தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது ரஜினி வரும் நாளையே எதிர்பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஓய்வுக்காக ரஜினி அமெரிக்கா சென்றதும், அதன்பின்னர் அங்கு 2.0 பட வேலைகளிலும் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.
இதனிடையில் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியதால் தற்போது ரஜினியின் இந்தியா வருகையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முக்கியமாக தயாரிப்பாளர் தாணுவும், இயக்குனர் ஷங்கர் எதிர்நோக்கி உள்ளனர்.
ஜூலை 3 ஆம் தேதி சென்னை திரும்புவார் ரஜினி என கூறப்படுகிறது.
ரஜினி வந்தபிறகுதான் ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என காத்திருக்கிறாராம் தாணு.
அதுபோல் ரஜினி வந்தவுடன் ‘2.0’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க காத்திருக்கிறார் ஷங்கர்.
