பாஜக.வில் இணைய காத்திருக்கிருக்கிறேனா..? விஷால் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்தாண்டு 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சில காலம் அரசியல் களம் கண்ட நடிகர் விஷால் அவர்கள் பா.ஜ.கட்சி, தலைவர் முருகனை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து விஷால் பா.ஜ.வில் இணைய இருப்பதாக தகவல் பரவியது.

இதை மறுத்துள்ள விஷால், ”நான் பா.ஜ.,வில் இணைவதாக வந்த செய்தி உண்மையில்லை. யாரையும் சந்திக்க நேரம் கேட்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Will Actor Vishal join in BJP Political party

மக்கள் சக்திதான் எல்லாமே..; மாஸான ரீ-என்ட்ரீ கொடுக்க போகும் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 12ஆம் தேதி காமெடி கிங் மீம்ஸ் அரசன் வடிவேலு தன் பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு கோலிவுட்டே வாழ்த்து சொன்னது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

”மக்களை சிரிக்க வைக்க தினமும் நான் பிறக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக பிறக்கிறேன்.

என் அம்மாவுக்கு முதலில் நன்றி சொல்லணும், அவர் என்னை பெற்றெடுக்கவில்லை என்றால் நான் கிடையாது. அதன்பிறகு மக்கள் சக்தி தான். மக்கள் சக்தி இல்லாமல் இந்த வடிவேலு கிடையாது.

ஏன் நடிக்க மாட்டிறீங்கனு கேட்கிறாங்க.? சீக்கிரமே பெரிய என்ட்ரியோடு வருவேன். வாழ்க்கைன்னா சைத்தான், சனியன் இருக்கும். என் வாழ்வில் இல்லாமல் இருக்குமா, அங்கங்க ரெண்டு இருக்கத்தான் செய்து” என பேசியுள்ளார் வடிவேலு.

vadivelu talks about his re entry in kollywood

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத கல்விமுறை; சூர்யா சூடான அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு பயத்தில் 3 மாணவர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

இது தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவும் இல்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

அவரது அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது…

நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.

Suriyas statement about NEET exam and Education system

‘சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் கமல்-சிம்பு..; இது பாரதிராஜாவுக்கு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதிராஜா இயக்கி கமல், ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி வெளியான சூப்பர் ஹிட் படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’.

கிட்டதட்ட 30 வருடங்கள் ஆன இந்த படத்தின் 2ம் பாகம் வெளிவருமா? என்று சில ஆண்டுகளாக கேள்விகள் எழுந்தன.

கூடவே கட்டுக்கதைகளும் உலா வரத் தொடங்கியது.

இதனிடையில் பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கத்தில் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அது என்ன ஆனதோ? அதன்பின் தகவல்கள் ஒன்றுமில்லை.

தற்போது ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் முக்கிய வேடத்தில் கமல்ஹாசன் நடிப்பார் எனவும் புதிய தகவல் கோலிவுட்டில் உலா வருகிறது.

இது பாரதிராஜாவுக்கு தெரியுமா? அல்லது இதுவும் வழக்கம்போல் வதந்திதானா என்பதுதான் தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ உருவானால் நாங்களே முறைப்படி அறிவிப்போம் என பாரதிராஜா தரப்பில் சொல்லப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Kamal and Simbu may joins together for sigappu rojakkal 2

தலைவி-குயின் படத்துக்கு தடை விதிக்க முடியாது.; ஐகோர்ட் தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலர் திரைப்படமாக்கும் முயற்சியில் உள்ளனர்.

தலைவி என்ற படத்தில் விஜய் இயக்க ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணவத் நடித்து வருகிறார்.

அதே போல குயின் என்ற இணையதள தொடரை கவுதம் மேனன் இயக்க ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

இந்த படங்களை தன் அனுமதியில்லாமல் எடுக்க கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அடிக்கடி கூறிவந்தார்.

இந்த நிலையில், தலைவி, குயின் படங்களை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும் கூடாது. அதற்கு தடை விதிக்கக் கோரி தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம்…

முழுக்க முழுக்க இது கற்பனைப் பாத்திரம் மட்டுமே என்று குறிப்பிடுவதால் அந்த படங்களுக்கு விதிக்க முடியாது என்று ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

No ban for Thalaivi and queen web series

நீங்க வந்தா வர்றோம்..; முதல்வர் வேட்பாளர் ரஜினிக்கே ஆதரவு.. இல்லன்னா.. – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் அரசியல் வருகை குறித்து அடிக்கடி தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

தற்போது மீண்டும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்…

“தலைவர் (ரஜினிகாந்த்) தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.

கடந்த வாரம் நான் ஒரு ட்வீட் போட்டதும் மீடியா நண்பர்கள் உள்ளிட்ட பலரும் எல்லா கட்சியும் உங்களுக்குச் செய்துள்ளது என்றும் அனைவரையும் மதிப்பதாகவும், ரஜினி கட்சி தொடங்கினால் நீங்கள் அவரை ஆதரிக்கவுள்ளதாகவும், ஏனெனில் மற்றவர்களைத் தவறாகப் பேசும் எதிர்மறை அரசியல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர்.

மேலும் ரஜினியை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் ஒருவரை ஆதரிப்பீர்களா என்றும் கேட்கின்றனர்.

இன்று இப்போது இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் தலைவர் முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

லீலா பேலஸ் ஹோட்டலில் தனது முடிவை அவர் அறிவித்த போது, நான் அவரது முடிவை ஆதரித்து ட்வீட் செய்தேன். ஏனென்றால் நான் அவருக்கு எதிராக செயல்பட விரும்பவில்லை. ஆனால் முழு மனதோடு என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் மட்டுமல்ல அனைத்து ரசிகர்களும் அப்படியே உணர்ந்ததாக நினைக்கிறேன். ஒவ்வொரு வாரமும் நான் தலைவரிடம் இதைப் பற்றி நான் பேசும்போது கூட அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

எனவே தலைவர் முதல்வர் வேட்பாளராக நின்றால் மட்டுமே நான் அவருக்காகச் சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன். மற்றவர்களுக்கு அல்ல. அவரை சம்மதிக்க வைக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

இல்லையென்றால் தொடர்ந்து நான் என்னுடைய சேவையைத் தனிப்பட்ட முறையில் செய்வேன். தலைவர் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்து முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று என்னுடைய பணிவான வேண்டுகோளை வைக்கிறேன்.

எதிர்காலத்தில் அவர் விரும்பினால் யாரையாவது தேர்வு செய்யட்டும், ஆனால் இப்போது அவரே முதல்வராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதை அவருடைய அனைத்து ரசிகர்களும் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் இது நடக்கும் என்று என் மனம் சொல்கிறது.

நீங்க வந்தா நாங்க வரோம். இப்ப இல்லன்னா எப்போ…

நவம்பர்?”

இவ்வாறு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Rajini must reconsider his partys CM candidate says Lawrance

More Articles
Follows