தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா காலத்தில் ரீல் ஹீரோக்கள் எல்லாம் வீட்டுக்குள் ஒளிந்திருக்க ரியல் ஹீரோவானார் நடிகர் சோனு சூட்.
தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு செய்த உதவிகளை கணக்கிட முடியாது.
இந்த நிலையில் தினேஷ் மணிகண்டா என்கிற 20 வயது இளைஞர் ஒருவர், தனது இடதுகாலை இழந்துவிட்டதால் செயற்கை கால் பொருத்த சோனு சூட் அவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
இதற்கு மருத்துவர்கள் ரூ. 7 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளதாகவிம் கூறியுள்ளார்.
இதனையறிந்த சோனு சூட், “கவலைப்படாதே.. உனக்கு புதிய கால் கிடைத்துவிடும்.. உன் பெற்றோரிடம் சொல்லிவிடு” என கால் இழந்த அந்த வாலிபருக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளார்.
You are getting a new leg Sonu sood help needy people