கமலுக்கு ஆதரவு சொன்னீங்க; ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார்; இப்போ சொல்லுங்க ஆர்கே.சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு (செப்டம்பர் 2017 23ஆம் தேதி) முன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷ்.

அப்போது தான் திருமணம் செய்யப்போகும் சீரியல் நடிகை திவ்யாவை அறிமுகம் செய்துவைத்தார்.

அதை தொடர்ந்து அவர் பேசும்போது கமலின் அரசியல் அனுகுமுறை, அவரின் திட்டமிடல், தெளிவான முடிவு என்னை கவர்ந்துள்ளது. எனவே கமல் அரசியலுக்கு வந்தால் அவருக்குதான் என் ஆதரவு என்றார்.

மேலும் கடந்த 20 வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தெளிவான முடிவு எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் கடந்த (டிசம்பர் 31, 2017) சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். கட்சி விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளார்.

இப்போது ஆர்.கே.சுரேஷின் ஆதரவு நிலைப்பாடு என்ன? என்பதை அவர் சொல்வாரா?

Will Actor RKSuresh support for Rajinis political entry

தன் அரசியலுக்கு பிள்ளையார்சுழி போட்ட பாட்ஷா தயாரிப்பாளரை சந்தித்தார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்எம்.வீரப்பன் தயாரித்த ‘பாட்ஷா’ பட வெற்றி விழாவின்போது ஜெயலலிதா ஆட்சி பற்றி கடுமையாக விமர்சித்தார் ரஜினிகாந்த்.

இதனால் அப்போது அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனை பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.

அப்போதுதான் ரஜினியின் அரசியல் வாய்ஸ் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்று அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் ரஜினிகாந்த்.

அதுபற்றிய விவரம் வருமாறு…

சென்னை தியாகாராய நகர் திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்குச் சென்ற நடிகர் ரஜினி காந்த் அவரைச் சந்தித்துப் பேசினார்.

சுமார் 10 நிமிடம் வரை நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின் அவர் புறப்பட்டுச் சென்றார்.

ஆர்.எம்.வீரப்பன் நடிகர் ரஜினியின் நீண்ட கால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்…: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே தன் அரசியல் பிரவேசத்தை அதிரடியாக அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.

அவருக்கு ஒரு சில எதிர்ப்பு வந்தாலும், பல்வேறு தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது.

ஆதரவு வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால்.

ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்து செய்தியாளர்களிடம் விஷால் பேசுகையில்…

“கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார்.

அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் அரசியல்ல இறங்கிட்டார்.

நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன்.

அவருக்கு உதவியா இருப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்த ஆசை..; ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் கட்சி அறிவித்த பின்னர் ரஜினி மீடியாக்களிடம் மனம் திறந்து பேசி வருகிறார்.

கட்சி அறிவிப்பு, ரஜினி மன்றம் இணையதளம் ஆகியவற்றை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த்.

அவர் பேசியதாவது..

1996-ம் ஆண்டு காலத்திலேயே மீடியா பயம் எனக்கு வந்துடுச்சி.

இப்போ அரசியல் களம் வந்துவிட்டேன். எப்படி மீடியாக்களை சமாளிப்பது என்றே எனக்கு தெரியல.

சொல்ல வேண்டியதை எல்லாம் கூட்டத்திலே சொல்லிடுறேன். அப்புறம் பேட்டியில என்ன சொல்றதுனு குழப்பமா இருக்கு. கேமராவ பாத்ததும் டக்குனு பேச முடியல.

அரசியலுக்கு நான் புதுசு. மீடியா ஒத்துழைப்பு இல்லாம நான் எதுவுமே செய்யமுடியாது.

எனவே நான் அப்பப்போ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா தயவுசெஞ்சு மன்னிசுக்கோங்க.

எல்லோருக்கும் பொறுப்பு இருக்கு. எல்லாமே தமிழகத்தில் இருந்து தான் தொடங்குது.

இங்கிருந்து தொடங்கி, அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்துனும்னு எனக்கு ஆசை. அது இந்த தலைமுறையில் நடக்கனும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்க.

ஒரு முறையான பத்திரிகையாளர் சந்திப்பு விரைவில் நடக்கும். அப்போது உங்களை சந்தித்து நிறைய பேசறேன்.” இவ்வாறு ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசினார்.

I want to create Political Revolution in Tamilnadu Rajini open talk

ரம்ஜான் தினத்தில் வருகிறார் சாமி; காத்திருக்கும் விக்ரம் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிங்கம் 3 படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் சாமி ஸ்கொயர் படத்தை இயக்கி வருகிறார் ஹரி.

சாமி படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வந்தாலும் இப்படத்தில் முதல்பட நாயகி த்ரிஷா நடிக்கவில்லை.

நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.

பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் பிரபு, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

காரைக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதுவரை படத்தின் 50% சூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகிற ஜுன் 14ல் ரம்ஜான் பண்டிகையில் இப்படத்தை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Saamy Square movie set to release on Ramzan 2018

அருவி படத்திற்கு முன்பே அஜித்துடன் நடித்த அதிதிபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒருசில நடிகர்களுக்கு மட்டுமே முதல் படமே ஆஹா ஓஹோ என்று பேசப்படும் வகையில் அமையும்.

சிவாஜி கணேசனுக்கு பராசக்தி, கார்த்திக்கு பருத்தி வீரன் ஆகிய படங்களை சொல்லலாம்.

அதுபோல் அண்மையில் அதிதிபாலனுக்கு அப்படி அமைந்த படம்தான் அருவி.

இவரையும் இந்த படத்தையும் பாராட்டாதவர்களே இல்லை என்னுமளவுக்கு இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அருவி படத்திற்கு முன்பே அதிதி ஒரு படத்தில் நடித்துள்ளார். அதுவும் அஜித்துடன் நடித்துள்ளார் என்ற தகவல்கள் தற்போது வந்துள்ளன.

அஜித், த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா வரும் காட்சிகள் இவரும் இடம் பெற்றிருக்கிறார்.

தற்போது அந்த படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Before Aruvi movie Aditi Balan acted with Ajith

More Articles
Follows