லட்சுமி ராயை கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட *X வீடியோஸ்* நடிகர்

லட்சுமி ராயை கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட *X வீடியோஸ்* நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

X Videos fame Arjun feel shy to hug Lakshmi Raaiசமீபத்தில் வெளியான x வீடியோஸ்’ படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல் என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர் ஆர்யா, பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான ‘பெங்களூரு நாட்கள்’ படத்தில் லட்சுமிராயின் காதலராக நடித்தவர்.

மற்றவர்கள் எல்லாம் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள்.. ஆனால் இவர் வந்தது இதுவரை யாருமே சொல்லியிராத முற்றிலும் வேறு ஒரு காரணத்துக்காக..

அது என்னவென்றும் தான் சினிமாவில் நுழைந்தது குறித்தும் சில சுவையான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அர்ஜுன்.

எனக்கு இயல்பிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம்.. என்னுடைய நண்பர்கள் தான் கேமரா முன்னாடி நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்குள் அனுப்பி வைத்தார்கள்.

அப்போதுதான் விஷ்ணு என்கிற நண்பர் மூலமாக டான்ஸ் மற்றும் நடிக்க தெரிந்த ஆள் வேண்டும் என்பதால் ‘புழல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் எம்.பி.ஏ முடித்துவிட்டு பயிற்சிக்காக அப்பல்லோ மருத்துவமனை ரிசப்ஷனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்த சமயத்தில அங்கே சூர்யாவின் படப்பிடிப்பு ஒன்று நடைபெற்றது. அதில் பணியாற்றிய ரம்யா மூலமாக எதிர்பாராமல் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ‘பெங்களூர் நாட்கள்’ பட வாய்ப்பு கிடைத்தது..

அந்தப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர் நட்பு கிடைக்க, அப்படியே அவர் இயக்கிய ‘x வீடியோஸ்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது” என்கிறார் அர்ஜுன்.

“பெங்களூர் நாட்கள் படத்தில் நடிக்கவேண்டும் என சொன்னபோது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நானோ நடிப்புக்கு புதியவன். அதிலும் லட்சுமிராயுடன் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று வேறு காட்சிகள் .இருந்தது.

ஆனால் லட்சுமிராய் தான் எனக்கு உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார்.

அதுமட்டுமல்ல இன்னுமொரு சோதனையாக பாபி சிம்ஹாவுடன் சண்டைபோடும் காட்சியில் நிறைய டேக் வாங்கி சொதப்பினேன்.

இப்போது ‘x வீடியோஸ்’ படத்தை பார்த்துவிட்டு, புதிய ஆள் மாதிரி தெரியவில்லை.. ரொம்பவும் இயல்பாக நடிக்கிறாய் என பலர் பாராட்டி வருவது மகிழ்சசியாக இருக்கிறது” என்கிற அர்ஜுன், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

X Videos fame Arjun feel shy to hug Lakshmi Raai

Arjun G Iyengar latest photos (1)

சிறந்த இசைக்காக இலங்கை அரசின் விருதைப் பெற்ற *ஓவியா* படம்

சிறந்த இசைக்காக இலங்கை அரசின் விருதைப் பெற்ற *ஓவியா* படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya movie got Srilanka Govt award for Best Music Composer‘ஓவியா’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அள்ளிக்கொள்ளவா’ எனும் பாடலை இசையமைத்ததற்காக இலங்கை அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர்’ எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் பெற்றார்.

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு சிவா பத்மஜன் இசையமைக்கிறார்.

நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ ஓவியா’வாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘அள்ளிக்கொள்ளவா’ எனும் பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளரான சிவா பத்மஜன் அவர்களுக்கு இந்த வருடத்திற்கான ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது இலங்கை அரசிடம் இருந்து கிடைத்துள்ளது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் டைட்டில் வின்னரான ஆனந்த் அரவிந்தக்ஷன் இந்த பாடலை பாடியுள்ளார்.
ஜூன் 22 இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) அவர்கள் ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் அவர்களுக்கு வழங்கினார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Oviya movie got Srilanka Govt award for Best Music Composer

ரஜினி-சிவகார்த்திகேயன் படங்கள் பாணியில் உருவாகும் *நகல்*

ரஜினி-சிவகார்த்திகேயன் படங்கள் பாணியில் உருவாகும் *நகல்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A Science Fiction Nagal movie shooting starts with Poojaஅண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்சன்ஸ் படங்கள் உருவாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படம், மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் இந்த வரிசையில் உருவாகிறது.

தற்போது இதே பாணியில் நகல் என்ற படம் உருவாகவுள்ளது. இதன் படப்பூஜை இன்று இனிதே நடைபெற்றது.

அதுபற்றிய விவரம் வருமாறு…

S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்”.

இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள்.

அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன. அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம்.

S2S பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் A.R.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் “சிவசக்தி” கதாநாயகனாகவும் மும்பை மாடல் “ரிஷ்மா” நாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.

நாயகி பல குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

F.S.பைசல் இசையில்,ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கு ஸ்டன் சிவா ஸ்டன்ட், மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலையை கவனிக்கின்றனர்.

Sci-fi த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னனி நடிகர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் மங்களகரமான பூஜையுடன் துவங்கியது.

ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி 40நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இப்படத்தின் 75% படப்பிடிப்பு சென்னையிலும்,மீதம் உள்ள படபிடிப்பு வெளிநாடுகளிலும் உருவாகவுள்ளது.

மெடிக்கல் ரீதியான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர் குழுவினர். பாடல்கள் ஊட்டியில் உருவாகவுள்ளது.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர் / ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

A Science Fiction Nagal movie shooting starts with Pooja

nagal shoot

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உலக எம்.ஜி.ஆர் பேரவை மாநாடு

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உலக எம்.ஜி.ஆர் பேரவை மாநாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ulaga MGR Peravai Maanadu will be held on 15th July at Vels Universityஉலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதனை பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பற்றி பேசினர்.

எம்ஜிஆர் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி, அங்கேயே அமைப்பை தொடங்கி விழா நடத்தி வருகிறார்கள். நானும் ஃபிரான்ஸில் ஒரு அமைப்பை தொடங்கி 15 வருடங்களாக நடத்தி வருகிறேன். கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் மாநாடு நடத்தினோம்.

அதில் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் புரட்சி தலைவரின் பக்தர்களை ஓரணியில் இணைப்பது பற்றி நிறைய பேர் வேண்டுகோள் வைத்தனர்.

அதற்கு செவி சாய்த்து துவங்கப்பட்டது தான் உலக எம்ஜிஆர் பேரவை. அதில் 11 பேர் உயர்மட்ட உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த பேரவையின் மாநாடு வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பல நல்ல திட்டங்களையும் செயல்படுத்த இருக்கிறோம் என்றார் முருகு பத்மநாபன்.

உலகம் முழுக்க எத்தனையோ நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைப்புகளை துவங்கி, சேவைகளை செய்து வருகிறார்கள் எம்ஜிஆர் பக்தர்கள்.

எந்த அரசியல் கலப்பும் இல்லாமல், எம்ஜிஆர் மீது உள்ள அன்பால், பக்தியால் தான் இந்த மாநாடு நடக்க இருக்கிறது. உலகம் முழுக்க இருந்து பலரும் வந்து கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றார் நடிகை லதா.

வரலாற்றில் ஒரு சிலர் தான் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். சிலர் சரித்திரத்தை எழுதுகிறார்கள். ஆனால் சரித்திரத்தை புரட்டி போட்டவர் எம்ஜிஆர் தான். சினிமாவில் ஓய்வு பெறும் வரை நாயகனாகவே நடித்து வெற்றி வாகை சூடியவர். தான் மறைந்தபோது கூட முதல்வராகவே இருந்து மறைந்தவர். இந்த சிறப்பு உலகில் எவருக்குமே கிடையாது.

அவருடைய சினிமாக்களை எடுத்துக் கொண்டால் எல்லாமே ஆய்வுக்குரியது. படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில் தன் படங்களில் எடுத்து காட்டியவர்.

அதனால் தான் அவரை வாத்தியார் என்று அன்போடு மக்கள் அழைக்கிறார்கள். திமுக கொடியை கூட எம்ஜிஆர் கொடி என்றே அழைத்தனர்.

அறிஞர் அண்ணாவை கூட எம்ஜிஆர் கட்சியா நீங்கள் என்று கேட்கும் அளவுக்கு இருந்தது அவரின் புகழ். சினிமா வாயிலாக, அரசியல் வாயிலாக அவர் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம். அவரின் மீது அன்பு வைத்துள்ள லட்சோப லட்சம் மக்கள் உள்ளனர்.

அவர்களை ஒருங்கிணைத்து எம்ஜிஆர் அவர்களின் புகழை பரப்ப, எந்த அரசியல் கலப்பும் இல்லாமல் ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்தோம்.

புரட்சித்தலைவர் மறைந்து 30 ஆண்டுகள் கழித்து, இன்றளவும் எம்ஜிஆர் பிறந்தநாள், நினைவு நாளில் மக்கள் பயன்பெறும் வகையில் எம்ஜிஆர் பக்தர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

ராமகிருஷ்ண மடம், ரோட்டரி கிளப், ஒய்எம்சிஏ எப்படி செயல்படுகிறதோ அந்த வகையில் இந்த பேரவையும் செயல்பட இருக்கிறது. புரட்சி தலைவர் பெயரில் இலவச கல்வி, ரத்ததான வங்கி என பல நல்ல விஷயங்களை செய்ய இருக்கிறோம். தன் வாழ்நாள் முழுக்க நாட்டு மக்களை பற்றியே சிந்தித்து வாழ்ந்து, மறைந்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் அவர்களை பற்றிய ஆய்வு செய்ய அரசு 5 கோடி ஒதுக்கியிருக்கிறது.

