தெலுங்கு சினிமாவை கலக்கிய *உஷாரு* தமிழுக்கும் வருகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன “உஷாரு” தமிழில் ரீமேக் ஆகிறது. அப்படத்தை V.V.கதிர் இயக்குகிறார்.

திரையுலகிற்கு எப்போதுமே ஆக்சிசனாக இருப்பது புது முகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களே. ஜிக் ஜாக் இல்லாமல் யதார்த்த படைப்புகளே சினிமாவின் சக்சஸ் பார்முலா.

அந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் “உஷாரு”

உஷாரு என்றால் தமிழில் புத்துணர்வு என்று பொருள்படும். சமீபத்தில் வெளியான இந்த படம் ஆந்திராவில் கொண்டாடப்படும் படமாக கருதப்படுகிறது.

சுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்கு திரையுலகின் வசூல் கணக்கு. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.

இந்த படத்தை ஜீவா நடித்து வெற்றி பெற்ற தெனாவட்டு படத்தை இயக்கிய V.V.கதிர் 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்.

பலத்த போட்டிக்கு பிறகு படத்தின் ரீமேக் ரைட்சை கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் J. பணீந்திரகுமார் தயாரிக்கிறார்.

இவர் ஏற்கெனவே பிரபுசாலமன் இயக்கத்தில் லாடம் என்ற படத்தை தயாரித்தவர்.

புதுமுகங்களும் பிரபலங்களும் இனைய உள்ள இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளவர் ராதன். விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

VV Kathir directing Usaru telugu movie remake in Tamil

விஸ்வாசம் மாஸான படம் மட்டுமில்லை; ரகசியம் உடைக்கும் எடிட்டர் ரூபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிச்சயமாக, ஒவ்வொரு திரைப்படத்தின் முதல் பார்வையாளரும், முதல் விமர்சகரும் அதன் படத்தொகுப்பாளர் தான்.

எனென்றால் அவர்கள் தான் தொகுக்கப்படாத காட்சிகளையும், தெளிவாக திருத்தப்பட்ட காட்சிகளையும் பார்த்து படம் எப்படி வந்திருக்கிறது என்று படத்தினை துல்லியமாக கணிப்பவர்கள்.

ஏராளமான படங்களில் ஒரே நேரத்தில் வேலை செய்தாலும், அஜித்குமாரின் விஸ்வாசம் படத்தை சற்றே சிறப்பாக உணர்கிறார்.

விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் கூறும்போது…

“விஸ்வாசம் ஒரு வெகுஜன திரைப்படம் என்பதையும் தாண்டி, பண்டிகைக்கான ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.

இந்த பண்டிகை சீசனில் எல்லோருக்குமான ஒரு விருந்தாக அமையும் வகையில் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு விருந்து. விஸ்வாசத்தில் பணி புரிவது மிகவும் சவாலானது.

இந்த படத்தின் கதை வேகமான திரைக்கதை, ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளை கொண்டிருக்கும். அதற்கேற்ற வகையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதி பதிப்பை கொண்டு வருவது மிகவும் சவாலாக இருந்தது.

ஏனென்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கவோ அல்லது குறைக்கவோ கூடாது, அதை சமநிலையில் வைக்க வேண்டும். சிவா மற்றும் தயாரிப்பாளர்களின் ஆலோசனையோடு நான் நிறைய பதிப்புகளில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

பார்வையாளர்களின் ரசிப்புத் தன்மைக்கு ஏற்ப டிரெய்லரை கொடுத்ததில் ஒட்டு மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி” என்றார்.

ரூபன் படத்தில் மிகவும் ரசித்த விஷயங்களை பற்றி கூறும்போது…

“படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக இருந்தது. குறிப்பாக மழையில் நடக்கும் அந்த சண்டைக்காட்சியும், இரண்டாம் பாதியில் நடக்கும் இன்னொரு சண்டைக்காட்சியும்.

அதில் அஜித் சார், எதிரிகளை அடித்து உதைக்கும்போது சில மாஸான பஞ்ச் டயலாக்குகளை சொல்வார்.

இந்த விஸ்வாசம் வெறும் மாஸான படம் என்பதையும் தாண்டி, ஒட்டுமொத்த குடும்ப பார்வையாளர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

சிவா இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Editor Ruben talks about his working experience in Viswasam

அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண் இயக்கத்தில் ஆரவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சரண்.

இயக்குனர் சரண் தற்போது தனது புதிய படமான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படப்பிடிப்பை துவக்கியிருக்கிறார்.

இதில் பிக் பாஸ் புகழ் ஆரவ் மற்றும் தெலுங்கு நடிகை காவ்யா தப்பார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சரணின் படங்கள் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த முறை அவர் இதுவரை செய்யாத புது முயற்சி ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்.

இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது’ “என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி செய்ததில்லை.

இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தில் அதை செய்ய இருக்கிறேன், இதில் ஆக்‌ஷன் மற்றும் காமெடியும் இருக்கும்.

கமல் சார் நடித்து நான் இயக்கிய ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தின் தலைப்புக்கும், இந்த தலைப்புக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

அந்த படத்துக்கு முதலில் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்று தான் பெயரிடப்பட்டது, ஆனால் பின்னர் ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ என்று மாற்றினோம்” என்றார்.

நடிகர்கள் தேர்வு பற்றி சரண் கூறும்போது…

“கதை பெரம்பூர் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் கதாநாயகன் ஒரு ரயில்வே ஒப்பந்ததாரர் மற்றும் ஒரு உள்ளூர் தாதா.

அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றம் உள்ள ஒருவரை தேடினேன்.

