அவரது இந்த தனித்துவம் தான் தற்போது அவர் மீது கோலிவுட் பார்வையை பட வைத்துள்ளது.

இசைத்துறையில் நிச்சயம் சாதித்து காட்ட வேண்டும், என்ற நம்பிக்கையோடு வலம் வரும் மனோஜ் சின்னசாமி, பாட்டுக்கு மெட்டு
அல்லது மெட்டுக்கு பாட்டு, என்று எந்த முறையிலும் பணியாற்றக் கூடிய திறமை படைத்தவராக இருப்பதோடு, ஒரு திரைப்படத்தை
முழுவதுமாக எடுத்துவிட்டு, பிறகு அதற்கு இசையமைக்க வேண்டும் என்றால் கூட, தனது இசை மூலம் அதற்கு உயிர் கொடுக்கும்
திறமை படைத்தவராக திகழ்கிறார்.

தற்போது அவரது ஹார்ட் பிரேக்கர் இசை ஆல்பத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்ட பல ஜாம்பவான்களிடம்
பாராட்டு பெற்று வரும் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி, விரைவில் கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி
பாராட்டு பெறப் போவது உறுதி.

Young Music Director Manoj Chinnaswamy – Enlivening souls through music

வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே..; ரஜினியை சீண்டும் விஜய் ரசிகர்கள்.?

வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே..; ரஜினியை சீண்டும் விஜய் ரசிகர்கள்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijayஓரிரு தினங்களுக்கு முன் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட அழைக்கும் வகையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த போஸ்டரில்.. தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா புகைப்படங்களுடன் விஜய்யின் படமும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் தமிழக சட்டமன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது-

அதில்.. இருபெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வரும், இளம் தலைவரே… நாளைய தமிழக முதல்வரே, 2021 உங்கள் தலைமையில் அமையட்டும், தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்… என்ற வாசகங்கள் இடம் பிடித்துள்ளன.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகள் தற்போது உயிருடன் இல்லை. அதனால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப வருவதாக ரஜினிகாந்த பேசியிருந்தார்.

விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர் ரஜினியை வம்பிழுக்காத நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Vijay fans stick political posters in trichy

திரு டி.ராஜேந்தர் அணியின் சார்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளவர்கள் பட்டியல்

திரு டி.ராஜேந்தர் அணியின் சார்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளவர்கள் பட்டியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

t rajendarதயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு டி.ராஜேந்தர் அவர்கள் வேட்புமனு பரிசிலனை கூட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், “இன்று காலை என்னுடன் சேர்ந்து என் அணி குழுவினரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். எங்களது வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தேர்வான முக்கிய பொருப்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.

அதன் படி

தலைவர் – டி.ராஜேந்தர்
செயலாளர் – டி. மன்னன் (மன்னன் பிலிம்ஸ்)
செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்)

பொருளாளர் – ராஜன்

துணைத்தலைவர் – முருகன்
துணைத்தலைவர் – P.T. செல்வகுமார்

ஆகியோரின் மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

செயற்குழு உறுப்பினர்கள் விவரம் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்த பின் அறிவிக்கப்படும். அணியின் பெயரும் அதோடு சேர்ந்து அறிவிக்கப்படும்” என்றார்.

TR and team nominated for TFFC election

டேய் மண்டையா.. நான் உசுரோடுதான் இருக்கேன்.. – கவுண்டமணி

டேய் மண்டையா.. நான் உசுரோடுதான் இருக்கேன்.. – கவுண்டமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

goundamaniதமிழ் சினிமாவின் எத்தனையோ காமெடி நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி.

இவரின் காமெடி ஜோடி செந்திலை இவர் அவ்வப்போது மண்டையா.. கோமுட்டி தலையா என திட்டுவது வழக்கம்.

