மீண்டும் விவேகம்; ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் அதிபர்கள் முடிவு

மீண்டும் விவேகம்; ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் அதிபர்கள் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam Ajithநாளை அக்டோபர் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை இப்போராட்டம் நடைபெறும் என விஷால் தெரிவித்திருந்தார்.

இதனால் புதிய படங்கள் இல்லாததால் பழைய படங்களை ரி-ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் சிலர் முடிவு செய்துள்ளார்களாம்.

அதன்படி அண்மையில் வெளியான அஜித்தின் விவேகம் படத்தை ரி-ரிலீஸ்செய்யவுள்ளனர்.

மேலும பல பழைய படங்களும் இந்த வரிசையில் இணையும் என எதிர்பார்க்கலாம்.

விஜய்யை விட அஜித்தான் நாட்டாமை ரீமேக்கில் செட்டாவார்… சரத்குமார்

விஜய்யை விட அஜித்தான் நாட்டாமை ரீமேக்கில் செட்டாவார்… சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nattamai stillsசரத்குமார் நடித்த படங்களிலேயே மாபெரும் வசூல் சாதனை படைத்த படம் நாட்டாமை.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் சரத்குமார் இரு வேடங்களில் நடிக்க இவருக்கு ஜோடியாக குஷ்பூ, மீனா நடித்திருந்தனர்.

தற்போது ரீமேக் சீசன் என்பதால், இதன் ரீமேக்கில் அஜித், விஜய் இருவரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும்? என்று சரத்குமாரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு விஜய்யை விட அஜித்தான் நாட்டாமை கேரக்டருக்கு செப் ஆவார் என சரத் தெரிவித்தாராம்.

அட… இதுக்கும் நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு சொல்றீங்களா..?

இமயமலைக்கு சென்று வந்தபின் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு

இமயமலைக்கு சென்று வந்தபின் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanthசினிமாவைப் போல் ஆன்மிகத்திலும் அதிகம் நாட்டம் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

எனவே தான் நடிக்கும் படங்கள் ஆனாலும், தான் தொடங்கும் எந்தவொரு முயற்சியானாலும் இமயமலைக்கு சென்று வந்தபின்னர்தான் முடிவு எடுப்பார்.

2.0 படத்தை முடித்துவிட்டு தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து அவர் அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் உள்ள ஒரு மூத்த நடிகர் ஒருவர் அவருடைய கருத்தை தெரிவித்தபோது…
ஆன்மிக வழிகாட்டுதல் படி நடப்பவர் ரஜினிகாந்த். அவர் எதை செய்தாலும் அதற்கு முன்பு தன் குருநாதர் பாபாவிடம் ஆசி பெற்ற பின்னரே தொடங்குவார்.

எனவே அவர் இமயமலைக்குச் சென்று திரும்பிய பின், தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார்’’ என்றார்.

நிதின்சத்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக ஜெய்

நிதின்சத்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jai signed to play the hero in Actor Nitinsathyaas maiden productionவெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ மற்றும் இதன் இரண்டாம் பாகத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

அதில் நடித்த நிதின் சத்யா தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெபா மோனிகாஜான் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்யம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரோபோ சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jai signed to play the hero in Actor Nitinsathyaas maiden production

பிக்பாஸ் 2… விஜய் டிவி வைத்த வலையில் சிக்குவாரா சூர்யா ?

பிக்பாஸ் 2… விஜய் டிவி வைத்த வலையில் சிக்குவாரா சூர்யா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaகமல் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது 100 நாட்கள் நடைபெற்ற நிலையில் இதன் வெற்றியாளராக நடிகர் ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதை சூர்யா தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது.

சினிமா நலனை பார்க்காமல் ரஜினி-கமல் அரசியல் பேசுகின்றனர் – திருப்பூர் சுப்ரமணியம்

சினிமா நலனை பார்க்காமல் ரஜினி-கமல் அரசியல் பேசுகின்றனர் – திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamal should talk about welfare of Cinema instead of talking Politics says Thirupur Subramaniamநடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழா கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட கலந்துக் கொண்டனர். அவர்களின் பேசிய பேச்சில் அரசியல் இருந்தது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையில் தமிழ் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி வருகிற 6 ந்தேதி முதல் புதிய படங்களை திரையிடப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை ஐநாக்ஸ், பிவிஆர் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளதாவது….

சிவாஜி மணி மண்ட திறப்புவிழாவில் பங்கேற்ற கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழ் திரை உலக நலன் கருதி, 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்வதற்கு துணை முதல்வரிடம் கோரிக்கை வைக்காமல் அரசியல் பேசியுள்ளனர்.

தமிழக அரசு இதுவரை வசூலித்து வந்த 30 சதவீத கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ள போதிலும் திரையரங்கு கட்டணம் குறையாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ரசிகர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 30 சதவீத கேளிக்கை வரியை தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சமமாக பகிர்ந்து வந்த நிலையில், அதில் 10 சதவீதத்தை 28 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்ந்து அரசுக்கு வழங்கினால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் இரட்டை வரிவிதிப்பு முறையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows