ரஜினி-விஜய்-சிவகார்த்திகேயன் போல் அஜித் மாற்றுவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்து வரும் 2.ஓ படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிடயிருந்தனர்.

ஆனால் அண்மையில் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து, 2018ஆம் ஆண்டு ஜனவரி 25இல் ரிலீஸ் என்று அறிவித்தனர்.

அதுபோல் அட்லி இயக்கத்தில் உருவாகும் விஜய் 61 படத்தின் தேதியை அறவிக்காமல் இருந்தனர்.

ஆனால் ரஜினி படம் தீபாவளி ரேஸில் இருந்து, விலகியதை அடுத்து, விஜய் பட ரிலீஸ் தேதியை அறிவித்தனர்.

இவர்களைத் அடுத்து சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட ரிலீஸ் தேதியை ஆகஸ்ட்டில் இருந்து செப்டம்பருக்கு ஒத்தி வைத்தனர்.

இவர்களைப் போல் அஜித்தின் விவேகம் படமும் ஆகஸ்ட்டில் 10ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Will Ajith change his Vivegam release date

கமல்-விக்ரம் வரிசையில் ஜெயம் ரவி எடுக்கும் ரிஸ்க்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய் வரிசையில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் வனமகன்.

இது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள 50வது படமாகும்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட மதன் கார்க்கி பேசும்போது…

வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு வசனங்களே கிடையாது. என்றார்.

இதற்கு முன்பு பேசும் படத்தில் கமல், பிதாமகன் படத்தில் விக்ரம் ஆகியோர் இதுபோன்ற கேரக்டர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடித்த இளைய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

இப்படத்தை இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

இதனால் பல படங்கள் தங்களது ரிலீஸை தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில் 2.0 பட ரிலீஸை தள்ளி வைத்து அடுத்த ஆண்டு 25-01-2018 அன்று ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்தனர்.

எனவே அட்லி இயக்கி வரும் விஜய் 61 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விஜய்61 பர்ஸ்ட் லுக்-ஆடியோ-பட ரிலீஸ் உறுதியான தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கி வரும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தின் டைட்டில் வெளியாகாத நிலையில், இதன் பர்ஸ்ட் லுக், ஆடியோ மற்றும் பட ரிலீஸ் தேதி தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் அதாவது ஜீன் 22ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.

மேலும் படத்தின் ஆடியோவை ஆகஸ்ட் மாதத்திலும், படத்தை அக்டோபர் மாதத்திலும் வெளியிடவிருக்கிறார்களாம்.

Vijay 61 first look audio release and movie release date updates

2.0 பட ரிலீஸ் தேதி மாற்றம்; ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் 2.ஓ படத்தை லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடியில் தயாரித்து வருகிறது.

ஷங்கர் இயக்கி வரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிவிட்டது. விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்ப்படுகிறது.

இப்படத்த்தை 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

இதனால் இந்தாண்டு இரட்டை தீபாவளியை கொண்டாட ரஜினி ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், தற்போது இந்தாண்டு இப்படத்தை வெளியிடாமல் அடுத்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் நேர்த்திக்காக ரிலீஸை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்தாண்டு ரஜினி படத்தை காணலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளதாம்.

Rajini Shankars combo 2pointO release date changes

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பர்ஸ்ட் லுக்-ரிலீஸ் தேதி மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’.

இதில் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற மே 1ஆம் தேதியும் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது அதன் அந்த தேதிகளை மாற்றி, புதிய தேதியை அறிவித்துள்ளனர்.

ஜூன் 5ஆம் தேதி ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்றும் செப்டம்பர் 29ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்சன் படத்தொகுப்பை கவனித்து வருகின்றனர்.

Velaikkaran first look and release date new updates

24AM STUDIOS™‏Verified account @24AMSTUDIOS
After discussing with our distributors,we have decided to Release our prestigious Project #Velaikkaran on 29:09:2017 (Pooja Holidays)

More Articles
Follows