எக்ஸ் வீடியோஸ் பட லாபத்தில் மாணவர்களுக்கு இலவச டாய்லெட்

எக்ஸ் வீடியோஸ் பட லாபத்தில் மாணவர்களுக்கு இலவச டாய்லெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Film X Videos press meet photos (9)கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ்’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சஜோசுந்தர் பேசும் போது….

” நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன்.

தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன்.

ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும்.

அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. என் நண்பர் ஒருவர் எனக்கு, தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை அவர் அனுப்பிய வீடியோவைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் அந்தரங்க வீடியோ.

இப்படி சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிற வீடியோக்கள் உலகம் முழுக்க செல்கின்றன.

இதைத் தமிழிலும் இந்தியிலும் எடுத்திருக்கிறோம். சென்சாரில் ரிவைசிங் கமிட்டி போனபோது கமிட்டியில் இருந்த பிரபல இந்தி இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி படம் பார்த்து விட்டு துணிச்சலான முயற்சி, சமுதாயத்துக்குத் தேவையான படம் என்று பாராட்டினார்.

எல்லாரும் சொல்கிறார்கள் வணிகப் படம் எடுத்து ஏன் சம்பாதிக்கக் கூடாது என்று. இன்று எத்தனை பேர் படமெடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.?

நான் சமீபத்தில் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். அரசுப் பள்ளிகளில் போதிய கழிவறை இல்லாமல் பெண் பிள்ளைகள் சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கிக் கொண்டு விடுகிறார்கள் என்று.

இது எவ்வளவு பெரிய கொடுமை . நான் இப்போது மனப்பூர்வமாகச் சொல்கிறேன் இந்தப் படத்தில் எனக்கு லாபம் வந்தால் அதில் பெரும் பகுதியை அரசுப் பள்ளிகளுக்குக் கழிப்பறை கட்டப் பயன்படுத்துவேன் ” இவ்வாறு இயக்குநர் பேசினார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பு வடிவமைப்பாளர் அக்ஷயா பேசும் போது,

” நான் நடிப்பிலிருந்து தயாரிப்புத் துறைக்கு வந்தவள். இது ஆண்கள் நிறைய பேர் பணியாற்றிய படக் குழு . சுற்றிலும் ஆண்கள் நடுவில் நான் மட்டும் பெண் என்று பணியாற்றினாலும் எனக்கு எந்த அசெளகரியமும் ஏற்படவில்லை. முழு சுதந்திரம் இருந்தது.” என்றார்.

நாயகன் அபிநவ் பேசும்போது,
“என்னை நடிக்கத் தேர்வு செய்யும் முன் இயக்குநர் கண்டிப்பாக இருந்தார். நடிக்கத் தொடங்கிய பின் சுதந்திரமாக இயங்க முடிந்தது. இந்தப் படம் சமுதாயத்துக்கு அவசியமான படம்” என்றார்.

நடிகர் அஜய்ராஜ் பேசும் போது,

“நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்து இப்போது சென்னையில் செட்டிலாகியிருக்கிறேன். உத்தம வில்லன், பொறியாளன், தாயம் படங்களைத் தொடர்ந்து இது எனக்கு ஐந்தாவது படம்.

அடிப்படையில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். சமூகக் குற்றம் பற்றி துணிச்சலாக இப்படம் சொல்கிறது. ” என்றார்.

கலை இயக்குநர் கதிர் பேசும் போது,

“சஜோ எனக்கு 15 ஆண்டுகால நண்பர். எதையும் துல்லியமாகப் பார்ப்பவர். இந்தக் கதையை என்னிடம் கூறிய போது நன்றாக இருந்தது.

ஆனால் பயமாக இருந்தது. அவருக்காக படத்தில் நான் பணியாற்றினேன். இருந்தாலும் படத்தைக் காட்டிய பின் தான் என் பெயரைப் போட வேண்டும் என்றேன்.

அவ்வளவு பயமுறுத்தியது கதை. ஆனால் படம் பார்த்த பின் சமாதானமானேன். நாகரீகமாகவே எடுத்திருக்கிறார்.” என்றார்.

X Videos movie plans to built Free toilet for Students in movie profit

x videos press meet

 

மெர்சலுக்கு தடை விதிக்க முடியாது என கோர்ட் திட்டவட்டம்

மெர்சலுக்கு தடை விதிக்க முடியாது என கோர்ட் திட்டவட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal stillsவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு டிரேட் மார்க் (வர்த்தக்குறி) பெறப்பட்டதை அடுத்து, இந்த தலைப்பை யாரும பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் தன் படத்திற்கு ‘மெர்சலாயிட்டேன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும், அவர்களின் டிரேட் மார்க் அறிவிப்பால் தன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதனால் அக்டோபர் 6-ஆம் தேதி வரை ‘மெர்சல்’ தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

இதன்பின்னர் ‘மெர்சல்’ படத்தின் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனால் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தார் ராஜேந்திரன்.

தற்போது அந்த வழக்கையும் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

எனவே மெர்சல் படத்திற்கு இருந்த எல்லா தடைகளும் முற்றிலும் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கட்சி ஆரம்பித்தால் வேலைக்கு ஆகுமா; ரகசிய சர்வே எடுக்கும் ரஜினி..?

