நவீரா சினிமாஸ் தயாரிப்பில் அகிலன் இயக்கும் படம்..; மீண்டும் ஹீரோவாக பிஸியாகும் ஜி.வி.பிரகாஷ்

நவீரா சினிமாஸ் தயாரிப்பில் அகிலன் இயக்கும் படம்..; மீண்டும் ஹீரோவாக பிஸியாகும் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் அடுத்தப் படத்தின் பூஜை வளசரவாக்கத்தில் இன்று நடைபெற்றது.

கொரோனா வழிமுறை பின்பற்றி இந்தப் படப்பூஜையில் அனைவரும் கலந்துக் கொண்டனர். பல்வேறு முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்துவிட்டு, சில குறும்படங்கள் மற்றும் பல்வேறு முன்னணி படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட அகிலன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அகிலன் கூறிய கதை ஜி.வி.பிரகாஷுக்கு மிகவும் பிடித்துவிடவே, உடனே தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

முழுக்க காதலை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவாகவுள்ளது.

இன்னும் இந்தப் படத்துக்குப் பெயரிடப்படவில்லை. ஆகையால் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

நவீரா சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. 55 நாட்களில் ஒட்டும்மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விரைவில் இதர நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். கண்டிப்பாக அவை அனைத்துமே ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்கிறார் இயக்குநர் அகிலன்.

தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:

இயக்குநர்: டி.வி.அகிலன்
தயாரிப்பு நிறுவனம்: நவீரா சினிமாஸ்
தயாரிப்பாளர்: இஷானி சஜ்மி சலீம்
நிர்வாக தயாரிப்பாளர்: பி .சூர்யபிரகாஷ்
இணை தயாரிப்பாளர்கள்: சாஜினாஸ் சலீம், சாதிக் சலீம்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவாளர்: எம்.ஏ.ராஜதுரை
எடிட்டர்: டி. சிவனாதீஸ்வரன்
கலை இயக்குநர்: தாமு
சண்டைக் காட்சிகளின் இயக்குநர்: டேஞ்சர் மணி
ஆடை வடிவமைப்பாளர்: சைத்தன்யா ராவ்
மேக்கப் : குப்புசாமி
பி.ஆர்.ஓ: யுவராஜ்

Work on GV Prakash’s romantic thriller film begins with pooja

ராஷ்மிகா அறிமுகமாகும் ‘சுல்தான்’ படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்தி

ராஷ்மிகா அறிமுகமாகும் ‘சுல்தான்’ படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sultan tamil filmகார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கைதி’.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த்திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

இந்நிலையில் சற்றுமுன் சுல்தான் பட தொடர்பாக ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

‘ரெமோ’ டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் படு பிரபலமான ராஷ்மிகா தமிழில் அறிமுகமாகும் படம் இது.

கார்த்தியின் ட்விட்டர் பதிவில்….

சுல்தான் படப்பிடிப்பு நிறைவடைந்து.

இந்த பட ஐடியாவை கேட்டதில் இருந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.

இந்த கதை தொடர்ந்து எங்களை பரவசப்படுத்தி வந்துள்ளது.

நான் நடித்ததில் அதிக பொருட்செலவில் உருவான படம் இது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என அவர் பதிவிட்டுள்ளார்.

And it’s a wrap!! From the day we heard the idea three years back till today, the story continues to excite us. It’s one of my biggest productions so far. I thank the entire team for slogging it through and giving their best.

#Sulthan https://t.co/MUAinSYy4T

Actor Karthi’s Sultan team has an interesting update

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘புள்ளி ராஜா’-வை நினைவிருக்கா..? இப்போ ‘பஞ்ச் பாட்டி’ வர்றாங்க..

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘புள்ளி ராஜா’-வை நினைவிருக்கா..? இப்போ ‘பஞ்ச் பாட்டி’ வர்றாங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aids awarenessபுள்ளி ராஜா-வுக்கு எய்ட்ஸ் வருமா? என்ற வழிப்புணர்வு வசனங்களை 20 வருடங்களுக்கு முன்பு கேட்டிருக்கலாம்.

விஜய் நடித்த திருமலை படத்தில் கூட விவேக் இண்டர்வியூக்கு போகும் போது ‘புள்ளி ராஜா-வுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற டயலாக்கை பேசியிருப்பார்.

இப்போது கால மாற்றத்தினால் புள்ளி ராஜா என்ற கேரக்டரை ‘பஞ்ச் பாட்டி’ என்ற கேரக்டராக அறிமுகப்படுத்தவுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “பஞ்ச் பாட்டி” என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குநர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

வானொலி உட்பட அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒலிபரப்படும் என பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1ஆம் தேதி எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

New campaign for aids awareness in Tamil Nadu

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கல்லறைக்கு செல்ல தனி வழி அமைத்த எஸ்.பி.சரண்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கல்லறைக்கு செல்ல தனி வழி அமைத்த எஸ்.பி.சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB charanதன் இனிய குரலால் மக்களை வசீகரித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் கடந்த மாதம் செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.

