சமந்தாவை தாக்கியுள்ள மயோசிட்டிஸ் நோயின் அறிகுறிகள் என்ன.?

சமந்தாவை தாக்கியுள்ள மயோசிட்டிஸ் நோயின் அறிகுறிகள் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தாவும்…. மயோசிட்டிஸ் நோய் அறிகுறிகளும்…

சில மாதங்களுக்கு முன்பு மயோசிட்டிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) நான் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் நான் நினைத்ததை விடவும் குணமாக இன்னும் நாள் ஆகும் எனத் தெரிகிறது.

எப்போதும் தைரியமாக இருக்க வேண்டியதில்லை என்பதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறேன். நோயின் பாதிப்பை ஏற்றுக்கொள்ள இன்னும் கடினமாக உள்ளது.

நான் விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என மருத்துவர்கள் முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல நாள்கள், மோசமான நாள்கள் என இரண்டையும் எதிர்கொண்டுள்ளேன்.

இந்த நாளை என்னால் எதிர்கொள்ள முடியாது எனத் தோன்றிய போது அதுவும் கடந்து சென்றிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு நாளில் குணமாகி விடும் தருணத்தை நெருங்கி விட்டேன் என்று தான் நினைக்கிறேன்.

இதுவும் கடந்து போகும் என்று கூறியுள்ளார். மேலும் சிகிச்சை பெற்றுக் கொண்டே டப்பிங் பணியில் ஈடுபடும் புகைப்படத்தையும் சமந்தா பகிர்ந்திருந்தார்.

சமந்தா தற்போது பகிர்ந்திருக்கும் இந்த மயோசிட்டிஸ் என்று அழைக்கப்படும் தசை அழற்சி நோய் என்றால் என்ன? அது எப்படிப்பட்ட பிரச்னைகளை கொடுக்கும் என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது.

அதாவது, மயோசிட்டிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் என்பது, உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம் என்று பொதுவாகக் கூறலாம். இந்நோய்க்கான காரணம் உடலில் நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் வேறுபாடு.

இந்த நோயால் பாதிக்கப்படும் ஒருவரின் உடல் தசைகள் மீது அவரது நோய் எதிர்ப்பாற்றல் நடத்தும் தாக்குதலால் தசைகள் பாதிக்கப்படும்.

இது பொதுவாக கை தசைகள், தோள்பட்டை, கால்கள், இடுப்பு, அடிவயிற்று தசைகளைத்தான் தாக்கும். இந்த நோய் தாக்கினால், காய்ச்சல், எடை குறைப்பு, மூட்டு வலி, மயக்கம், தசைகளில் வலி உருவாகும்.

நோயின் ஆரம்பக்கட்டத்தில், பாதிக்கப்பட்டவர் எழுந்து நடக்கவே சிரமப்படுவார். நோய் தீவிரமாகும் போது அமர்ந்திருந்தால், எழுந்து நிற்கவும், உறங்கும் போது தனது நிலையை மாற்றவும் கூட சிரமப்படுவார்.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், இந்த பாதிப்பு உடலில் இதர தசைப்பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உண்டு. இதனால் திரவ உணவுகளைக் கூட விழுங்க முடியாமல் அவதிப்படக்கூடும். உரிய சிகிச்சை அளிக்காத நிலையில், பாதிக்கப்பட்டவரின் சுவாச மண்டலங்களையும் தாக்கி, நோயாளியால் மூச்சு விட முடியாத நிலையும் ஏற்படலாம்.

ஒரு சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றால் ஏற்படும் இருமல், சளி போன்ற தொந்தரவுகள் கூட ஒரு வகையான தசை அழற்சி நோயை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறதாம். அதையும் தாண்டி, சில வகை பாக்டீரியா மற்றும் இதய நோய் சார்ந்த மருந்துகளும் தசை அழற்சியை ஏற்படுத்துகிறதாம்.

ஆனால், இந்த தசை அழற்சி எனப்படும் மயோசிட்டிஸ் நோயை தடுக்க எந்த வழியும் இல்லை. இது ஒரு உடலில் நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் மாறுபாடு. இதற்கு உரிய காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகையால், இதனை வராமல் தடுப்பது என்பது இயலாத காரியம் என்றும் மருத்துவத் துறை கூறுகிறது.

இந்த நோய் குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. யாருக்கேனும் இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மூட்டு வாத நோய் நிபுணர்களை ஆலோசிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அதாவது, உடலில் பலவீனம், தொடை அல்லது தோள்பட்டை தசைகளில் பலவீனம், சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்து எழுந்து நிற்க முடியாமல் அவதிப்படுவது போன்றவைதான் அறிகுறிகள் என்கிறார்கள்.

தசை அழற்சி நோயை தடுக்க முடியாது என்றாலும், சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை தொடங்கினால், மயோசிட்டிஸ் எனப்படும் தசை அழற்சியை நிச்சயம் குணப்படுத்தலாம்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த்.; சிவகார்த்திகேயனுக்கு பதிலாக அதர்வா.?!

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த்.; சிவகார்த்திகேயனுக்கு பதிலாக அதர்வா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் 2 புதிய படங்களில் நடிக்க உள்ளார்.

இந்த இரண்டு படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் படத்தை ‘டான்’ பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் முக்கியமான கேரக்டரில் நடிகர் சிவகார்த்திகேயனை நடிப்பதாக இருந்தது.

ஆனால் அவரது கால்ஷீட் பிஸியாக இருப்பதால் அதர்வா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆக, ரஜினி – லைக்கா கூட்டணியின் படத்தை சிபி சக்ரவர்த்தி மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளனர்.

இந்த இரு பட அறிவிப்புகள் நவம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

தெலுங்கு இயக்குனரையும் விட்டு வைக்கல.; 7 இயக்குனர்களிடம் கதை கேட்டு ஒருவருக்கு ஓகே சொன்ன ரஜினி

தெலுங்கு இயக்குனரையும் விட்டு வைக்கல.; 7 இயக்குனர்களிடம் கதை கேட்டு ஒருவருக்கு ஓகே சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசை அமைத்து வருகிறார்

இதில் ரஜினியுடடன் ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்

இதன் படப்பிடிப்பு அண்மையில் பாண்டிச்சேரி கடலூர் பகுதிகளில் நடைபெற்றது. அப்போது சில வீடியோக்களும் வெளியாகி வைரலானது.

இதனிடையில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பின் இடையிலும் கூட சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்துள்ளார் ரஜினி.

தேசிங்கு பெரியசாமி, பி.எஸ்.மித்ரன், சிபி சக்ரவர்த்தி, ‘ஜெய் பீம்’ புகழ் த.செ.ஞானவேல், எச். வினோத், அருண்ராஜா காமராஜா ஆகிய தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்துள்ளார்.

இவையில்லாமல் ‘பிம்பிசாரா’ பட தெலுங்கு இயக்குநர் மல்லிடி வாசிஷ்டா என்பவரிடமும் கதை கேட்டாராம் சூப்பர் ஸ்டார்.

இதில் ‘டான்’ பட இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் ரஜினிகாந்த் என்பது கவனிக்கத்தக்கது

அண்மைக்காலமாக விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன் கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தெலுங்கு பட இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ரிக் ஹாப்பியில் கார்த்தி.; ‘சர்தார்’ பட டைரக்டருக்கு கார் பரிசளித்த புரொடியூசர்

ஹாட்ரிக் ஹாப்பியில் கார்த்தி.; ‘சர்தார்’ பட டைரக்டருக்கு கார் பரிசளித்த புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”.

உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P S மித்ரன் அவர்களுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.

விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் வைத்துள்ளது.

டூயட் ஆசையில்லையா? கதையின் நாயகியாகவே நடிப்பது ஏன்.?; ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

டூயட் ஆசையில்லையா? கதையின் நாயகியாகவே நடிப்பது ஏன்.?; ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிரைவர் ஜமுனா படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்,

‘வத்திக்குச்சி’ பட இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.

இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்…

‘ நீண்ட நாள் கழித்து கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவே மகிழ்ச்சியை அளிக்கிறது.

‘கனா’ படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் ‘டிரைவர் ஜமுனா’ வெளியாகிறது.

இயக்குநர் கின்ஸ்லின் கொரோனா தொற்றுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்தத் தருணத்தில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை.
ஏனெனில் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி.

மேலும் அந்த தருணத்தில் ‘க / பெ ரணசிங்கம்’ படத்தை முடித்துவிட்டு, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன்.

என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இதுதான்.

படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர், கதையின் சூழலையும், காட்சியின் சூழலையும் எளிதாக விவரித்ததால், சவாலான காட்சிகளில் கூட சரியாக நடிக்க முடிந்தது. என்னுடைய நடிப்புத் திறன் ரசிகர்களால் பாராட்டப்பட்டால்.. அதற்கான முழு புகழும் இயக்குநரையே சாரும்.‌

‘வத்திக்குச்சி’ படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியிருக்கும் இயக்குநர் கின்ஸ்லினுக்கு இந்த படம் மிகப்பெரிய பாராட்டையும், வெற்றியையும், வரவேற்பையும் அளிக்கும்.

எனது நடிப்பில் உருவான மூன்று திரைப்படங்கள் கொரோனா தொற்று காலகட்டத்தில் டிஜிட்டல் தளங்களில் தான் வெளியானது. ஆனால் ‘டிரைவர் ஜமுனா’ படத்தை பொறுமையுடன் காத்திருந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பெருமளவில் குறைந்து விட்டது.

ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. ‘டிரைவர் ஜமுனா’ அந்த வகையிலான படம் என்பதால், நம்பிக்கையுடன் நவம்பர் பதினொன்றாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன். அதனால் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன்.

இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகள் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

காரிலேயே திரைக்கதை சொல்லும் ‘டிரைவர் ஜமுனா’ இயக்குனர் கின்ஸ்லீ

காரிலேயே திரைக்கதை சொல்லும் ‘டிரைவர் ஜமுனா’ இயக்குனர் கின்ஸ்லீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி, கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கின்ஸ்லின், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், படத்தொகுப்பாளர் ராமர், கலை இயக்குனர் டான் பாலா உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி பேசுகையில்…

”வத்திக்குச்சி’ படத்திற்கு நான் மிகப் பெரும் ரசிகன். கொரோனா காலகட்டத்திற்கு முன் ‘வத்திக்குச்சி’ இயக்குநர் கின்ஸ்லின், ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் கதையை விவரித்தார். கதை கேட்டு முடித்ததும் தயாரிக்கலாம் என முடிவெடுத்தேன்.

அந்தக் காலகட்டத்தில் ‘க / பெ ரணசிங்கம்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இந்தக் கதைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பொருத்தமாக இருப்பார் என எண்ணி, அவரிடம் கதையை சொன்னோம். அவரும் கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களுடைய அர்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். ‘டிரைவர் ஜமுனா’ அற்புதமான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தின் பிரம்மாண்டம் என்பது கதையின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புதான். நவம்பர் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தருணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘ஃபர்ஹானா’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து, ‘டிரைவர் ஜமுனா’ படத்தினை வெளியிடுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் கின்ஸ்லின் பேசுகையில்…

” தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரியிடம் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் கதையை சொன்னவுடன் அவருக்கு பிடித்தது.

அவரிடம் நுட்பமான கதையறிவு உண்டு. கதையில் பல இடங்களில் பல சந்தேகங்களை எழுப்பினார். ஆனால் அதற்கான தீர்வினை நானே எடுக்கும் முழு சுதந்திரத்தையும் வழங்கினார்.

இந்தப் படம், ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் உருவான படம். வாலாஜாபாத் எனும் இடத்திலிருந்து ஈசிஆர் எனும் இடத்திற்கு கூகுளில் பயண நேரம் எவ்வளவு? என்று கேட்டால், ’90 நிமிடம்’ என பதிலளிக்கும். அந்த 90 நிமிடமும், கதை தொடங்கிய பிறகு இருபதாவது நிமிடங்களுக்கு இந்தப் பயணம் தொடங்கும்.

ஆக இரண்டு மணி நேரம் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த திரைப்படம்.‌

நெடுஞ்சாலை பயணமும், காரிலும் தான் மொத்த திரைக்கதையும் பயணிக்கும். இதனை திரைக்கதையாக எழுதும் போதும், இதனை காட்சிப்படுத்தும் போதும் ரசிகர்களுக்கு சோர்வை தராமல் இருப்பதற்கான விசயங்களை இணைத்தோம். திரைக்கதை காரில் பயணிப்பதால் கதாபாத்திரங்களுக்கு இடையே நீண்ட நேரம் உரையாடலையும் வைக்க இயலாது.

இதனால் நடிகர்களின் முகபாவனைகளையும், நடிப்புத் திறனையும் வைத்து தான் காட்சிகளை நகர்த்த வேண்டியதிருந்தது.

டிரைவராக நடிக்கும் கலைஞரின் நடிப்புத் திறன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால், இந்த திரைக்கதை வெற்றி பெறாது. முழு கதைக்கும் கதையின் நாயகி தான் மைய பாத்திரம். அவருடைய தோளில் சுமக்க வேண்டிய திரைக்கதை இது.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய பங்களிப்பை அற்புதமாக வழங்கியிருக்கிறார்.

அதிலும் காரை ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் சக நடிகர்களிடமும் பேசி நடிக்க வேண்டும். வண்டியை ஓட்டும் போது போக்குவரத்து நெரிசல், சாலை விதிகள் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிலும் அவர்கள் காரில் அமர்ந்து பயணிக்கும் போது காட்சி கோணங்களுக்கு ஏற்ப நடிக்கவும் வேண்டும். இவை அனைத்தையும் சவாலாக ஏற்றுக் கொண்டு நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ரசிகர்களை பயமுறுத்த வேண்டும் என்று நினைத்து காட்சிகளை உருவாக்குவது என்பது எளிதானது.

ஆனால் கதையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரத்தின் பயத்தை.. அவருடைய நடிப்பின் மூலமாக பார்வையாளர்களுக்கு கடத்துவது என்பது பெரும் சவாலானது. இது இயக்குநர்களின் கையில் இல்லை. நட்சத்திர நடிகர்களின் கையில் தான் இருக்கிறது.

அந்த வகையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு நுணுக்கமான உணர்வுகளையும் அற்புதமாக உள்வாங்கி, வெளிப்படுத்தி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசை மூலம் தன்னுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இசையமைப்பாளர் மட்டுமல்ல ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர் என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் அவர்களின் முழு திறமையையும் இந்தப் படத்திற்காக வழங்கியிருக்கிறார்கள். ” என்றார்.

More Articles
Follows