கேரளாவில் அசத்தப் போகும் அஜித்தின் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேகம் படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளதால் படத்தின் விநியோகம் நன்றாகவே சூடுபிடித்துள்ளது.

5 கோடி முதலீட்டுக்கு மேல் உள்ள படங்களைத் தனித்தனியாக தான் விநியோக உரிமையை விற்க வேண்டும் எனவும், ஒட்டுமொத்தமாக தமிழக உரிமையை விற்கக் கூடாது என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

இதனால், ‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமையை தனித்தனியாக விற்று வருகிறார்களாம். இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தமிழகத்தை போலவே தற்போது கேரளாவிலும் நல்ல விலைக்கு பேரம் பேசப்பட்டு வருகிறதாம்.

கேரளாவில் ரூ. 4 கோடி வரை விவேகம் படத்தின் உரிமை எட்டியுள்ளதாம்.

கேரளாவில் ‘பாகுபலி 2’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற குளோபல் யூனிட்டட் மீடியா என்ற நிறுவனம்தான் விவேகம் படத்தை இத்தனை கோடிக்கு வாங்க முன்வந்துள்ளது.

இது அஜித் படத்திற்கு கேரளாவில் பேசப்பட்ட அதிகபட்ச தொகை என சொல்லப்படுகிறது.

Vivegam Kerala rights trade news updates

சினிமா எண்ட்ரீ பற்றி ப்ரியா பவானிசங்கர் என்ன சொல்கிறார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 2011 முதல் 2014ஆம் ஆண்டு வரை செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் ப்ரியா பவானி சங்கர்.

அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தார்.

இவரது நடிப்புக்காகவே சீரியலை பலரும் பார்த்தனர். (ஹி..ஹி.. நாங்களும் பார்த்தோம்ல.)

கடந்த 2016-ம் ஆண்டில் மனங்கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது.

இதில் 23-வது இடத்தில் இவரது பெயர் இடம் பெற்றது.

நடிகைகள் பட்டியலில் சீரியல் நடிகை ஒருவரே ஒருவர் இடம்பெற்றார் என்றால் அது இவர் மட்டும்தான்.

இந்நிலையில் இவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது…

“நான் சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது உண்மைதான். இப்போதைக்கு அந்த படம் ஒன்றும் சொல்ல மாட்டேன்.

இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்தார்.

Priya Bhavani sankar makes her entry in Kollywood Cinema

இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் எத்தனையோ போராட்டங்களை பார்த்து இருக்கிறது. ஆனால் தமிழகத்தையே மிரள வைத்த போராட்டம் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு.

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மாணவர்கள் தொடங்கிய இந்த புரட்சி உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில் இந்த போராட்டம் தற்போது ஒரு படமாக உருவாகவுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் என்பவர் இப்படத்தை இயக்க முன்வந்துள்ளார்.

இவர் ஹாலிவுட்டிலும் ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருக்கிறாராம்.

மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல்.

தற்போது ஜல்லிக்கட்டின் பர்ஸ்ட் லுக்கை நியூயார்க் வால்ஸ்ட்ரீட்டில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் ஒரு காட்சியில் 10 லட்சம் பேர் திரண்டு நிற்பது போன்ற ஒரு காட்சிகளை வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.

இதற்கு முன் காந்தி படத்தில்தான் ஒரே பிரேமில் 3 லட்சம் பேர் இருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருந்ததாம்.

Jallikattu Protest movie will be director by Santhosh

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேரக்டரில் அனுபம் கெர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தபோது, அவரது மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு.

அப்போது மன்மோகன் சிங்குடன் பணியாற்றியது குறித்து, தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற புத்தகத்தை எழுதினார்.

இந்த புத்தகம் வெளியானபோது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து, திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.

சுனில் போரா இப்படத்தை தயாரிக்க, விஜய் ரத்னாகர் கத்தே இயக்குகிறார்.

மன்மோகன் சிங் கேரக்டரில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் நடிக்கிறார்.

விரைவில் இதன் போஸ்டர்கள் வெளியாகவுள்ள நிலையில் படத்தை அடுத்த 2018ஆம் ஆண்டில் வெளியிடவிருக்கிறார்களாம்.

‘மனைவி-மச்சினி யார் பெஸ்ட் டைரக்டர்…?’ தனுஷ் சுவாரஸ்ய பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் ஹாலிவுட் படங்கள் வரை தனுஷ் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் கதை எழுதி, நடித்து, தயாரித்துள்ள வேலையில்லா பட்டதாரி2 படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தன் மனைவி ஐஸ்வர்யா மற்றும் மனைவி தங்கை (மச்சினி) சௌந்தர்யா ஆகியோரின் இயக்கத்தில் நடித்துவிட்ட அனுபவத்தை தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில் “ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவருமே திறமையானவர்கள்.

அவர்கள் சூப்பர் ஸ்டாரின் மகள்கள். நல்ல கலை நுணுக்கம் அறிந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குணசித்திரம், காமெடி, இயக்கம் என பன்முகம் கொண்டவர் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா.

இவரது மகன் உமாபதி நடிக்கும் படத்துக்கு ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்பசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைக்க, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தின் ட்ரைலரை நாளை ஜீன் 8ஆம் தேதி, மாலை 3.30 மணிக்கு சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட விருக்கிறாராம்.

இப்படத்தின் இசையும் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தை ஜீன் 16-ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

Adhagappattathu Magajanangalay trailer to be revealed by Sivakarthikeyan

 

More Articles
Follows