Breaking: ரஜினி அரசியலில் விஜய் கூட்டணி…? எஸ்ஏ. சந்திரசேகர் பேட்டி

Breaking: ரஜினி அரசியலில் விஜய் கூட்டணி…? எஸ்ஏ. சந்திரசேகர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sa chandrasekarஇன்று மார்ச் 5ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல கல்லுரியில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைக்கவுள்ளார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் அவர் இதுபோன்ற ஒரு விழாவில் கலந்துக் கொள்ளவிருப்பதால் சென்னை கோயம்பேடு முதல் மதுரவாயல், வானகரம் வழிகளில் ரஜினியை வரவேற்பு பல பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

மேலும் பேண்டு வாத்தியங்களை வைத்து ரஜினியை வரவேற்க தயாராக உள்ளனர்.

இதே விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரும் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

அப்போது அவரை சந்தித்துள்ள செய்தியாளர்கள்… ரஜினியின் அரசியல் கட்சியில் இணைவீர்களா? என கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக விஜய்யிடம்தான் கேட்க வேண்டும் என எஸ்ஏசி பதிலளித்துள்ளார்.

Will Vijay joins with Rajinis political party Here is SAC reaction

முன்னாள் முதல்வர் சிலையை திறக்கும் நாளைய முதல்வரே..; ரஜினி ரசிகர்கள் போஸ்டர்

முன்னாள் முதல்வர் சிலையை திறக்கும் நாளைய முதல்வரே..; ரஜினி ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanth opened MGR Statue at Chennaiசென்னையில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

அந்த சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று மார்ச் 5ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.

எனவே ரஜினியை வரவேற்க அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர்.

வழி நெடுகிலும் ரஜினியை வரவேற்று பேனர்கள் மற்றும் கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றன.

முன்னாள் முதல்வரின் சிலையை திறக்க வரும் நாளைய முதல்வரே என வாசகங்களை டிசைன் செய்து போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பிரிண்ட் செய்து வைத்துள்ளனர்.

Actor Rajinikanth opened MGR Statue at Chennai

mgr statue opening rajini welcome

Breaking: செல்வராகவனின் சூர்யா 36 பட பர்ஸ்ட் லுக் வெளியானது

Breaking: செல்வராகவனின் சூர்யா 36 பட பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On Selvaraghavan Birthday Suriya 36 movie first look revealedதானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் பிரித்தி சிங் இருவரும் நடிக்கின்றனர்.

இதுவரை பெயரிடப்படாமல் இருந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு என்ஜிகே (NGK) என பெயரிட்டுள்ளனர்.

இந்தாண்டு 2018 தீபாவளிக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.

இன்று மார்ச் 5ஆம் தேதி செல்வராகவன் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

On Selvaraghavan Birthday Suriya 36 movie first look revealed

suriya ngk

கருப்பி பாடலை சாதாரணமாக கடக்க முடியாது… பாடலாசிரியர் முருகன் மந்திரம்

கருப்பி பாடலை சாதாரணமாக கடக்க முடியாது… பாடலாசிரியர் முருகன் மந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ram ranjithகாலா இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல் பாடல் கருப்பி என் கருப்பி வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

இயக்குநரும், மாரி செல்வராஜின் குருவுமான இயக்குநர் ராம், இயக்குநர்கள் நவீன், புஷ்கர் காயத்ரி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இயக்குநர் ராம்:

“பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

“தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” சிறுகதைத் தொகுப்பின் மூலமாக அறிமுகமாகி, ஆனந்த விகடனில் வெளியான மறக்கவே முடியாத தொடர் “மறக்கவே நினைக்கிறேன்” மூலம் தமிழக மக்களை தன் வசப்படுத்திய மாரி செல்வராஜின் முதல் படம்.. அல்லது முதல் கோபம்னு கூட சொல்லலாம்.

அவனுடைய இயலாமை, அவனுடைய ஆற்றாமை, அவனுக்குள்ள இருக்கிற ரௌத்திரம், உன்மத்தம், வெறி, எரிச்சல் வரலாற்றின் மீது இருந்த தீராத கோபம் இது எல்லாத்தோட மொத்த வெளிப்பாடா இந்தப் பாட்டு இருக்கு.

“பரியேறும் பெருமாள்” கதைக்குள்ள இருக்கிற மொத்த உணர்ச்சியும் இந்தப்பாட்டுல இருக்கிறதா நான் நினைக்கிறேன்.

அந்த உணர்ச்சியில இருந்த கோபத்தையும் உணர்ச்சியையும் சந்தோஷ் நாராயணன் அவர் குரலிலும் இசையிலும் மிகச் சிறப்பா கொண்டு வந்திருக்கார்.

