எங்களின் அசுர உழைப்பை ‘விவேகம்’ காட்டும்… அக்ஷராஹாசன்

எங்களின் அசுர உழைப்பை ‘விவேகம்’ காட்டும்… அக்ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aksharahassan 2சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படம் பற்றி கமலின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் கூறியதாவது…

”இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது.

அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது.

பல பரிமாணங்கள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அஜித் சாருடன் பணி புரிந்தது ஒரு அருமையான அனுபவம்.

தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார்.

எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் அதனை பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம்.

பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பணியிலும் இப்பட குழுவினர் மிகக்கடுமையாக உழைத்தனர்.

அந்த அசுர உழைப்பின் பலனை மக்கள் விரைவில் திரையில் காணப்போகின்றனர்.

‘விவேகம்’ படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

Vivegam movie will say our hardwork says Aksharahassan

பாகிஸ்தானிலும் அஜித் பாட்டு ஹிட்டு; அனிருத் ஹாப்பி

பாகிஸ்தானிலும் அஜித் பாட்டு ஹிட்டு; அனிருத் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Pakistan also Vedhalam movie song Aaluma Doluma goes viralஅஜித்-அனிருத்-சிவா இணைந்த வேதாளம் படம் இரண்டு ஆண்களுக்கு முன்பு வெளியானது.

இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் இன்று வரையிலும் ஏதாவது ஒரு இடத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு புருனே நாட்டு இளவரசி இப்பாடலை விரும்பி பார்த்து கேட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்த்து தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இப்பாடல் தற்பாது பாகிஸ்தானிலும் பட்டைய கிளப்புகிறதாம்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல எஃப்எம்மில் பணிபுரியும் ஆர்ஜே அட்லீல் கான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆலுமா டோலுமா’ அருமையான பாடல்.

எனக்கு ஒரு வார்த்தை கூட புரியவில்லை. ஆனால் கேட்க கேட்க சந்தோஷமாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

அவரது அந்த டுவிட்டை ரீடுவிட் செய்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

அத்துடன் ‘இசைக்கு மொழியே கிடையாது’ எனவும் பதிவிட்டுள்ளார் அனிருத்.

In Pakistan also Vedhalam movie song Aaluma Doluma goes viral

Anirudh Ravichander Retweeted
RJ Adeel Khan‏ @rj_adeel
@anirudhofficial Aaluma Doluma is an amazing song! Even I can’t understand a single word but enjoying! From PAKISTAN

விஜய் விக்ரம் இயக்கத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்ஏசி

விஜய் விக்ரம் இயக்கத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SA Chandrasekaran act in Traffic Ramasamy biopicசட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சனைகளை இயக்கியவர் புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இவர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து இயக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

ஆனால் இப்படத்தை விஜய் விக்ரம் என்பவர் இயக்க, எஸ்ஏசி நடிக்க மட்டும் செய்கிறாராம்.

தமிழக மக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி.

இவரது பல வழக்குகள் மக்களுக்கு சாதகமான தீர்ப்புகளை பெற்று தந்துள்ளது.

எனவே இவரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இவரை தாக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், இன்றும் மக்களுக்காக போராடி வருகிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் விஜய் விக்ரம் கூறுகையில்…

இப்படம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதால் பல திருப்புமுனை சம்பவங்களும், திருப்பங்களும் எதார்த்தமாவே அமைந்திருக்கிறது.

இந்த படம் திரைக்கு வரும்போது சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. இப்படத்தை கிரீன் சிக்னல் பட நிறுவனம் தயாரிக்கிறது.” என்றார்.

SA Chandrasekaran act in Traffic Ramasamy biopic

traffic ramasamy sac

மூன்று ஹீரோயின்களுடன் ‘தடம்’ பதிக்கும் அருண்விஜய்

மூன்று ஹீரோயின்களுடன் ‘தடம்’ பதிக்கும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thadam 3 heroinesஎன்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய அருண்விஜய் அவர்கள் குற்றம்-23 படத்தில் மீண்டும் தன் ஹீரோயிசத்தை நிரூபித்தார்.

தற்போது ‘மீகாமன்’ பட இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் தடம் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங்கின்போது அருண்விஜய்க்கு காலில் சிறு விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் இவருடன் 3 நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தெலுங்கில் ஜெகபதி பாபுவுடன் ‘பட்டேல் S.I.R.’ படத்தில் நடித்த தன்யா ஹாப் மற்றும் புதுமுகம் ஸ்மிரிதி ஆகியோர் நடிக்கின்றனர்.

மூன்றாவது நாயகியாக ‘சைவம்’ படப்புகழ் வித்யா நடிக்கிறார்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு நாயகியாக இணைவார்கள் என கூறப்படுகிறது.

