திருமணத்தை வெறுக்கும் நடிகைகள் வரலட்சுமி & த்ரிஷா.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை பொறுத்த வரை நடிகர்கள் 35 வருடங்களாலும் ஆனாலும் இளைஞர்கள் போல் காதல் செய்து நடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் நடிகைகளின் மார்கெட் குறைந்த காலம்தான். அவர் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் கோயிலே கட்டினாலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்களுக்கு ஹீரோயின் வேடம் கிடைப்பது இல்லை.

அதுவும் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவ்வளவுதான். சினிமாவை விட்டே ஒதுக்கிவிடுவார்கள்.

எனவே சில நடிகைகள் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் நடித்து வருகின்றனர்.

முக்கியமாக த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, வரலட்சுமி உள்ளிட்டோர் 30 வயதை கடந்தும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் யாரும் இன்னும் திருமணம் செய்யவில்லை.

அனுஷ்கா யாரை திருமணம் செய்துக் கொள்வார் என்பது புதிராக உள்ளது. விக்னேஷ் சிவனை திருமணம் செய்வாரா நயன்தாரா? அல்லது சிம்பு, பிரபுதேவா போல இவரையும் கழட்டி விடுவாரா? என்பது இதுவரை தெரியவில்லை.

இதில் நடிகை த்ரிஷா ராணாவுடன் காதல் கொண்டார். அது முறியவே வருண் மணியன் என்பவரை நிச்சயம் செய்தார். ஆனால் அதுவும் திருமணத்தில் முடியவில்லை.

எனவே திருமண வாழ்க்கையை வெறுப்பதாக கூறி வருகிறார்.

அதுபோல் சமீபத்தில் நடந்த கன்னி ராசி பட பிரஸ் மீட்டில் தான் திருமணம் செய்துக் கொள்ள போவதில்லை என அறிவித்தார் வரலட்சுமி.

இவரும் விஷாலும் நெருக்கமாக இருந்து பின்னர் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Why Actress Trisha and Varalakshmi refuse to get married

BREAKING ஹிந்தி எதிர்ப்பு: ரஜினி பதிலடியால் ஆடி போன அமித்ஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 14ஆம் தேதி ‘இந்தி தினம்’ கொண்டாடப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அமித் ஷா, நாடு முழுவதும் இணைக்கும் மொழி இந்தி எனக் கூறியிருந்தார்.

எனவே மற்ற மொழி பேசும் மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் இருந்து பயங்கர எதிர்ப்பும் உருவானது.

இதற்கு பல பேர் பலவிதமாக கருத்து கூறினாலும் அமித்ஷா அமைதி காத்தார்.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் ஹிந்தி எதிர்ப்பு குறித்து பேசியது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பல மொழிகள் பேசும் இந்தியாவில் ஹிந்தி போன்ற பொது மொழி தேவையில்லை என்று காலையில் தன் கருத்தை தெரிவித்திருந்தார்.

தற்போது மாலை வேளையில் அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

‘பூர்வதயா இந்துஸ்தான்’ என்ற நிகழ்ச்சி ஒன்று ராஞ்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அவர் பேசியுள்ளதாவது..

‘இந்தி தினத்தன்று நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்துதான் வருகிறேன். நான் இந்திய மொழிகளை வலிமைபடுத்த வேண்டும் என்றுதான் கூறினேன்.

மேலும் ஒரு குழந்தை தனது தாய்மொழியில் படிக்க தெரிந்தால் மட்டும் தான் சிறப்பாக படிக்க முடியும். தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.

மொழிகளை வலிமைப்படுத்த தவறினால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்று நமது மொழி எது எனத் தெரியாமலே போய்விடும்” என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.

Amit Shah latest reaction to Hindi Imposition in India

BREAKING பிகில் & கைதி படத்துடன் மோதும் ‘பெட்ரோமாக்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு தீபாவளி வருகிற அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முன்பே அதாவது 24ஆம் தேதி படங்கள் வெளியாகவுள்ளன.

நிறைய படங்களின் ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய படங்கள் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் தமன்னாவின் புதிய படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.

தமன்னா நடிப்பில் திகில் கலந்த காமெடியில் உருவாகியுள்ள படம் பெட்ரோமாக்ஸ்.

அதே கண்கள் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவருடன் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட், பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.

இப்படம் தெலுங்கில் டாப்ஸி, கிஷோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Petromax clash with Bigil and Kaithi on Diwali

ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. அதன் இயக்குனர் எஸ் சாய் வசந்த் இந்த பெருமதிப்பு மிக்க விருதை, விழா இயக்குனர் ஹரிகி யாசுஹிரோ மற்றும் திரைப்பட விழா கமிட்டியின் தலைவர் குபோடா இசாவ்விடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

விருதை பெற்றுக்கொண்ட இயக்குனர் சாய் வசந்த் நெகிழ்ச்சியுடன் பேசுகையில்,
“இந்த பிரசித்தி பெற்ற ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ வென்றிருக்கும் விருது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. ஆத்மார்த்தமாக விழா குழுவை பாராட்டும் இந்த வேளையில், எனது எழுத்தாளர்கள், கதையின் நாயகர்கள், மறைந்த திரு அசோகமித்திரன், மறைந்த திரு ஆதவன், புகழ்மிக்க திரு ஜெயமோகன் ஆகியோரையும் பாராட்டி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த அவர்களை பாராட்டுவதில் பெருமிகிழ்ச்சி கொள்கிறேன்.”

இவ்விழாவில் கலந்து கொள்வதற்கென இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். செப்டெம்பர் 15ல் திரையிடப்பட்ட இப்படம், அனைவரின் வெகுவான கவனத்தையும் சிறப்பான பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. மீண்டும் இத்திரைப்படம் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திரையிடப்பட இருக்கிறது.

வசனகர்த்தாவாக மாறிய பாடலாசிரியர் முருகன் மந்திரம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முருகன் மந்திரம், ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம் நடிப்பில், முன்னாள் கப்பல்படை வீரர் ப்ராஷ் இயக்கும் “ஆபரேஷன் அரபைமா” படத்தின் மூலம் வசன கர்த்தாவாகி இருக்கிறார்.

வசனம் எழுதுவது குறித்து முருகன் மந்திரம் கூறும்போது, “பாடல் எழுதுவதை விட, வசனம் எழுதுவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு பாடல் எழுதும்போது அதன் சூழலை, இயக்குநரின் எதிர்பார்ப்பை, கதாபாத்திரங்களின் உணர்வை, நமது வார்த்தைகளின் மூலம் மெட்டுகளுக்கு பொருத்தினால் போதும்.
ஆனால், வசனம் எழுதும்போது, கதை, கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்விட பின்னணி, பேச்சு மொழி பின்னணி, கதாபாத்திரத்தின் அப்போதைய மனநிலை, இயக்குநர் பேச விரும்பும் கருத்து, இப்படி நிறைய விசயங்களை தெரிந்து வசனம் எழுதினால் தான், படம் பார்க்கிறவர்கள் அந்த படத்தோடு, கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியும்.

ஆபரேஷன் அரபைமா, ஒங்கள போடணும் சார் என இரண்டு படங்களுக்கு வசனம் எழுதியது வேறு வேறு மாதிரியான அனுபவம். கதையின் தன்மை இரண்டு படங்களுக்கும் மொத்தமாக வேறுபட்டது. அந்தந்த படத்திற்கான தேவையைப் பொருத்து வசனங்களை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து டைம் அண்ட் டைட் ஃப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “பிரளயம்”, “மிலிடெரி” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதுகிறேன், என கூறுகிறார்.

இன்றே விஜய் ரசிகர்களுக்கு ‘பிகில்’ இசை விருந்தளிக்கும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கியுள்ள படம் ‘பிகில்’.

ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார்.

இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நாளை அனைத்து பாடல்களும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘உனக்காக’ எனும் ரொமாண்டிக் பாடல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார்.

Unakaga Romantic 3rd Single from Bigil movie today

More Articles
Follows