ட்விட்டர் அரசியல்வாதி எங்கே..? கமலை கலாய்க்கும் தமிழிசை

ட்விட்டர் அரசியல்வாதி எங்கே..? கமலை கலாய்க்கும் தமிழிசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal tamilisaiநடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்சனின் தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதற்கு திரையுலகின் பல்வேறு அமைப்பினர்கள் தங்களது அனுதாபத்தை தெரிவித்து, தற்கொலைக்கு காரணமான அன்புசெழியனை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்தனர்.

ஆனால் சினிமாத் துறையில் உள்ள முன்னணி நடிகரான கமல் இது குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து கமல்ஹாசனை தேடி கலாய்க்கும் வகையில் பாஜக. வை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

Dr Tamilisai Soundararajan‏Verified account @DrTamilisaiBJP
தன்துறைசார்ந்ததுக்கம்தன்னைஏற்றிவிட்டதுறையில் பெரும்துயரம்பகிர்ந்து கொள்ளா கொடூரஅமைதி திடீர் டுவிட்டர்அரசியல்வாதிகள் எங்கே?தேடத்தான்வேண்டும்!

Why Kamal didnt speak about Producer suicide asks Tamilisai Soundararajan

அஜித்தால் எனக்கு விளம்பரம் தேவையில்லை.. சுசீந்திரன்

அஜித்தால் எனக்கு விளம்பரம் தேவையில்லை.. சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suseenthiran speech about Ajith and Naan Kadavul issueபிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனைக் கண்டிக்கும் வகையில் இயக்குனர் சுசீந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் நடிகர் அஜித்தையும் ஒரு முறை அன்பு செழியன் மிரட்டினார்.

இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் எனத் தெரிவித்தார்.

இதனையறிந்த அஜித் ரசிகர்கள் இதை ஏன் இப்போ தெரிவிக்கிறீர்கள். அன்புவிடம் நீங்களும் கடன் வாங்கியிருக்கிறீர்களா.

அஜித்தை வைத்து விளம்பரம் தேடுகிறீர்களா?” என கேள்விகள் கேட்டுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த சுசீந்திரன், “அன்புசெழியன் இல்ல யாரிடமும் 1 ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை. அஜித் பற்றி பேசி விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை.

அன்புசெழியன் பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Suseenthiran speech about Ajith and Naan Kadavul issue

சினிமாவுலேயே இருக்க முடியாது.. அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்?

சினிமாவுலேயே இருக்க முடியாது.. அஜித்தை மிரட்டிய அன்புசெழியன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Anbu Cheziyan warning Ajith to act in Naan Kadavul movieபிதாமகன் படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் நான் கடவுள் என்ற படத்தில் அஜித் நடிக்கவிருந்தார்.

இதற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நீண்ட தலைமுடி தாடியுடன் வழக்கம்போல பாலா பட நாயகன் போல காத்திருந்தாராம் அஜித்.

ஆனால் முடியும் தாடியும் மட்டும் வளர்ந்ததே தவிர படம் சரியாக தொடங்கப்படவில்லையாம்.

இதனால் வெறுத்துப்போன அஜித் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம்.

அஜித்தின் இந்த முடிவு பாலா தரப்பை ஆச்சரியத்தில் ஆழ்த்த கட்டபஞ்சாயத்து தொடங்கியுள்ளது.

அஜித்தை அவர்கள் வற்புறுத்த இனி நடிக்க முடியாது என மறுத்து அட்வான்ஸ் தொகையை தர சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியாக ஒரு பஞ்சாயத்து சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடைபெற்று உள்ளது.
அங்கு அஜித்தை வரவைத்து மிரட்டி பார்த்துள்ளனர். அப்போதுதான் மதுரையிலிருந்து அன்புச் செழியன் அவரது அடியாட்களுடன் வந்த மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது…. ‘பேசாம இந்த படத்தில் நடிச்சிரு… இல்லன்னா தமிழ் சினிமாலயே இருக்க முடியாது’ என எச்சரித்தார்களாம்.

ஆனால் அதற்கெல்லாம் அசராத அஜித், தன் தற்காப்புக்காக வைத்திருந்த ஒரு துப்பாக்கிய எடுத்து நீட்டினாராம். இது லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியாம்.

