அஜித்தின் காதல்+ஆக்சன் பன்ச்; விவேகம் டிரைலர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015ஆம் ஆண்டு அஜித்தின் வேதாளம் படம் தீபாவளிக்கு வெளியானது.

இதன் டீசர் மட்டுமே அப்போது வெளியானது. ஆனால் டிரைலர் வெளியாகவில்லை.

எனவே தற்போது உருவாகியுள்ள விவேகம் படத்திற்கு டிரைலர் வெளியாகுமா? என ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

அதன்படி இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி சரியாக 12.01 மணிக்கு விவேகம் டிரைலர் வெளியானது.

இந்த டிரைலர் 2 நிமிடம் 24 நொடிகள் ஓடுகிறது.

இது முழுக்க முழுக்க ஆக்சன் படைப்பாக இருந்தாலும், படத்தில் அஜித் மற்றும் காஜல் அகர்வால் இடையே ரொமான்ஸக்கும் பஞ்சமில்லை.

காதல் மற்றும் ஆக்சன் என இரண்டிலும் அஜித் தன் பன்ச் டயலாக்குகளை தெறிக்கவிட்டுள்ளார்.

டிரைலர் ஆரம்பிக்கும்போது…

Who are you? என்ற குரல் கேட்கிறது.

நான் யாருங்கிறது எப்போதுமே நான் முடிவு பண்றதுல்ல. எதிர்ல நிக்றவங்கதான் முடிவு பன்னுவாங்க, அவங்களுக்கு நான் நண்பனா? இல்ல எதிரியான்னு…?
ஒரு சீரியஸ் காட்சியில் நடிகர் கருணாகரன் எனக்கு என்ன சொல்றது தெரியல சார்? என்று அஜித்திடம் கேட்கும்போது ஒரு காஃபி சொல்லுங்க என்று கூலாக கூறி செல்கிறார் அஜித்.

அஜித் கூடவே விவேக் ஓபராய் மற்றும் அக்ஷராஹாசன் வருகின்றனர்.

இதனையடுத்து காஜல் அகர்வாலுடன் ரொமான்ஸ் காட்சியில்…

உன் கூட இருக்கிறது சந்தோஷம்ங்கிறத விட நீதான் என் சந்தோஷமாவே இருக்க. என்கிறார் அஜித்.

அதற்கு காஜல் அகர்வால் பதிலளிக்கும்போது…

என் லைப்ல இதவிட பெரிய உண்மைய இதுவரை சொன்னதும் கிடையாது. இனிமே சொல்லவும் முடியாது என்கிறார்.

இதன்பின்னர் அஜித்தை பார்த்து விவேக் ஓபராய் கூறும்போது…

போராடாம அவன் போகவும் மாட்டான். சாகவும் மாட்டான். பீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க அவன் எழுந்து வர்றான்.

இறுதியாக You will see my rage என்ற பன்ச் டயலாக்கோடு டிரைலர் முடிகிறது.

அஜித் ரசிகர்களை மனதில் வைத்து இயக்குனர் சிவா மற்றும் அனிருத் இருவரும் இந்த டிரைலரை செதுக்கியுள்ளனர்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த டிரைலர் டன் கணக்கில் எகிற வைத்துள்ளது.

நிச்சயம் ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு இது மாபெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Vivegam Review Vivegam Trailer Review

கர்ஜிக்கும் காலா; வைரலாகும் ரஜினியின் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி-ரஞ்சித்-சந்தோஷ் நாராயணன் கூட்டணி காலா படத்திற்காக இணைந்துள்ளது.

தனுஷ் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது சென்னையில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சமுமூகவலைத்தளங்களில் வெளியாக்கி வைரலாகி வருகிறது.

இதில் ரஜினிகாந்த் சிங்கத்தை போன்று கர்ஜிக்கிறார்.

இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

In Kaala new poster Rajini roaring like Lion

விஐபி2 மாஸ் ஹிட்டு; தனுஷின் அடுத்த டார்கெட் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சௌந்தர்யா ரஜினி இயக்கிய விஐபி2 படம் வெளியானது.

தனுஷ் தயாரித்து நடித்திருந்த இப்படத்தில் கஜோல், அமலாபால், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா, ரைசா, செல்முருகன், ஜெயச்சந்திரன், பிஆர்ஓ ரியாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஷான் ரோல்டான் இசையமைத்திருந்த இப்படம் நல்ல வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் இதன் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பை வெளியிட இருந்தனர்.

ஆனால் தற்போது தெலுங்கு பதிப்பை வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித்தின் விவேகம் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதால் இந்த இரு படங்களுக்கும் மோதல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIP2 Telugu version clash with Vivekam release on 24th August 2017

தரமணி சூப்பரான படம்; படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படம் வெளியானது.

பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பெண்களை உயர்த்தி இப்படம் உருவாகியிருந்தாலும் ஆண்களின் ஆதரவு அமோகமாக கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து படத்தின் சக்ஸஸ் மீட்டிங்கும் நடைப்பெற்றது.

இதனையறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்க்க விரும்பி பார்த்துள்ளார்.

பின்னர் படத்தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் அவர்களை அழைத்து பாராட்டினாராம்.

களத்திற்கு வாங்க கமல்; நான் இருக்கிறேன்… சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதுநாள்வரை ஊழல் மற்றும் அரசியல்வாதிகளை மறைமுகமாக சாடி வந்தார் கமல்.

ஆனால் நேற்றைய ட்வீட்களில், அரசை நேரடியாகவே எதிர்த்தார்.

முதல்வரை பதவி விலக சொல்ல எதிர்க்கட்சிகள் ஏன் சொல்லவில்லை.

எனது இலக்கு என்பது சிறப்பான தமிழகம். எனது குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்குத் துணிச்சல் உள்ளது? என்ற கேள்விகளை கேட்டு இருந்தார்.

இதுகுறித்து இயக்குநரும் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கூறியதாவது….

களத்திற்கு வாருங்கள். ட்விட்டரில் குரல் கொடுத்தால் போதாது.

நீங்கள் குரல் கொடுத்த உடன் ராஜினாமா செய்ய இங்கு யாரும் காமராஜர் இல்லை.

ஊழலை எதிர்த்து போராட்டம் செய்யப்போவதாக கமல் அறிவித்தால் நாங்கள் கலந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

அதே போன்று, சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். அதற்கும் நான் அவருடன் இணைந்து போராட தயார்.

ஆனால் அவரது பேச்சுக்கள் வெறும் பேச்சாகவே இருக்கிறது” என்றார் சீமான்.

10 கோடி வாடகை பாக்கி; லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளிக்கு பூட்டு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் மனைவி லதா அவர்கள் சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நிர்வகித்து வருகிறார்.

இந்த பள்ளி உள்ள கட்டிடத்திற்கு 2009 முதல் தற்போது வரை ரூ. 10 கோடி தரவேண்டும் என்று அக்கட்டட உரிமையாளர் வெங்கடேஷ்வரலு தெரிவித்துள்ளார்.

ரூ. 10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது ரூ.2 கோடி தருவதாக லதா தரப்பு கூறியிருந்ததாகவும், 14 மாதங்களாகியும் லதா ரஜினி பணத்தை தரவில்லை என்று உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே வாடகை பணம் கொடுக்காத காரணத்தினால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

எனவே, இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் வேளச்சேரி கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள ஆஸ்ரம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Latha Rajinis Ashram School Closed due to rent balance

 

More Articles
Follows