அஜித்தின் விவேகம் டிரைலர் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ள நிறுவனம், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

அனிருத் இசையமைப்பில் உருவான சர்வைவா, தல விடுதலை மற்றும் காதலடா ஆகிய 3 பாடல்கள் இதுவரை வெளியாகிவிட்டன.

இந்நிலையில் இதன் டிரைலரை ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிட இருக்கிறார்களாம்.

இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷாராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Vivegam trailer release date

ஓவியாவை ஓரம் கட்டாதீங்க… ஆதரிக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

எனவே பிக்பாஸ் பற்றிய செய்திகளே தற்போது மீடியாவை ஆக்ரமித்து வருகிறது.

மேலும் இதில் பங்கேற்றுள்ள ஓவியாவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிம்பு தன் ஆதரவை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒருவர் மற்றவர்களை போல இல்லாமல், வித்தியாசமாக இருந்தால், அவரை குறை சொல்லி ஓரம் கட்ட வேண்டாம். அவரை தனியாக விட்டு விடுங்கள்” என சிம்பு பதிவிட்டுள்ளார்.

STR aka Simbu supports Oviya in BiggBoss show

If someone is different and not like the rest; it’s better to leave them alone than blaming and cornering. #Disheartened #Oviya #SpreadLove
— STR (@iam_str)

சூர்யாவுடன் நடிக்கும் சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையின் மிகப்பிரபலமான அடையாளங்களில் ஒன்றாக திகழும் சரவணா ஸ்டோர்ஸை எஸ்.எஸ்.சரவணன் நிர்வகித்து வருகிறார்.

இக்கடை விளம்பரங்களில் இவர் நடித்து தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இவர் புதிய படத்தில் நடிக்க, அவருடன் நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியானது.

பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார் சரவணன்.

இந்நிலையில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை தயாரித்து அதில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் கோலிவுட்டில் நிலவுகின்றன.

Saravana Stores owner Saravan produces Suriyas new movie

விஜய்யுடன் நடிக்க 4வது முறை வாய்ப்பு; மறுக்கும் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தில் ராகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

ஆனால் இதற்கு முன்பு, சமந்தாவை தேடித்தான் இந்த வாய்ப்பு சென்றதாம்.

ஆனால் கால்ஷீட் டைட் காரணமாக அவரால் தேதிகளை ஒதுக்க முடியவில்லையாம்.

ஏற்கெனவே கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து 3 முறை நடித்துள்ளார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha refuses to act with Vijay in AR Murugadoss Project

லைக்கா தயாரிப்பில் இணையும் நயன்தாரா-யோகிபாபு-அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் நடிக்கும் 2.0 படத்தை தொடர்ந்து அரை டஜன் படங்களை தயாரிக்கவுள்ளது லைக்கா என்பதை பார்த்தோம்.

கமலின் சபாஷ் நாயுடு, தனுஷின் வடசென்னை, விஜய் இயக்கும் கரு ஆகிய படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவுள்ள படத்தை பற்றிய அறிப்பை வெளியிட்டுள்ளது

கோகோ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க, யோகிபாபு இணைந்து நடிக்கிறார்.

டார்க் காமெடி படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Lyca next production with Nayanthara YogiBabu and Anirudh

அனிருத்துக்கு ஃபோன் போட்டு அழவைத்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேதாளம் படத்தின் பாடல்கள் வெற்றியை தொடர்ந்து விவேகம் படத்திலும் அஜித் மற்றும் அனிருத் கூட்டணி அமைந்துள்ளது.

இந்நிலையில் இதில் இடம் பெற்றுள்ள 3வது பாடலான காதலடா பாடல் வரிகளும் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

கபிலன் வைரமுத்து எழுதிய இப்பாடலை அனிருத் ரவிச்சந்திரனுடன் ப்ரதீப் குமார், ஷாசா திரிபாதி ஆகியோர் பாடியுள்ளனர்.

’அஜித் சார் எனக்கு போன் செய்து, உங்களுடன் பணியாற்றுவது பெருமையாக உள்ளது. அவரது வார்த்தைகளால் என் கண்கள் கலங்கி விட்டது.

நான் ஒரு அஜித் ரசிகன். அவர் பாராட்டியது எனக்கு ரொம்ப சந்தோஷம்’ என தெரிவித்துள்ளார்.

Ajith praises Anirudh and his music in Vivegam movie

More Articles
Follows