எம்ஜிஆர் வாழ்வியல் பண்புகள் பள்ளி, கல்லூரிகளில் இடம் பெற வேண்டும். உலகத்தில் எவ்வளவு உயர்வான வார்த்தைகள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் சொந்தக்காரர் புரட்சித்தலைவர்.

பிரதிபலன் பாராமல் மக்களுக்காக உழைத்தவருக்கு, பிரதிபலன் பாராமல் நாங்கள் செய்யும் கைமாறு தான் இது என்றார் மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி.

சைதை துரைசாமி, ஏசி சண்முகம், விஐடி விஸ்வநாதன், மரியஸீனா ஜேப்பியார், நாஞ்சில் விண்செண்ட், குறிஞ்சி வேந்தன், முனிரத்னம், முருகு பத்மனாபன், நடிகை லதா உட்பட 11 பேர் கொண்ட குழு அதற்கான இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பிக்க இருக்கிறார். உலக நாடுகளில் இருந்து மலேசிய துணை பிரதமர், மொரிஷியஸ் துணை தலைவர், இலங்கை கல்வி அமைச்சர் ஆகியோரும் தமிழகம் முழுக்க இருக்கும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

தலைவருடன் நடித்தவர்கள், அவர் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் என பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி, ஜாக்குவார் தங்கம் கலை நிகழ்ச்சி, புரட்சி தலைவர் பற்றிய பட்டிமன்றம், பல்சுவை நிகழ்ச்சிகள், கவியரங்கம், மணவை மாணிக்கம் எழுதிய புத்தகம் வெளியீடு, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு என காலையில் இருந்து இரவு வரை விழாவை கொண்டாட இருக்கிறோம்.

தமிழக ஆளுநர் விழா நினைவுத் தூணை திறந்து வைக்கிறார். அடுத்த ஆண்டு மலேசியாவில் நடக்கும் இந்த மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடக்கும் என்றார் ஐசரி கணேஷ்.

Ulaga MGR Peravai Maanadu will be held on 15th July at Vels University

 

மிகவும் பிடித்த தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் -கமல்

மிகவும் பிடித்த தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் -கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Vijay enters in politics I will welcome says Kamalhassanநடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என்று ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுப்பிய கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன்.

அதுவும் நடிகர் விஜய் தனக்கு மிகவும் பிடித்த தம்பி என்றும், தனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி எனவும், அரசியலுக்கு அவர் வந்தால் கண்டிப்பாக வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கமலின் இந்த பதிலை அடுத்து விஜய் அவருக்கு நன்றி என மொபைல் போனில் ரிப்ளை செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

If Vijay enters in politics I will welcome says Kamalhassan

என்கவுன்டர் போலீஸாக சரத்குமார் மிரட்டும் *வேளச்சேரி துப்பாக்கிச் சூடு*

என்கவுன்டர் போலீஸாக சரத்குமார் மிரட்டும் *வேளச்சேரி துப்பாக்கிச் சூடு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar as Encounter Police officer in Velacherry Thuppakki ChooduV.R. மூவிஸ் சார்பாக்க T.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’.. S.T.. வேந்தன் இந்தப்படத்தை இயக்குகிறார்.

இவர் ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த புதிய படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இளம் ஜோடிகளாக அர்வி, கேரள வரவு நீரஜா நடிக்கின்றனர்.

சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இன்றைய தேதியில் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார்.

அந்த நிகழ்வுகளும் அதைச் சார்ந்த ஒரு என்கவுண்டர் ஆபரேஷனுக்கு தான் இந்த ’வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ என பெயரிட்டுள்ளனர்.

அதைப் புதுவிதமான திரைக்கதையில் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக தர இருக்கிறார்களாம்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால் இந்தப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ என்கிற டைட்டிலை வைத்துள்ளார்களாம்.

காஷ்மீர் துப்பாக்கிச்சூடு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என துப்பாக்கிச்சூடு என்பது அன்றாட நிகழ்வாக மாறிப்போய் விட்டது.

அதை மனித உரிமை மீறல் என சொல்லக்கூடிய இனியாவுக்கும், இல்லையில்லை காவல்துறையின் செயல் நியாயமானதுதான் என்கிற சரத்குமாருக்கும் நடக்கும் விவாதங்களும் அதை சார்ந்த நிகழ்வுகளும் தான் படத்தின் அடிநாதம்.

சரத்குமார் நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது இதுதான் முதல்முறை ஆகும்.

படம் குறித்து இயக்குநர் S.T. வேந்தன் கூறும்போது, “காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள்.

அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை.. யாரும் போராடுவதில்லை..

அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..

ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்க நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும் என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம்.

இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக இதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.

கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்” என்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Sarathkumar as Encounter Police officer in Velacherry Thuppakki Choodu

More Articles
Follows