தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படம் 2023 பொங்கல் சமயத்தில் வெளியாகிறது.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு போனிக்கபூர் தயாரித்துள்ளார்
இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
சில்லா.. சில்லா.. என்ற பாடலும் ‘காசேதான் கடவுளடா..’ என்ற இரு பாடல்களும் வெளியாகின.
இந்நிலையில் இப்படத்தின் ”கேங்ஸ்டா” என்னும் 3வது பாடல் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியானது.
இப்பாடலை ஷபீர் சுல்தானுடன் இணைந்து ஜிப்ரானும் ‘கேங்க்ஸ்டா’ பாடலையும் பாடியுள்ளார்.
ஷபீர் சுல்தான், விவேகா இணைந்து இப்பாடலை எழுதியுள்ளனர்.
‘நம்பிக்கை இழக்காமல் போர் தொடுப்பவன்; கடைசி நிமிடம் வரை கர்ம கொடுப்பவன்’, ‘துணிந்தால் வெற்றி நமதே’ ஆகிய துடிப்பான வரிகள் கவனம் பெறுகின்றன.