ப்ரெண்ட் இறந்தது கூட தெரியாது..; யாஷிகா எப்படி இருக்கிறார்.?; தாயார் கண்ணீர் மல்க பேட்டி

ப்ரெண்ட் இறந்தது கூட தெரியாது..; யாஷிகா எப்படி இருக்கிறார்.?; தாயார் கண்ணீர் மல்க பேட்டி

ஓரிரு தினங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் தன் நண்பர்களுடன் கார் ஓட்டி வந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

அப்போது நிலை தடுமாறி அவரது கார் விபத்துக்குள்ளானது.

யாஷிகா ஆனந்த் மற்றும் சில இரு நண்பர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து யாஷிகா மிக வேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாலும் ஒரு மரணத்துக்கு இவரே காரணமானதாலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இத்துடன் யாஷிகா டிரைவிங் லைசென்சையும் ரத்து செய்தனர்.

இந்த நிலையில் யாஷிகாவின் தாயார் சோனல் ஆனந்த் இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில்..

“யாஷிகாவின் தோழி இறந்த செய்தி அவருக்கு இதுவரை தெரியாது. மரணம் குறித்து தெரிவிக்க வேண்டாம் என் மருத்துவர்கள் கூறி விட்டனர்.

யாஷிகா ஆனந்தின் கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம். எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

அவருக்கு நடக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 மாதங்களுக்கு பிறகுதான் நடக்க முடியும்.” என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்தார்.

Yashika Anand’s Mother Speaks About her Health Condition

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *