மாஸ் மெசேஜ் சொல்லும் அஜித்; ‘விவேகம்’ சீக்ரெட்டை உடைத்த காஜல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேதாளம் படத்தை தொடர்ந்து அஜித்-சிவா-அனிருத் ஆகியோரது கூட்டணி விவேகம் படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகிறது.

இப்பட டீசர் அண்மையில் வெளியாகி, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடையே எகிற வைத்துள்ளது.

இப்படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்க, காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன் சமீபத்திய பேட்டியில் காஜல் அகர்வால், படம் பற்றிய ஒரு சீக்ரெட்டை உடைத்துள்ளார். அவர் கூறியதாவது…

படத்தில் ராம்போ ஸ்டைல்ல ஒரு கவுண்டர் அட்டாக் பைட் சீன் இருக்கு. நிச்சயம் இதில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும்.

முக்கியமா படத்துல நாட்டுக்கு தேவையான ஒரு மாஸ் மெசேஜ் இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.

Vivegam movie has social message says Kajal Agarwal

ஜீன் 25ஆம் தேதி ரஜினி படத்தலைப்பை அறிவிக்கிறார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒருபக்கம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சு.

மறுபக்கம் ரஜினியின் அடுத்த படம் என தமிழக அரசியல் உலகமும், திரையுலகமும் பரபரப்பாக சூப்பர் ஸ்டாரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறது.

2.0 படத்தை முடித்து விட்டு, பா. ரஞ்சித் இயக்க, தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இதன் தலைப்பை ஜீன் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டுள்ளது என சொல்லப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஹீமா குரோஷிமா நாயகியாக நடிக்க இதன் சூட்டிங் மே 28ஆம் தேதி தொடங்குகிறது.

Dhanush‏Verified account @dhanushkraja
Wunderbar films presents.. superstar Rajinikanth’s “thalaivar 161” title will be revealed tom morning 10 am .. #cantgetbiggerthanthis

On June 25th Thalaivar 161 title will be revealed by Dhanush

சீனுராமசாமி-சசிகுமார் கூட்டணியில் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் மூன்று தேசிய விருதுகளை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தார் இயக்குனர் சீனுராமசாமி.

இவர் அண்மையில் இயக்கி வெளியான தர்மதுரை படமும் ரசிகர்களிடையே மாபெரும் ஆதரவைப் பெற்றது.

இந்நிலையில் சீனுராமசாமி இயக்கவுள்ள படம் ஒன்றில் சசிகுமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகவலை சீனுராமசாமியும் உறுதிசெய்துள்ளார்.

விரைவில் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கலாம்.

சந்திப்பின் போது அவர்கள் எடுத்த படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1000 கோடி பட்ஜெட்டில் கமல்-மோகன்லால்-அமிதாப்-நாகார்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படத்தை தொடர்ந்து பல சரித்திர படங்கள் இந்தியாவில் உருவாக உள்ளதை பார்த்தோம்.

இதில் பிரபல மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர் அவர்கள் மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கேரக்டரான ‘பீமன்’ கேரக்டரை தழுவி ஒரு படம் உருவாகிறது.

இப்படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடியாகும்.

இந்த படம் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மொழிகளிலும் தயாராகும் எனவும் கூறப்படுகிறது.

இதில் மகாபாரதம் படத்தில் பீமன் கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இவருடன் கமல்ஹாசன், அமிதாப் மற்றும் நாகார்ஜீன் ஆகியோர் இணைய உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அஜித்தின் உழைப்பை போற்ற ஒரு பாடல்; அனிருத் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது.

பார்வையாளர்கள் எண்ணிக்கையில் இந்த டீசர் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.

மேலும் இந்த டீசரில் அஜித் பேசிய Never Ever Give Up என்ற டயலாக் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இதனால், Never Ever Give Up என்ற பெயரில் ஒரு பாடலை உருவாக்கி வருகிறதாம் படக்குழு.

அனிருத் இசையமைக்க, கபிலன் வைரமுத்து இதற்கான பாடல் வரிகளை எழுதியுள்ளாராம்.

மேலும் இந்த வரிகள் 25 வருட சினிமா பயணத்தில் அஜித்தின் கடின உழைப்பை வர்ணிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார்களாம்.

Vivegam music composer Anirudh making song for Never Ever Give Up

கேரள மண்ணிலும் தமிழீழ உணர்வை வெளிப்படுத்திய அபி சரவணன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன்.. வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார்.

ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை.

மதுரை தமுக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இரவு பகல் பாராமல் 7 நாட்களுக்கும் மேலாக கலந்துகொண்டதோடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று போராட்டங்களில் கலந்துகொண்டவர் சரவணன்.

நெடுவாசலில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகட்டும், அந்நிய குளிர்பானங்களை எதிர்த்து தாமிரபரணீயில் நடந்த போராட்டமாகட்டும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டபோது நடந்த போராட்டம் என அனைத்து போராட்டங்களிலும் அபி சரவணனை முதல் ஆளாக பார்க்க முடியும்.

டில்லியில் மாதக்கணக்கில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்காக இங்கிருந்து எந்த ஒரு பெரிய நடிகரும் வாய் திறக்க யோசித்த நிலையில், அந்த விவசாயிகளுடன் விவசாயியாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக கலந்துகொண்டு தனது ஆதரவை அளித்தவர் தான் அபி சரவணன்.

பின்னர் அந்த போராட்டத்தின்போது உயிரிழந்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்துக்கு திரையுலகினர் மூலமாக நிதியுதவியும் கூட பெற்றுத்தந்தார்.

மே-18 என்பது தமிழீழத்தில் உயிரிழந்த நமது தமிழினத்திற்கு அஞ்சலி செலுத்தும் நாள்.

தற்போது இயக்குனர் சுபீர் இயக்கிவரும் “பிரிட்டிஷ் பங்களா” என்கிற மலையாளப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் அபி சரவணன் அங்குள்ள படக்குழுவினரோடு சேர்ந்து உயிர் நீத்த நம் ஈழத்து சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அங்கு படப்படிப்பு தளத்தில் இருந்தவர்களில் அபி சரவணனை தவிர மற்ற அனைவரும் மலையாளிகள்.

ஆனால் மனதால் ஒன்றுபட்டு அபி சரவணனின் வேண்டுகோளை ஏற்று மெழுகு ஏந்தி அஞ்சலி செலுத்தினர் என்பது நெகிழ்ச்சியான விஷயம்.

Actor Abi Saravanan pay homage to Srilanka Peoples at his Malayalam movie shooting spot

More Articles
Follows