அதன்பின்னர் பஞ்சாயத்து குழு அங்கிருந்து பதறி அடித்துக் கொண்டு ஓடியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Producer Anbu Cheziyan warning Ajith to act in Naan Kadavul movie

அரசியல் எப்போது? ரசிகர்கள் சந்திப்பு எப்போது? ஏர்போர்ட்டில் ரஜினி பேட்டி

அரசியல் எப்போது? ரசிகர்கள் சந்திப்பு எப்போது? ஏர்போர்ட்டில் ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini says political entry will not happen nowசில மாதங்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்தபோது போர்வரும் போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.

எனவே அவரின் அரசியல் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்க தொடங்கினர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் சென்னை விமான நிலையத்தில பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

காலா பட சூட்டிங் முடிவடைந்துவிட்டது.

தற்போது களத்தில் (அரசியல்) இறங்க வேண்டியதற்கு அவசரம் இல்லை.

பிறந்தநாளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பேன் என பேட்டியளித்தார் ரஜினிகாந்த்.

Rajini says political entry will not happen now

நடிகன் நாடாள வந்துடுவானோ என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்: எஸ்ஏசி

நடிகன் நாடாள வந்துடுவானோ என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்: எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sa chandrasekar“வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார்.

அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார்.

விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு நடிகராக தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரும் கலந்துகொண்டார்.

பாஜக நபரை மேடையில் வைத்துக் கொண்டே, பத்மாவதி பிரச்சனையோடு பேச ஆரம்பித்தார் நடிகர் ஆரி. “கருத்து சுதந்திரம் குறித்து எல்லோரும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம்.

ஆனால் இப்போது சினிமாக்காரர்கள் மட்டுமல்ல நாடு முழுவதுமே கருத்து சுதந்திரம் குறித்த கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சியின் பொறுப்பாளர் நம்மோடு இங்கே மேடையில் இருக்கிறார்.

அவரிடம் சொன்னால் நமது பிரதமர் மோடியிடமே சொன்னது போலாகும். அதனால், தயவு செய்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் என்று இந்த மேடையின் வாயிலாக ஒரு தமிழனாக வேண்டுகோள் வைக்கிறேன்” என்று திரியைப் பற்ற வைத்தார்.

ஆரி பற்ற வைத்த சிறு நெருப்பை, பெரு நெருப்பாக மாற்றினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். “நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் எனது நேரம் தவறாமையே காரணம்.

நேரத்தைக் கடத்தாமல் ஒவ்வொரு நொடியையும் பொன்போல மதித்து நடந்தாலே வெற்றி பெறலாம். அண்ணன் பி.டி.அரசகுமார் பேசும்போது, ஒரு நடிகர் ஒரு தவறான கருத்தை பேசும்போது அது எளிதில் மக்களை சென்றடைவதாக சொன்னார்.

இதற்கு நான் பல பேட்டிகளில் பதில் சொல்லிவிட்டேன், இருந்தாலும் இந்த மேடையிலும் சொல்கிறேன். சினிமா வேறு, அரசியல் வேறு, வாழ்க்கை வேறு. சினிமாவில் கொடூரமான வில்லன்களாக நடிப்பவர்கள் நேரில் குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதேபோல் நம்மோடு குழைந்து பேசுபவர்களும் சில நேரங்களில் நம் கழுத்தறுத்து விடுவார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞரை கைது செய்த போது, கண்டித்து ஒரு பக்க அளவிற்கு பத்திரிக்கையில் கண்டனம் செய்தவன் நான்.

நான் எந்த கட்சியையும் சாராதவனாக இருந்தாலும், கலைஞரை எனக்கு பிடிக்கும் என்கிற காரணம் தான் அது. ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் அவரது கம்பெனியில் படம் இயக்க என்னை ஒப்பந்தம் செய்தார்.

அப்படித்தான் அப்போதைய அரசியல்வாதிகள் இருந்தார்கள். அவர்கள் அரசியலையும் சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்தறிகிற ஆற்றலும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கெல்லாம் அந்த பக்குவமும், நம்பிக்கையும் இல்லை. எங்கே ஏதாவது ஒரு நடிகன் நாடாள வந்துவிடுவானோ? என்ற பயத்திலேயே இருக்கிறார்கள்.

அதனால் தான் இவர்களால் சினிமாவையும், அரசியலையும் வேறு வேறாக பிரித்தறிய முடியவில்லை. “விசிறி” படம் “அஜித்-விஜய்” ரசிகர்கள் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.

இந்த பிரச்சனை இப்போது மட்டும் இல்லை, எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய ஒன்று. ரசிகர்களே சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகிறார்கள், ரசிகர்கள் இல்லாவிட்டால் இங்கு சூப்பர் ஸ்டார்கள் இல்லை.