அருண் ராஜ் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘குற்றம்-23’ தயாரிப்பாளர் இந்தர்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இவர் தற்போது ‘கொடிவீரன்’ படத்தில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

3 heroines romance with Arun Vijay in Thadam movie

அபிசரவணன் சூப்பர் ஸ்டாராக வேண்டும்… பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

அபிசரவணன் சூப்பர் ஸ்டாராக வேண்டும்… பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

k bhagyaraj abi saravananரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பார்த்திபன் அவர்களின் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி உதவியை அபி சரவணன், கே பாக்யராஜ் முன்னிலையில் வழங்கினார்.

அதன்பின்னர் விழாவில் கே. பாக்யராஜ் பேசியதாவது…

‘இப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய நடிகை மேக்னா முகேஷ் இங்கு வருகைத்தந்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன்.

சதுர அடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழா மகிழ்ச்சியாக தொடங்கி, விவாத மேடையாக மாறிவிட்டது. இருந்தாலும் நடிகர் அபி சரவணன் இந்த மேடையினை நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டார்.

வளரும் போதே முகம் தெரியாதவர்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்யும் இவரல்லவா சூப்பர் ஸ்டாராகவேண்டும். என்னுடைய வாய் முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அபி சரவணன் விசயத்தில் நடந்தால் சந்தோஷம்.

நடிகை இனியா இப்படவிழாவில் வராதது குறித்து கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால், அவர்கள் வராததால் நஷ்டம் அவருக்குதான் ஒழிய படக்குழுவிற்கு இல்லை.

‘சுவர் இல்லாத சித்திரங்கள் ’ படத்தில் நான் ஒரு வசனம் எழுதியிருப்பேன். ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று எழுதியிருப்பேன்.

அவர்களுக்கு தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டும். அவர்கள் வராத விசயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்.

எல்லா தியேட்டர்களிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது.

எப்போது பார்த்தாலும் பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் தான் ஒடவேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே? ஒவ்வொரு தியேட்டரிலும் சிறிய படங்களுக்கு காட்சிகளை ஒதுக்கவேண்டும்.

அதற்காக காலை காட்சியை ஒதுக்கக்கூடாது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்த படத்தை காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள்.

ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதை காரணமாக காட்டி தியேட்டரிலிருந்து படத்தை தூக்கிவிடுகிறார்கள்.

படம் பார்த்த ரசிகர்களின் மவுத் டாக் பரவுவதற்குள் படத்தை தூக்கிவிட்டால் சின்ன படங்கள் எப்படி ஒடும்? அதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும்.

கண்டிப்பாக ஏதேனும் ஒரு சின்ன படங்கள் தியேட்டரில் ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும் என்பது போல் ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும்.

அதே போல் ஏசி வசதி, பார்க்கிங் வசதி போன்ற எல்லா வசதிகளும் கொண்ட நல்ல தியேட்டர்களும் சின்ன படங்களை திரையிட முன்வரவேண்டும்.

இந்த படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் இது ஒரு சஸ்பென்ஸ் படமாக இருக்கும் என்று நினைத்தேன்.

இந்த வருடமே ஒரு சஸ்பென்ஸான வருடம் தான். ஜெயலலிதா அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்தது சஸ்பென்ஸாக இருந்தது. அதற்கு பின் இவர்கள் வருவார்களா? அவர்கள் வருவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது.

அப்புறம் இவர்கள் அங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? அவர்கள் இங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தலில் வெங்கய்ய நாயுடுவுக்கு அந்த கட்சிகாரர்களே ஒட்டுபோடுவார்களா? மாட்டார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்துகொண்டேயிருக்கிறது.

இது போல் ஏகப்பட்ட சஸ்பென்ஸ்களுடன் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த சதுர அடி 3500 படம் வெளியாவது விசேசம். படத்தின் இயக்குநர் ஜாய்சன் அவருடைய குரு வைஷாக்கிற்கு நல்லதொரு மரியாதையை பெற்றுத்தருவார்.

Abi Saravanan should became Super Star says K Bhagyaraj

sathuradi 3500 audio launch

மெர்சல் ஆடியோ விழாவில் த்ரீ சர்ப்ரைஸ் ட்ரீட்

மெர்சல் ஆடியோ விழாவில் த்ரீ சர்ப்ரைஸ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Three surprise treat in Mersal audio launch eventவிஜய் 3 வேடங்களில் நடித்து வரும் மெர்சல் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மொத்த சூட்டிங்கையும் ஜீலை 31ஆம் தேதியோடு முடிக்க திட்டமிட்டு விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறது படக்குழு.

இதன் ஆடியோ விழாவை மிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

அதற்கு முக்கிய காரணம்…

மெர்சல் படம் ஸ்ரீ தேனாண்டாள்பிலிம்ஸின் 100வது படைப்பு.

1992ஆம் ஆண்டில்தான் விஜய் மற்றும் ஏஆர். ரஹ்மான் இருவரும் சினிமாவில் அறிமுகமானார்கள்.

இந்த ஆண்டோடு அவர்கள் 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றனர்.

எனவே நடைபெற உள்ள ஆடியோவில் விழாவில் இந்த மூன்று கலைஞர்களையும் பெருமைப்படுத்திட திட்டமிட்டு இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

Three surprise treat in Mersal audio launch event

More Articles
Follows