தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனிடையே காலா சூட்டிங்கில் கலந்து கொண்டு ரஜினி சென்னை வந்ததும், அவரை தினசரி ஏதாவது ஒரு பிரபலம் சந்தித்து வருகிறார்.
தமிழருவி மணியன், அர்ஜூன் சம்பத் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் காலா சூட்டிங்கில் கலந்துக் கொள்ள மும்பை செல்லவிருந்தார் ரஜினி.
அப்போது சென்னை விமான நிலையத்திற்கு அவர் வர, அரசியல் பிரவேசம் மற்றும் ரசிகர்கள் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
“நான் அரசியலுக்கு வந்தால் உங்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன்.
என் நண்பர்களுடன் என்னை சந்திக்க வருபவர்களுடன் நான் அரசியல் குறித்து பேசியதை மறுக்கவில்லை.
அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறேன். ஆனால், முடிவு செய்யவில்லை.
செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்.” என்றார்.