அவரது மறைவால் இந்திய இசை துறையே கலங்கி போனது. திரும்பிய திசை எங்கும் எஸ்பிபி பாடல்களே ஒலித்தன.

அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திலுள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை.

நடிகர்கள் விஜய், அர்ஜுன், ரகுமான் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அரசு காவலர் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்றைய தினத்தில் வர முடியாத ரசிகர்கள் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அங்கு அவரின் கல்லறைக்கு செல்ல சிரமம் இருந்த நிலையில் அதனைப் போக்கும் விதமாக தனி வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார் எஸ்பிபி மகன் எஸ்.பி.பி.சரண்.

SP Charan made new way for his dad SPBS cemetry

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலாவுக்கு சொந்தமான ரூ 2000 கோடி சொத்துகள் முடக்கம்

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலாவுக்கு சொந்தமான ரூ 2000 கோடி சொத்துகள் முடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikalaமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 3 வருடங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

எனவே சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த, சசிகலாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான 65 சொத்துக்களையும் முடக்கியது.

தற்போது மீண்டும் சிறுதாவூர், கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு சசிகலா, இளவரசி மற்றும் திவாகரனுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த சொத்து முடக்கம் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Sasikala assets worth Rs 2000 crores seized

பாலியல் வன்முறைக்கு எதிரான டைட்டில் கார்ட் வேண்டும்..; விஜய் ஸ்ரீ வைக்கும் நியாயமான கோரிக்கை!!

பாலியல் வன்முறைக்கு எதிரான டைட்டில் கார்ட் வேண்டும்..; விஜய் ஸ்ரீ வைக்கும் நியாயமான கோரிக்கை!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director Vijay Sri Gபெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் டைட்டில் கார்டில் பதிவிட வேண்டுகோள்.

மத்திய தணிக்கைக்குழுவின் ஆலோசனைப்படி திரைப்படங்கள் துவங்குவதற்கு முன் மது குடிப்பதும். சிகரெட் பிடிப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் டைட்டில் கார்டில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும்.

இந்நாள் வரை அந்த பதிவும் திரைப்படம் துவங்குவதற்கு முன் பதிவிடப்பட்டு வருகிறது.

இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச்சம்பவங்களுக்கு எதிரான வாசகம் 2019 மார்ச் 1 வெளியான ”தாதா87” படத்தின் டைட்டில் கார்டில், ”பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்”
என்ற வாசகத்தை உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவிட்டோம்.

தற்சமயம் நாட்டை கண்ணீரில் ஆழ்த்திய ஹாரித்துவார் சம்பவம் நம் தேசத்தின் மகள் கொடூராமாக தாக்கப்பட்டு தீயில் கருகிய செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்

எங்கள் ”பொல்லாத உலகில் பயங்கர கேம்” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில்
ஒரு சில கயவர்களால் பெண் ஒருவள் சிதைக்கப்பட்டு, எரிக்கப்பட்ட காட்சியையும், தொடர்ந்து அந்த கயவர்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கப்படுவதையும் படமாக்கியிருக்கிறோம்.

தாதா87 படத்தில் சாருஹாசன் பேசிய… “பெண்களை தொட்டால் கொளுத்துவேன்” என்ற வசனம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டனர் என்பதை திரைப்பட வெற்றி பதிவு செய்தது. இன்று பல நாடுகளில் சட்டமானது.

பெண்களுக்கு ஏற்படும் வன்முறை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனையும், சட்டமும் மட்டுமே அரணாக இருக்கும்.

தவறு இழைத்தவர்கள் மீது மத்திய அரசும் மாநில அரசும் இந்திய நீதித்துறையும் நிச்சயம் தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்திய, மாநில அரசு மற்றும் எதிர் கட்சி தலைவர்கள் தொடர்ந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்ற எல்லா கோரிக்கைகளிலும் குரல் கொடுக்கும் தலைவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வை மத்திய செய்தி தொடர்பு அமைச்சகம் தணிக்கை குழுவினர் ஒருங்கிணைந்து, 2012 செப்டம்பர் 26ல் திரைப்பட “டைட்டில் கார்டில் வெகுஜன மக்கள் மத்தியில் ஒன்றுடன் கலந்த சினிமா மூலமாக விழிப்புணர்வை பதிய வைத்தார்கள்.

அதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கையையும் பதிவிடுங்கள் என பொல்லாத உலகில் பயங்கர கேம் மற்றும் பவுடர் படத்தின் படக்குழுவினர் சார்பாக அனைவரும் ஒன்று கூடி வேண்டுகோள் வைக்கிறோம்.

இவ்வாறு டைரக்டர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

Dhadha 87 director Vijay Sri requests state and central government

More Articles
Follows