ஆரவ் என் மனதில் முதல் தேர்வாக தோன்றினார்.

காவ்யா தாப்பர் தெலுங்கில் இருந்து வந்தவர். நான் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் 18 வது நாயகியாக அவர் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாசர், ராதிகா சரத்குமார், சாம்ஸ், ஆதித்யா, யோகி பாபு, பாகுபலி புகழ் பிரபாகர் மற்றும் சில பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

நான் இங்கு குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாக எதையும் வெளிப்படுத்துவது படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்து விடும்.

ஆனால், படம் நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த கலவையாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

சைமன் கே கிங் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். சரண் தனது இளைய சகோதரர் கே.வி.குகன் உடன் முதன் முறையாக இணைகிறார்.

Director Saran team up with Aarav for Market Raja MBBS

பெண்களுக்காக ஐயப்பன் கோயில் கட்டுவேன்..; கடமான் பாறை இசை விழாவில் சீமான் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது….

மன்சூரலிகானின் மகன் துக்ளக் இப்படத்தில் அறிமுகமாகிறார். அவர் சிறந்த நடிகராக உயர வேண்டும்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கவில்லை. அது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளது.

கேட்டால் தீட்டு என்கிறார்கள். மற்ற கோயில்களில் மட்டும் பெண்களை அனுமதிக்கிறார்கள். அங்கு தீட்டு இல்லையா?,

அதை கேட்டால் ஐயப்பன் பிரம்மசாரி என்கிறார்கள். அப்படியென்றால் ஹனுமன் மற்றும் பிள்ளையார் எல்லாம் பிரம்மசாரிகள் இல்லையா? அங்கே பெண்கள் செல்லவில்லையா?,

என்னைக் கேட்டால் பெண்களை அனுமதிக்க பெண்களுக்காகவே ஒரு ஐயப்பன் கோயில் கட்ட வேண்டும் என்பேன். என்று ஆவேசமாக பேசினார் சீமான்.

I will built Iyyappan temple for Women says Seeman at Kadamanparai Audio Launch

ஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நமது தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டன்ட் இயக்குனர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன் 1966 ஆம் ஆண்டு பொன்மனச் செம்மல் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, உலகளவில் பல சாதனைகள் படைத்து ஐம்பது ஆண்டுகள் கடந்து, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வரும் எங்கள் சங்கத்தில் மூத்த முன்னால் உருபினர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு 52 வது ஆண்டு கடந்து தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

சென்ற முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.S.G.சோமசுந்தரம் (எ) S.D சுப்ரீம் சுந்தரே இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திரு.தவசிராஜ். S.D – உபதலைவர்
திரு.K.ராஜசேகர். S.D – துணைத்தலைவர்
திரு.G.பொன்னுசாமி S.A – செயலாளர்
திரு.V.மணிகண்டன் S.A – துணைச்செயலாளர்
திரு.S.S.M.சுரேஷ் S.A – இணைச்செயலாளர்
திரு.C.P.ஜான் S.A – பொருளாளர்

செயற்குழு உறுப்பினர்கள்
திரு.S.M.ராஜ் S.A
திரு.P.ரவிக்குமார் S.A
திரு.R.நாராயணன் S.A
திரு.R.பாபு S.A
திரு.A.வெங்கடேஷன் S.A
திரு.U.ஆனந்தகுமார் S.A
திரு.V.காசி S.A
திரு.M.வெற்றிவேல் S.D
திரு.M.சுகுமார் S.A
திரு.B.K.பிரபு S.D
திரு.E.பரமசிவம் S.A
திரு.K.சதாசிவம் S.A

மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இந்த ஆண்டின் பொறுப்பாளர்கள் ஆவார்கள். அதுமட்டுமல்லாமல் 2019 ம் ஆண்டு தேர்தலை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி M.சாகுல் அமீர் S.D அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

பதவியேற்பு விழா இன்று ( 05.01.2019 ) காலை ஸ்டன்ட் யூனியனில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி.S.தாணு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் , மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், வி.பிரபாகர், சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்ற உருப்பினர்களுக்கு 24 சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்களும், ஸ்டன்ட் இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

இப்படிக்கு…

நிர்வாகஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள்
தென்னிந்திய திரைப்பட ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன்

Stunt Union new members elected for 2019 year

சாயாஜி ஷிண்டேவின் *அகோரி* பட டீசரை வெளியிட்ட விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் , நடிகர் சங்க செயலாளர் விஷால் ‘அகோரி ‘ படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

டீஸரைப் பார்த்த விஷால் பபம் பற்றியும் பக்குழுவினர் பற்றியும் விசாரித்து அறிந்தவர் இது ஒரு வித்தியாச முயற்சியாக இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறியதுடன் படக்குழுனரை வாழ்த்தினார்.

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து ‘அகோரி’ படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார்.

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் காமெடி காதல் சென்டிமெண்ட் எல்லா அம்சங்களும் உள்ள படம்.

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார்.

அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர், படத்தின் கதை தன் தோற்றம் எல்லாமும் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். மிகவும் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார்.

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகளும் படமாகியுள்ளன.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.

இவரது உயரம் 6.5 அடி ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர்.

இவர் ‘144 ‘பட நாயகி. மைம் கோபி , சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், ஆகியோருடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக் நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது.

ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன், வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார். ‘அகோரி’ படத்தை விரைவில் வெளியிட உள்ளனர்.

Aghori Teaser Launched by Actor Vishal

அகோரி டீஸர் உங்கள் பார்வைக்கு

https://youtu.be/z0iH1mHSocw

More Articles
Follows