1980 மற்றும் 90களில் கவுண்டரின் காமெடியை மிஞ்ச நடிகர்களே இல்லை எனலாம். எனவே ஹீரோவுக்கு இணையாக இவரது வேடங்கள் திரைப்படங்களில் அமைந்தன.

அண்மையில் இவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது.

இதனையடுத்து அவரது பாணியில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வாட்சப் வந்தாலும் வந்தது அதில் வதந்திகளை ஏற்படுத்துவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அவர் வீட்டில் நலமாக இருப்பதாகவும் விரைவில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ACTOR GOUNDAMANI’S HEALTH RUMOURS DISPELLED; OFFICIAL STATEMENT HERE

வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்

வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jeyakumarஅதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் ஜெயக்குமார்.

அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். அவர்களை மக்கள் அணுகி தங்கள் குறைகளை சொல்வது என்பது சற்று சிரமமான விஷயம்.

ஆனால் அந்த வகையில் எப்போதுமே தனக்கென ஒரு தனி பாணியில் வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார்.

செல்லும் வழியில் விலங்குகளை கண்டால் அவற்றுக்கு உணவு கொடுப்பது, சாலையில் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் கச்சேரிகள் நடந்தால் மேடையில் அவரே பாடுவது, நடனமாடுவது, இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடுவது, ஆழ்கடலில் படகில் பயணித்து கடல் சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்வது,எப்போதும் எந்த நேரத்திலும் மக்கள் குறை கேட்பது, ஏழ்மையில் இருக்கும் யாரேனும் குறித்து செய்தி தெரிந்தால் அவர்களுக்கு உடனே உதவுவது என்று ஒரு வித்தியாசமான மனிதராகவே வாழ்ந்து வருகிறார்.

நேற்று தனது ராயபுரம் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜெயக்குமார் சென்றிருந்தார்.

காரிலிருந்து இறங்கி வீதியில் நடந்து செல்லும் போது சிறுவர்கள் சிலர் கேரம்போர்டு ஆடுவதை பார்த்தார். ஏற்கனவே கேரம் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அமைச்சர் உடனே சிறுவர்களோடு சென்று அவர்களுக்கு இணையாக அமர்ந்து கொண்டு கேரம் விளையாடத் தொடங்கினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கேரம் ஆடியதால் அவரால் எளிதாக காயினை போட முடியவில்லை.

ஐந்தாவது முயற்சியில் நாணயத்தை கேரம் பாக்கெட்டில் போட்டார். இதைப்பார்த்த சிறுவர்கள் அமைச்சர் தங்களோடு விளையாடியதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போது அவர்களைப் பார்த்து மூன்று நான்கு முறை முயற்சி செய்தும் என்னால் காயினை போடமுடியவில்லை, ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

இதே போல நீங்களும் எந்த விஷயத்திலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் சிறுவர்கள் அமைச்சரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர்.

புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சிறுவர்களிடம் கைகுலுக்கி அங்கிருந்து விடைபெற்றார் அவர். எந்த நேரத்திலும் மக்களோடு மக்களாகவே பயணிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

Minister Jeyakumar played carrom with children in Royapuram

தயாரிப்பாளரானார் நடிகை மம்தா மோகன்தாஸ்

தயாரிப்பாளரானார் நடிகை மம்தா மோகன்தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mamta mohandasவிஷால் நடித்த சிவப்பதிகாரம் மற்றும் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மம்தா மோகன்தாஸ்.

இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த மணவாழ்க்கை கசந்துவிடவே விவாகரத்து பெற்று பிரிந்தார்.

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளராக மாறவுள்ளார் மம்தா மோகன்தாஸ்.

மம்தா மோகன்தாஸ் புரடக்சன் என்ற பெயரில் படங்களை தயாரிக்கவுள்ளார்.

தனது நண்பரான நோயல் பென் என்பவருடன் இணைந்து இந்த தயாரிப்பில் இறங்கியுள்ளார் இந்த சிவப்பதிகார நடிகை.

Actress Mamta Mohandas turns producer

More Articles
Follows