கபாலி சாதனையை முறியடித்து முதலிடத்தில் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில் வெளியான விவேகம் டீசர் ஒரு சாதனையை படைத்துள்ளது.

ரஜினியின் கபாலி டீசர் 463 K லைக்ஸை பெற்று தமிழ் சினிமாவில் முதல் இடத்தில் இருந்தது.

தற்போது அந்த சாதனையை முறியடித்து, 465K லைக்ஸை விவேகம் பெற்றுள்ளது.

இதனை #VIVEGAMMostLikedTamilTeaser என்று ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

Vivegam teaser likes broken Kabali records

காலா கதை உரிமை வழக்கு; ரஜினி-தனுஷுக்கு கோர்ட்டு அவகாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைகாலமாக ரஜினி படங்கள் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இதில் தற்போது உருவாகிவரும் ‘காலா’ படமும் விதிவிலக்கு அல்ல.

காலா படத்தின் தலைப்பும் அது ஒரு தாதாவின் கதை என்ற தகவல் வெளியானதையடுத்து, ராஜசேகர் என்பவர் இவை இரண்டிற்கும் உரிமை கோரி புகார் மனு ஒன்றை சென்னை காவல்துறை ஆணையரிடம் மே மாதம் 30-ம் தேதி கொடுத்தார்.

இவ்வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே, தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், ரஜினி மற்றும் பா.ரஞ்சித் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி பதில் அளிக்க அவகாசம் கேட்டிருந்தனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு (இன்று) நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, படக்குழு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பில் அனைவரும் இருப்பதால், பதில்மனு அளிக்க காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனுத்தாக்கல் செய்ய ரஜினி மற்றும் ரஞ்சித் தரப்புக்கு மீண்டும் ஒரு வாரம் காலம் அவகாசம் அளிக்கிறேன் என உத்தரவிட்டார்.

மும்பையில் விஐபி2; அமெரிக்காவில் ஸ்கெட்ச்; தாணுவின் தாராளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி மற்றும் தெறி படங்களை தொடர்ந்து, தனுஷின் விஐபி 2 மற்றும் விக்ரமின் ஸ்கெட்ச் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் கலைப்புலி தாணு.

இதில் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் ஆடியோ விழாவை மும்பையில் பிரமாண்டமாக நடத்தி முடித்தார் எஸ்.தாணு.

இந்நிலையில் ஸ்கெட்ச் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்முறையாக விக்ரம் மற்றும் தமன்னா இணைந்து நடித்துள்ளனர்.

Vikrams Sketch movie audio will be happen in USA

பிக்பாஸை தடை செய்; கமலை கைது செய்; போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விருமாண்டி, விஸ்வரூபம் உள்ளிட்ட கமல் நடிக்கும் படங்களுக்கு மட்டும்தான் இதுவரை தடை கோரிய புகார் மனுக்களை பார்த்தோம்.

தற்போது அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும் என புகார் மனு ஒன்றை காவல்துறை ஆணையரிடம் கொடுத்துள்ளனர் இந்து மக்கள் கட்சி.
அவர்கள் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது…

இந்திய மக்கள் மானமே முக்கியம் என்ற கொள்கை உடையவர்கள்.

இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டி.வி. நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இதன் உச்சக்கட்டமாக பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் எவ்வித தொடர்பு இல்லாத ஏழு ஆண்களும், ஏழு பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், நடித்தும் வருகிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியை பார்த்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.

தமிழர்கள் உயிரைவிட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது.

இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமீதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, ரைசா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சக்தி, அருள், தரணி, சினேகன், கணேஷ் உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை காப்பாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளது இந்து மக்கள் கட்சி.

சசிகுமாரின் ஆஸ்தான இசையமைப்பாளருக்கு வாய்ப்பளித்த உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவுள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் உதயநிதியுடன் பார்வதி நாயர், நமீதா பிரமோத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இதுவரை இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை.

வருகிற ஜீலை 19ஆம் தேதி முதல் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் சசிகுமாரின் ‘கிடாரி’ மற்றும் ‘பலே வெள்ளையத்தேவா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவாவை இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘மகேஷிண்டே பிரத்திகரம்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Darkuba Shiva will compose music for Udhayanidhi Priyadarshan combo movie

மோகன்லால்-விஷாலுக்கே வில்லியான ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லால் உடன் விஷால் இணைந்து நடிக்கும் படம் வில்லன்.

இப்படத்தில் ஹன்சிகா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது.

தற்போது ஹன்சிகாவின் கேரக்டர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் இவர் நெகட்டிங் ரோலில் நடிக்கிறார்.

நீண்ட நாட்களாக மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதும், அந்த கேரக்டர் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தர வேண்டும் என விரும்பினாராம்.

தற்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார் ஹன்சி

தமிழில் பிரபுதேவாவுடன் குலேபகாவலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

Hanshika becames baddie for Mohanlal and Vishal

More Articles
Follows