இந்த சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டாலும், நடிகர்கள் நண்பர்களாக ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். அதனை உணர்ந்து இரு தரப்பு ராசிகர்களும் ஒன்றிணைந்தால் புது சரித்திரத்தையே இங்கு உருவாக்க முடியும்.

அதேபோல எல்லா நடிகர்களுடைய ரசிகர்களும் ஒன்றிணைந்தால் தவறு செய்கிற அரசியல்வாதிகள் எல்லாம் தலைதெறிக்க ஓடி விடுவார்கள். ஊழல்வாதிகள் எல்லாம் ஒழிந்து போவார்கள்.

அந்த இளைஞர்களால் மட்டுமே நம்முடைய வரிப்பணத்தை எல்லாம் தங்கள் பைகளில் போட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகளை பஞ்சு பஞ்சாக விரட்டியடிக்க முடியும். அந்த காலம் வந்துவிட்டது, மெரினாவில் கூடிய இளைஞர் பட்டாளமே அதற்கு சான்று.

இளைஞர்கள் வந்துவிட்டார்கள், இனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவும். நான் பாஜகவையும் சேர்த்து தான் சொல்கிறேன். தமிழர்கள் நாங்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற கோட்பாட்டில் வாழ்பவர்கள்.

இங்கு தேவையில்லாமல் ஜாதியையும், மதத்தையும் ஏன் திணிக்கிறீர்கள்? நாடாள்கிற ஒரு கட்சியின் முக்கியமான பதவியிலிருக்கும் ஒருவர் பொறுப்பில்லாமல் ஜாதி, மத அடிப்படையிலான கருத்துக்களை சொல்வது எவ்வளவு மோசமான செயல்?

இங்கிருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்யக் கிளம்பிவிடுகிறார்கள். படத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த வசனம் இடம்பெறுகிறது என்பதைக் குறித்து எந்த கவலையும் இல்லை. தயவுசெய்து மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ் சினிமாவை வாழவிடுங்கள்” என்று பேசினார்.

பாஜக பிரமுகரை வைத்துக் கொண்டே எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படியெல்லாம் பேச, அரங்கமே அதிர்ந்தது.

Politicians getting afraid of Actors entry in politics says Vijay dad SAC

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்
கதாநாயகர்கள் : ‘ராம்சரவணா’ & ‘ராஜ் சூர்யா
கதாநாயகி:ரெமோனா ஸ்டெபனி
ஒளிப்பதிவு: விஜய் கிரண்,
இசை: தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர்
எடிட்டிங்: வடிவேல் – விமல்ராஜ்,
வசனம்: பித்தாக் புகழேந்தி
பாடல்கள்: மதன் கார்க்கி, ஞானகரவேல், ரேஷ்மன் குமார், ஸ்ரீ ராவன்
இணை தயாரிப்பு : பூமா கஜேந்திரன், S. சரஸ்வதி சரண்ராஜ், N.K. ராஜேந்திர பிரசாத் (துபாய்)”.
நிர்வாக தயாரிப்பு : A.P.பிரகலாதன், கர்ணன் மகாலிங்கம், V.ராஜேஸ்வரி
கதை, திரைக்கதை, இயக்கம் : வெற்றி மகாலிங்கம்

அரசியல் என்ட்ரீக்கு ஸ்கெட்ச் போடும் அஜித்; ரகசியம் உடைத்த ஆரி

அரசியல் என்ட்ரீக்கு ஸ்கெட்ச் போடும் அஜித்; ரகசியம் உடைத்த ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor aari and ajithநடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா காலம் தொட்டே இது நடந்தேறி வருகிறது.

கமல்ஹாசன் தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார்.

அண்மைக் காலமாக ரஜினி, விஜய் ஆகியோர் விரைவில் அரசியலுக்கு வரக்கூடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வரக்கூடும் என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள விசிறி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகர் ஆரி பேசியதாவது…

அஜித் அரசியலுக்கு வருவாரா? எனத் தெரியவில்லை. ஆனால் அவர் இப்போதே தமிழ் நாட்டின் வரைப்படத்தை வைத்து நலத் திட்டங்களை தீட்டி வருகிறார்.

தமிழகத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற வேண்டும் என அவர் திட்டம் வைத்திருக்கிறார். இதை அஜித்துக்கு நெருங்கிய நபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

வெளியே சொல்லக்கூடாது என்றார். ஆனால் இப்போது சொல்லிவிட்டேன். என அஜித் ரகசியத்தை போட்டு உடைத்தார் நடிகர் ஆரி.

More Articles
Follows