80களின் ஹீரோ-ஹீரோயின் சந்திப்பில் ரஜினி கலந்து கொள்வாரா?

80களின் ஹீரோ-ஹீரோயின் சந்திப்பில் ரஜினி கலந்து கொள்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth with ever green 80s herosநடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், சிரஞ்சீவி, மோகன், அர்ஜீன், சுமன் மற்றும் சரிதா, ராதிகா, அம்பிகா, ராதா, நதியா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் 1980களில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வருடம் வருடம் ஒரு குறிப்பிட்ட தேதியில் சந்தித்து தங்களது நட்பை புதுப்பித்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இவ்வருட சந்திப்பை இந்தாண்டு சீனாவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இச்சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளது. ஆனால் இதில் யார், யார் கலந்துகொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

காலா சூட்டிங்கில் ரஜினிகாந்த் பிஸியாக இருப்பதால், அவர் கலந்துகொள்ள வாய்ப்பு மிக குறைவு என சொல்லப்படுகிறது.

Will Rajini participate in Ever Green 80s actors meeting in China

rajinikanth with ever green 80 heroines

விஜய்-அஜித்-விஜய் சேதுபதிக்காக காத்திருக்கும் ரவிஅரசு

விஜய்-அஜித்-விஜய் சேதுபதிக்காக காத்திருக்கும் ரவிஅரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ravi arasu waiting for Vijay Ajith and Vijay Sethupathiஅதர்வா நடித்த ஈட்டி படத்தை தொடர்ந்து ஜிவி. பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் படத்தை இயக்கி வருகிறார் ரவி அரசு.

இதில் என்ஜினியரிங் மாணவராக நடித்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

காமன் மேன் நிறுவனம் சார்பாக கணேஷ் தயாரிக்க, மஹிமா நம்பியார் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்சேதுபதியை சந்தித்த இயக்குனர் ரவி அரசு அவரிடம் நான்கு ஒன்லைனர்களை சொல்லியிருக்கிறாராம்.

மேலும் அஜித், விஜய் ஆகிய டாப் ஹீரோக்களுக்கும் என்னிடம் கதை உள்ளது என சொல்லி வருகிறார் இந்த ஈட்டி இயக்குநர்.

Director Ravi arasu waiting for Vijay Ajith and Vijay Sethupathi

ayngaran pooja director ravi arasu

ரஜினியின் கடைசி படம் ‘காலா’..? அடுத்த திட்டம் என்ன.?

ரஜினியின் கடைசி படம் ‘காலா’..? அடுத்த திட்டம் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kaalaஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் அடுத்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து, பா. ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இதன் சூட்டிங் தற்போது மும்பையில் நடந்து வருகிறது.

தனுஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இது ரஜினிகாந்தின் 164வது படம் என இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் தெரிவித்து இருந்தார்.

இதுவே ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படத்தை முடித்துவிட்டு அரசியலில் தீவிர கவனம் செலுத்த போகிறாராம் சூப்பர் ஸ்டார்.

வருகிற 2021ஆம் ஆண்டு தேர்தலை குறி வைத்து அவரது நடவடிக்கைகள் இருக்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

ரஜினிக்கு ஆதரவாக ஆனந்த்ராஜ், ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் களம் இறங்குவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

Whether Rajinis 164th movie Kaala will be his last movie?

சன்னி லியோனை காப்பாற்றிய பைலட்டுக்கு ரசிகர்கள் நன்றி

சன்னி லியோனை காப்பாற்றிய பைலட்டுக்கு ரசிகர்கள் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sunny-Leoneதன் கவர்ச்சி புயலால் உலக ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் சன்னி லியோன்.

இவர் தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் நண்பர்களுடன் புனே அருகே தனியார் விமானத்தில் பயணம் செய்தார்.

அப்போது மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாக, தன் சாமர்த்தியத்தால் பயணிகளை காப்பாற்றினார் பைலட்.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் சன்னி லியோன் பதிவிட்டுள்ளதாவது.. “நாங்கள் உயிரோடு இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

மேலும் எங்களுடைய விமானிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எப்படியோ எங்களைக் காப்பாற்றிவிட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த விமானிகளுக்கு சன்னி லியோன் ரசிக்ரகள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Sunny Leone escapes plane crash and posted video to say shes fine

Sunny Leone‏Verified account @SunnyLeone
Thank the lord we are all alive! Our private plane almost crashed through bad weather. Counting our stars and driving home! Thank you God!

Sunny Leone‏Verified account @SunnyLeone 7m7 minutes ago
Footage from the plane during the turbulence! Thanks to the brave pilots who ensured that the plane landed safely!!

தனுஷுடன் இணையும் டைரக்டர் அமீர்

தனுஷுடன் இணையும் டைரக்டர் அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director ameer

வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தை தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷுடன் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருந்தார்.

ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகியிருந்தார் என்பதை நாம் பார்த்தோம்.

இந்நிலையில் அந்த கேரக்டரில் நடிக்க தற்போது இயக்குநர் அமீர் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் மூன்று பாகமாக தயாராகுவது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவும் இல்லை, ஆராயிரத்தில் ஒருத்தியும் இல்லை.. பிரபாஸின் மனைவி இவர்தான்..?

அனுஷ்காவும் இல்லை, ஆராயிரத்தில் ஒருத்தியும் இல்லை.. பிரபாஸின் மனைவி இவர்தான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhasபாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமா அறிந்த நாயகனாக உயர்ந்தார் பிரபாஸ்.

எனவே இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியிலும் மவுசு அதிகமானது.

இதனிடையில் பாகுபலி நாயகி அனுஷ்கா உடன் பிரபாஸ் காதல் என பேச்சு அடிப்பட்டது.

நடிகையை மட்டும் மணப்பாரா? நாங்களும் இருக்கோம் என கிட்டதட்ட 6000 பெண்கள் பிரபாஸ்க்கு விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் 2018ல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம் பிரபாஸ்.

ராசி சிமெண்ட் சேர்மன் பூபதி ராஜுவின் பேத்தியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இது பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணம் எனவும் சொல்லப்படுகிறது.

More Articles
Follows