வாட்ஸ் அப் போடும் கன்டிசன்கள்… தெறித்து ஓடும் பயனாளர்கள்..; சிக்னல் டெலிகிராம் பயன்படுத்த பரிந்துரை

வாட்ஸ் அப் என்ற செயலி பலரது வாழ்க்கையை மாற்றிவிட்டது எனலாம்.

காலையில் எழுந்தவுடன் பல் கூட தேய்க்காமல் வாட்ஸ் அப் ஆன் செய்து பார்ப்பதையே பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.. (நான் உட்பட)

கடந்த 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்-ஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலி தன் பயனாளர்களை அவர்களது தொலைபேசி எண், இருப்பிடம் உள்ளிட்ட சுயவிவரங்களை பேஸ்புக்கில் பதிவிட வற்புறுத்தி வருகிறது என்பதை தாங்கள் அறிந்திருக்கலாம்.

வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் “பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் ஆகியவற்றை முகநூல் உள்ளிட்ட தங்கள் நிறுவன ஊடகங்களில் பகிர அழைப்பு விடுத்துள்ளது.

பிப்ரவரி 8ம் தேதிக்குள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியில் நுழைய முடியாது என கூறப்படுகிறது.

இதனால் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை விட்டு வெளியேறி மற்ற செயலிகளை பயன்படுத்த நேரிட்டுள்ளது.

இதனையடுத்து சிக்னல், டெலிகிராம் போன்ற என்கிரிப்டட் செயலிகளை பயன்படுத்துமாறு உலகின் நம்பர் 1 பணக்காரரான டெல்ஸா நிறுவன அதிபர் எலோன் மஸ்க் பரிந்துரை செய்துள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

WhatsApp update Signal and Telegram apps alternatives for privacy seekers

Overall Rating : Not available

Latest Post