கட்சி ஆரம்பித்தால் வேலைக்கு ஆகுமா; ரகசிய சர்வே எடுக்கும் ரஜினி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthதான் நடிக்கும் ஒவ்வொரு படங்களை முடித்துவிட்டு இமயமலைக்கு செல்வது ரஜினியின் வழக்கம்.

அங்கு அவர் எளிமையான மனிதரைப் போல மக்களோடு மக்களாக கலந்துக் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்புவார்.

அங்குள்ள சாமியார்களை சந்திப்பதும், வழிபாட்டு தலங்களுக்கு செல்வதும் அவருக்கு பிடித்தமான ஒன்று.

தற்போது ரஞ்சித் இயக்கும் காலா பட சூட்டிங்கை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

எனவே இந்தாண்டும் இமயமலை செல்ல அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

அங்கு சென்று வந்தபின் தனது அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் தமிழக மக்களின் மனநிலை எப்படி உள்ளது? தனிக்கட்சி தொடங்கினால் ஆதரவு இருக்குமா?

வாக்கு சதவிகிதம் எப்படி உள்ளது? வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்ற விவரங்களை சேகரிக்க உத்தரவு இட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

குஷி ஸ்டைலில் 100% காதல் இருக்கும்… – ஜிவி. பிரகாஷ் உறுதி

குஷி ஸ்டைலில் 100% காதல் இருக்கும்… – ஜிவி. பிரகாஷ் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashதெலுங்கில் வெற்றிப் பெற்ற 100% லவ் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.

தெலுங்கில் இப்படத்தை சுகுமார் இயக்க நாக சைதன்யா, தமன்னா நடித்திருந்தனர்.

2011-ம் ஆண்டு வெளியான இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

இந்நிலையில் தமிழில் இப்படத்தின் பூஜையுடன் சூட்டிங்கை தொடங்கியுள்ளனர்.

100% காதல் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து இசையமைக்கிறார்.

இயக்குநர் சுகுமார் தயாரிக்க, எம்.எம். சந்திரமெளலி என்பவர் இயக்குகிறார்.

நாயகியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார்.

டட்லி ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்தை அடுத்த 2018ல் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இப்படம் விஜய் நடித்த குஷி பட ஸ்டைலில் இளமை துள்ளலாக இருக்கும் என நாயகன் ஜிவி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தியேட்டரில் கவர்மெண்ட் ரேட்; நோ பார்க்கிங்; அம்மா வாட்டர்…- விஷால்

தியேட்டரில் கவர்மெண்ட் ரேட்; நோ பார்க்கிங்; அம்மா வாட்டர்…- விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Council President Vishal order 7 conditions to Theatre ownersமத்திய அரசு ஜிஎஸ்டி வரியை நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு முன்பு அமுல்படுத்தியது.

ஆனால் ஜிஎஸ்டி வரியுடன் தற்போது சினிமா டிக்கெட்டுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி 10% விதித்துள்ளது.

எனவே இந்த வரியை ரத்து செய்யக் கோரி, தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த வரியை நீக்கும்வரை புதிய படங்களை திரையிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதனால் அடுத்த வாரம் தீபாவளி (அக். 18) தேதி அன்று படங்கள் வெளியாகுமா? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்றுமுதல் (13 அக்டோபர், 2017) முதல் சில விதிமுறைகளை தியேட்டர்கள் பின்பற்ற வேண்டும் என விஷால் தெரிவித்துள்ளார்.

அவை…

  1. அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கப்படவேண்டும்
  2. கேண்டீனில் MRP விலைக்குதான் உணவு பொருட்களை விற்கவேண்டும்
  3. அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்
  4. தண்ணீர் கொண்டு வர பொது மக்களை அனுமதிக்கவேண்டும்
  5. கார், பைக் உள்ளிட்டவைகளுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது
  6. விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
  7. மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

என விஷால் அறிவித்துள்ளார்.

இந்த விதிமுறைகளை தியேட்டர்கள் அதிபர்கள் கடைப்பிடிப்பார்களா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..?

Producer Council President Vishal order 7 conditions to Theatre owners

 

சத்யா தயாரிக்கும் படத்தில் இணையும் சிநேகன்-ஓவியா

சத்யா தயாரிக்கும் படத்தில் இணையும் சிநேகன்-ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music sathyaகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றாலும் அதிக ரசிகர்களை ஈர்த்தவர் ஓவியாதான்.

பெண்களில் இவர் என்றால், ஆண்களில் அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர் கவிஞர் சிநேகன்தான்.

தற்போது பிக்பாஸ் அலை தமிழகத்தில் ஓய்ந்துவிட்டாலும், அதில் நன்றாகவே நடித்த நட்சத்திரங்களுக்கு சினிமாவில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓவியாவும் சினேகனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்தை இசையமைப்பாளர் சத்யா தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

படத்தின் மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Oviya and Lyricist Snehan teamsup with Music director Sathya

More Articles
Follows