தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
போன வருஷம் அந்தப் படம் வந்துச்சி, இந்தப் படம் இப்போ வந்துச்சி என ஒவ்வொரு தீபாவளியுடன் டாப் ஸ்டார்களை படங்களை ஒப்பீடு செய்து பேசி வருவதை பார்த்திருப்போம்.
எனவே நாமும் அதுபோன்ற ஒரு ஒப்பீட்டை இப்போது பார்ப்போமா..?
அஜித் நடிப்பில் உருவான ‘வரலாறு” (2006), ‘ஏகன்’ (2008), ஆரம்பம் (2013), மற்றும் வேதாளம் (2015) ஆகிய 4 படங்கள் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்த்து.
இதில் ‘ஏகன்’ தவிர மற்ற மூன்று படங்களும் ஹிட் அடித்தன.
விஜய் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் (2007), வேலாயுதம் (2011), துப்பாக்கி (2012) மற்றும் கத்தி (2014) ஆகிய 4 படங்கள் தீபாவளிக்கு வெளியானது.
இதில் அழகிய தமிழ் மகன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மற்றவை ஹிட் அடித்தன.
இதே போன்று சூர்யா நடிப்பில் ‘வேல்’ (2007), ஆதவன் (2009) மற்றும் ஏழாம் அறிவு (2011) ஆகிய 3 படங்கள் வெளியாகியது.
இதில் ஏழாம் அறிவு படம் போதி தர்மர் பற்றிய சர்ச்சைகளை எழுப்பியது.
இந்நிலையில் இந்தாண்டு தீபாவளிக்கு தனுஷின் கொடி படம் வெளியானது.
இதற்கு முன்பு, ‘பொல்லாதவன்’ (2007) ‘உத்தமபுத்திரன்’ (2010) வெளியானது.
தற்போது கொடியும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இவை ஹிட் லிஸ்ட்டில் இணையும்.
கடந்த 2013 தீபாவளிக்கு கார்த்தியின் அழகுராஜா வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
எனவே இந்தாண்டு வெளியான காஷ்மோரா அவரது முதல் தீபாவளி ஹிட்டாக அமையும் என சொல்லப்படுகிறது.