பா.இரஞ்சித், தமிழ் சினிமாவுக்கு அட்டகத்தி மூலமா அறிமுகமானார். என்னைப் பொறுத்தவரைக்கும் அட்டகத்தி, தமிழ் சினிமாவின் முக்கியமான சினிமாவில் ஒண்ணு.

தமிழ் சினிமாவில் அதுவரை பார்க்காத ஒரு திரைமொழியையும் அதுவரை பார்க்காத ஒரு மக்களின் வாழ்வியலையும் கொண்ட ஒரு படம். பா.இரஞ்சித்தின் முதல் தயாரிப்பு இது, அவருக்கும் நீலம் புரொடக்சனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். சந்தோஷ் நாராயணனுக்கு என்னுடைய வாழ்த்துகள். மாரி செல்வராஜூக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து:

“கருப்பி பாடலில் வெளிப்படையாக ஒலிக்கும் வலியும் அடிநாதமாக கேட்கும் விடுதலை உணர்வும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. வாழ்த்துக்கள்”.

பாடலாசிரியர் முருகன் மந்திரம்:

ஒரு படைப்பு அல்லது பாடல் சாதாரணமாக கடந்து போகக்கூடாது. கேட்கிறவங்களோட சிந்தனையை மாற்றணும். யோசிக்க வைக்கணும்.

கருப்பி பாடல் வரிகள் நிச்சயமா கேட்கிறவங்களோட சிந்தனைக்குள்ள போய் பேசும். ஒரு உயிரை இழந்த துயரத்தின் உரையாடலாக அமைந்திருக்கிற கருப்பி பாடலை சாதாரணமாக எவராலும் கடந்து போக முடியாது.

Lyricist Murugan Manthiram talks about Karuppi song from Pariyerum Perumal

ஷங்கரின் 2.0 டீசர் லீக்; இதயமற்றச் செயல் என சௌந்தர்யா ரஜினி கோபம்

ஷங்கரின் 2.0 டீசர் லீக்; இதயமற்றச் செயல் என சௌந்தர்யா ரஜினி கோபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini daughter Soundarya Condemns Piracy of 2point0 Teaserஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ரூ 400 கோடியில் உருவாகியுள்ள படம் 2.0.

லைகா தயாரித்துள்ள இப்படத்தை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை இப்படத்தின் டீசர் லீக்காகி இணையத்தில் வெளியானது.

இதனால் ஒட்டு மொத்த திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சவுந்தர்யா ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

’2.0 பட டீசர் அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பாகவே திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றப்பட்டது சகித்துக் கொள்ள முடியாதது.

ஒரு சில நொடி உற்சாகத்துக்காக, படைப்பாளிகளின் கடின உழைப்பையும், உணர்வுகளையும் சீரழிக்கும் இதயமற்றச் செயலாகும். டிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என கோபமாக தெரிவித்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் பல படங்களில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணிபுரிந்துள்ளார்.

மேலும் ரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini daughter Soundarya Condemns Piracy of 2point0 Teaser

Leaking content online before the official release should not be TOLERATED or ENCOURAGED ! This is a heartless act ignoring hard work, efforts and sentiments of the makers for few seconds of excitement !!! #BeAshamed #StopPiracy #StopMisusingDigitalMedium
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 4, 2018

காலா படத்தை தொடர்ந்து ரஜினியின் 2.0 பட டீசரும் லீக்கானது

காலா படத்தை தொடர்ந்து ரஜினியின் 2.0 பட டீசரும் லீக்கானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Kaala teaser Rajinis 2point0 movie teaser also leakedசில தினங்களுக்கு ரஜினிகாந்த் நடித்த காலா பட டீசர் இணையத்தில் லீக்கானது.

படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே இது வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. அதனை தொடர்ந்து சில நிமிடங்களில் படத் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டார்.

அந்த லீசரை லீக்காக்கியது யார்? என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அதற்குள் ரஜினியின் அடுத்த படமான 2.0 பட டீசரும் இணையத்தளங்களில் பரவி வருகிறது.

பொதுவாக ஷங்கர் தான் இயக்கும் பட சூட்டிங்கின் போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பார்.

தற்போது அவரின் பட டீசரே இதுபோல் லீக்காகியுள்ளது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

1.27 நிமிட காட்சிகள் இந்த டீசரில் உள்ளன.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் தன் நண்பர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொடுத்த ஒரு விருந்தின் போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்க இந்த டீசர் வீடியோவை அவர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளார்.

அப்போது அதை பார்த்த ஒருவன் அதை படம்பிடித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.

அந்த விஷமி யார்? என்ற தெரிந்த பின் அவன் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என கூறப்படுகிறது.

After Kaala teaser Rajinis 2point0 movie teaser also leaked

More Articles
Follows