தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி.
இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் அட்லி.
மேலும் சினிமா பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் செப்டம்பர் 21ல் தனது 37-வது பிறந்தநாளை அட்லி கொண்டாடி இருந்தார்.
ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி இருந்தனர்.
இந்த நிலையில், நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கான் உடன் தான் இருக்கும் படத்தை அட்லி பகிர்ந்துள்ளார்.
“பிறந்த நாளில் இதைவிட வேறென்ன நான் கேட்டுவிட முடியும். அன்பான ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன், என்னோட தளபதி விஜய்” என பதிவிட்டுள்ளார் அட்லி.
அந்த போட்டோவில் மூவரும் ப்ளாக் உடையில் கெத்தாக நிற்கின்றனர்.
What more could I ask for on a birthday – Atlee