நீட் தேர்வை ஏற்க முடியாது..; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

இந்தியாவிலுள்ள அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று ஏப்ரல் 10 காணொலி வாயிலாக நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இதில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது… “தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும் தமிழகத்திற்கு விலக்குத் தேவை எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரக்கூடிய இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து கடைபிடிப்போம் எனவும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை எனவும் விளக்கியுள்ளனர்.

இதனையடுத்து ஒரு எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

We cant not accept NEET exams in Tamilnadu says TN Govt

Overall Rating : Not available

Latest Post