நமக்கெதுக்கு கொரோனா ஊரடங்கு.. தேவையே இல்ல – மன்சூரலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கையில், “தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தை பருவத்திலேயே
எதிர்கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது.

மேலும், நமது உணவு பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது.

கொரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கொரோனா ஒன்றுமே இல்லை, என்பது தான் என் கணிப்பு.

நம் மூதாதையரின் வைத்தியமே கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சளி, இருமல் போன்றவைகள் வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே சலி
காணாமல் போய்விடுகிறது.

மேலும், தூதுவலை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது. இப்படி சளி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கொரோனாவையும், நம் உணவு பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள
முடியும்.

ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரை பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே போட்டிருக்க கூடாது என்பது தான் என் கருத்து.

இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும் கேள்விக் குறியாகியிருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறது.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருக்கும் அரசு 20 நபர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும், என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

அப்படியானால் மற்றவர்கள் என்ன செய்வார்கள். எனவே, இது குறித்து மூத்த கலைஞர்கள் ஒன்றிணைந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

திரைத்துறை மட்டும் இன்றி மேலும் பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவு விட வேண்டும், என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களையும் திறக்க வேண்டும், என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

We dont want Corona lock down says Mansoor Ali khan

‘கே.ஜி.எப் 2’ சண்டைக் காட்சிகளுக்காக காத்திருக்கும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018ல் எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆனாலும் தமிழக ரசிகர்களின் கவனம் பெற்ற கன்னட படம் ‘கே.ஜி.எப்’ .

பிரஷாந்த் நீல் என்பவர் இயக்க கன்னட நடிகர் யஷ் நாயகனாக நடித்திருந்தார்.

இப்படத்தை தமிழில் நடிகர் விஷால் வெளியிட்டார்.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் இந்தியா முழுவதும் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

தற்போது இதன் 2ஆம் பாகம் தயாரிப்பில் உள்ளது.

இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் சூட்டிங் தொடங்கப்பட உள்ளதால் இரண்டு சண்டை காட்சிகளை படமாக்கவிருக்கிறார்ளாம்.

அதில் நடிகர் சஞ்சய் தத் காட்சியிம் இடம்பெறவுள்ளது.

வருகிற அக்டோபர் 23-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு தீவிர முயற்சியில் உள்ளது.

‘ஐய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் இணையும் சசிகுமார் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

இதில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் நாயகர்களாக நடித்திருந்தனர்.

இப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருந்தார் என்பதை நாம் பார்த்தோம்.

இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

இந்த பிருத்விராஜ் வேடத்தில் ஆர்யாவும், பிஜூமேனன் வேடத்தில் சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

நரகாசூரன் படம் ரிலீஸ் குறித்து அப்டேட் செய்த கார்த்திக் நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரகுமான் நடிப்பில் ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.
அதன் பின்னர் அரவிந்த்சாமி மற்றும் ஸ்ரேயா நடிப்பில் ‘நரகாசூரன்’ படத்தை இயக்கினார். இப்படத்தை கௌதம் மேனன் தயாரித்திருந்தார்.

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

அண்மையில் அருண் விஜய், பிரசன்னா நடித்த ‘மாஃபியா: சேப்டர் 1’ படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் படு தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் நரகாசூரன் படம் ரிலீஸ் குறித்து அப்டேட் செய்துள்ளார் கார்த்திக் நரேன்.

கிரிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ பட டிரெய்லரிலிருந்து ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

அதில் “நரகாசூரன்’ வெளிவரும் ஆனால்…..இந்தப் பகுதி சற்று நாடகத்தன்மையாக இருக்கும்” என்ற டயலாக்கை இணைத்துள்ளார்.

அதாவது ‘நரகாசூரன்’ படத்தை நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நடிகை மைனா நந்தினி வீட்டுல விசேஷம்… ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் மிகப் பிரபலமானவர் நடிகை நந்தினி.

மேலும் சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி உள்ளிட்ட ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் சின்னத்திரையை பொறுத்தவரை இவரை மைனா நந்தினி என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும்.

இவர் வெண்ணிலா கபடி குழு, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனது பிறந்தநாளை தன் வீட்டில் சிறப்பாக கொண்டாடியுள்ளார் மைனா நந்தினி.

மேலும் இவர் தற்போது கர்ப்பமாகியிருக்கிறார்.

அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். எனவே ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது வழக்கமான பரிசோதனை தான் என தெரிய வந்துள்ளது.

அவர் நேற்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகவில்லை என்பதால் அதிமுக தொண்டர்களிமையே இது பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்.க்கு சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதால் இன்று மே 25 மாலை வரை மருத்துவமனையிலேயே இருக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.

துணை முதல்வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடல் நலம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows