தனுஷ் சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்த சிம்பு.; கமல் பாணியில் கலக்குவாரா.?

தனுஷ் சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்த சிம்பு.; கமல் பாணியில் கலக்குவாரா.?

சகலகலா வல்வவன் கமல்ஹாசன் அரசியலில் பிசியாகவுள்ளார். தன் இறுதி மூச்சு வரை அரசியலில் இருப்பேன் என அறிவித்திருக்கிறார்.

விரைவில் விக்ரம், இந்தியன் 2, பாபநாசம் 2 படங்களில் நடிக்கவுள்ளார் கமல்.

எனவே அவர் பிக்பாஸ் அடுத்த சீசனை நடத்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கமல் இல்லாவிட்டால் சிம்பு தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ‘சர்வைவர்’ என்ற பிரபலமான சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை தொகுத்து வழங்கவுள்ளார் சிம்பு என தகவல்கள் வருகின்றன.

இந்த சர்வைவர்’ என்ற சர்வதேச ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் சிம்புவுக்கே வாய்ப்பு போனதாக சொல்லப்படுகிறது.

(சின்னத் திரையில் பணிபுரிந்த போது சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ஏராளம்.. பிரபலம்.. என்பதையும் நினைவில் கொள்க.)

தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் ‘சர்வைவர்’ ரியாலிட்டி ஷோ குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் இது பிரபலமான தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு தீவில் தங்க வைக்கப்படுவார்கள்.
அந்த நிகழ்ச்சி அங்குதான் படமாக்கப்படும்.

நிகழ்ச்சியின் விதிகளின்படி, போட்டியாளர்களுக்கு குறைந்தபட்ச வசதிகள் மட்டுமே தரப்படும்.

எனவே கூடுதல் பொருட்கள் மற்றும் இதர வசதிகளைப் பெற அவர்கள் பல்வேறு பணிகளை (task) செய்து அவற்றில் வெற்றி பெற வேண்டுமாம். இதுதான் சர்வைவர்.

கமல் போல சிம்பு கலக்குவாரா?

Will Simbu host Survivor International TV Reality show

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *