ரத்தம் தெறிக்கும் டைட்டில்; அதிரடி வீடியோவை வெளியிட்ட விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் ராணாவுடன் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள படம் ‘காடன்’.

இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பட வெளியீடு தள்ளிப் போனது.

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்ஐஆர்’, ‘இன்று நேற்று நாளை 2’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”என்னுடைய புதிய படத்தை ஏப்ரல் 11 அன்று தொடங்குவதாக இருந்தேன்.

ரசிகர்களாகிய நீங்கள் அனுமதித்தால் வித்தியாசமான முயற்சியாக டைட்டில் அறிவிப்பை டீசராக வெளியிட உள்ளேன் என கருத்து கேட்டிருந்தார்.

பெரும்பாலான ரசிகர்கள் வெளியிடுங்கள் என கூறியிருந்தனர்.

அதன்படி தற்போது சற்றுமுன் மோகன் தாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டில் மோசன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ரத்தக்கறை பதிந்த டீசர்ட்டை வாஷிங் மெஷின் போட்டு துவைக்கிறார்.

அத்துடன் விஷ்னு சிக்ஸ் பேக்கில் தன் உடலையும் காட்டியிருக்கிறார்.

இந்த வீடியோ அவரின் ராட்சசன் பட லெவலில் இருப்பதாக ரசிக்ரகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இதனை ‘களவு’ படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார்.

ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் பணிபுரிகின்றனர்.

Vishnu vishal next movie titled Mohandas

பாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு நாடே முடங்கி கிடக்கிறது. அரசின் உத்தரவை மதித்து சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதில் சிலர் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக நல்ல ஆலோசனைகளையும் தருகின்றனர். யோகிபாபுவுடன் ‘காக்டெய்ல்’ மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு படம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மி கோபிநாத் மக்களுக்கு சில ஆலோசனைகளுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

“இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்றுநோயாக இருக்கிறது. அதனால் தயவுசெய்து வீட்டேலேயே இருங்கள். பொறுப்பில்லாமல் வெளியில் சுத்த வேண்டாம். பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் அரட்டை அடிக்க, பார்ட்டிக்கு செல்ல என வீட்டைவிட்டு எதற்காகவும் அநாவசியமாக வெளியே செல்லவேண்டாம். அப்படி செய்தால் அது நம் அனைவரையுமே கடுமையாக பாதிக்கும்.

இந்த சமயத்தில் நான் எனது நேரத்தை வீட்டில் எப்படி செலவிடுகிறேன் தெரியுமா..? என்னைப் பற்றி நிறைய அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்… எனது உடல்நலத்தில் கவனம் செலுத்துகிறேன். உடற்பயிற்சி செய்வதிலும், கேக் செய்வதிலும், சுத்தம் செய்வதிலும், இதற்கு முன்பு பார்க்க எனக்கு நேரமில்லாத நிறைய திரைப்படங்களை பார்ப்பது, படிப்பது, ஆன்லைனில் ஒரு சில நடிப்பு வகுப்புகளை எடுத்துக்கொள்வது மற்றும் நிறைய தூங்குவது என எனது நேரத்தை பயன்படுத்தி கொள்கிறேன்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வது என்றாலும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கான மாஸ்க்கை நீங்களே தயார்செய்துகொள்ள முடியும்.. எனக்கும் எனது குடும்பத்துக்கும் இந்த மாஸ்க்குகளை என் அம்மா தான் வீட்டிலேயே தயார் செய்தார்.

இந்த ஊரடங்கு முடிந்த பிறகும் நீங்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் இல்லையா..? உங்கள் முகத்தை மறைக்க துப்பட்டா அல்லது கைக்குட்டையை பயன்படுத்தலாம்..

தயவுசெய்து சுகாதார நிபுணர்களுக்காக மாஸ்க்குகளை கொஞ்சம் விட்டுக்கொடுங்கள். ஏனென்றால் நம்மை விட அதிகமாக அவர்களுக்குத்தான் தேவைப்படும். அவர்கள் அனைவரும் நமக்காக போராடிக்கொண்டு இருக்கும் உண்மையான ஹீரோக்கள்.

பாதுகாப்பாக இருங்கள். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள். நாம் அனைவரும் நேர்மறை கருத்துக்களுடன் ஒன்றாக இணைந்து இந்த வைரஸை விரட்டியடிப்போம்’ என விழிப்புணர்வு செய்தியுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஷ்மி கோபிநாத்.

தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவிய அபி சரவணன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபி சரவணன் முகநூல் பதிவில் இருந்து…

கொரோனாவின் கோரப்பிடியில் ஒட்டுமொத்த உலகமும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டியது அவசியம்.

இருந்தாலும் எனது வீட்டில் எனக்கு உணவு கிடைப்பது போல அனைவரும் உணவு அருந்துவார்களா? என்ற கவலை.

எல்லோருக்கும் உதவிட என்னால் முடியாது எனினும் மதுரையில் நான் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு என்னாலான சிறிய உதவியை செய்யலாம் என முடிவெடுத்தேன்.

எனது பள்ளி நண்பன் கார்த்திக் தேர்வு செய்த 100 குடும்பங்களுக்கு ‘காருண்யா 5டி என்டர்டைன்மெண்ட்’ நிறுவனர் ஜெசியுடன் இணைந்து சிறிய உதவியாக அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

கொரோனா வின் கொடூர பிடியில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சேவையில் ஈடுபட்டுவரும் அனைத்து மருத்துவத்துறை , சுகாதார துறை, காவல் துறை உள்ளாட்சி துறை, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் தேவையான மன வலிமையையும் உடல் வலிமையையும் தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இயன்றவரை இயலாதவர்களுக்கு உதவுவோம் .. பாதுகாப்புடன்.

– சிறிய மனத்திருப்தியுடன் அபி சரவணன்

கைதிகளுடன் இணைந்து மாஸ்க் தைக்கும் விஜய் பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் 400க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் இந்திரன்ஸ்.

தமிழில் ஷங்கர் & விஜய் இணைந்த நண்பன் படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்திருந்தார்.

இவர் நடிகராவதற்கு முன்பு டெய்லாராக இருந்துள்ளார் என்பதால் பல படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகவும் இருந்துள்ளார்.

இவர் தற்போது தன் சேவையை கொரோனா தடுப்பு பணியிலும் தொடர்ந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கேரள அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அங்கு முக கவசம் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனையடுத்து திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடன் இணைந்து முக கவசம் (மாஸ்க்) தைத்து வருகிறாராம்.

நமக்கு தேவையான முக கவசங்களை நாமே தைத்துக் கொள்ளலாம்.

அதற்கான பயிற்சி முறைகளை சிறை கைதிகளுக்கும் சொல்லி கொடுத்து வருகிறேன் என தெரிவித்திருக்கிறார் இந்த குணசித்திர நடிகர் இந்திரன்ஸ்.

கொரோனா ஊரடங்கை நீடித்த மாநிலங்கள் எத்தனை.? மற்ற மாநிலங்கள் எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரசாக கொரோனா உருவெடுத்து பல உயிர்களை கொன்று வருகிறது.

இதனால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 6,412 பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 678 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவம், 33 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி பிரதமர் மோடி ஊரடங்கு நிலையை அமல்படுத்தினார்.

21 நாட்கள் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வருகிற ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடையவுள்ளது.

வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீடிக்க கோரிக்கை விடுத்துள்ளன.

ஓரிரு தினங்களுக்கு முன் நடந்த (ஏப்ரல் 8) அன்று நடந்த இந்தியளவில் அனைத்துக் கட்சிகள் கூட்டட்திலும், ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால், ஆட்சேபம் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிலையில், நாளை ஏப்ரல் 11-ம் தேதி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஏற்கனவே, இரண்டு முறை அவர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இம்முறை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுவரை ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கை உத்தரவை ஏப்ரல் 31 வரை நீடித்து ஒரு சில மாநில முதலமைச்சர்கள் அமல்படுத்தியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் நீடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபில் நீடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளர்.

ஜார்க்கண்டிலும் நீடிப்பு என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

புதுவையில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதவுள்ளதாக முதல்வா் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மாவட்ட வாரியாக விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன

நாளை பிரதமர் என்ன அறிவிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Indian States want to extend corona virus lock down What Modi will decide?

இயக்குனர் சங்கத்திற்கு 5; பெப்சிக்கு 5.. அட்லியின் கொரானா நிவாரண நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகில் பல உயிரிழப்புகள் தினம் தினம் அரங்கேறி வருகிறது.

கொரோனா தொற்றை தடுக்க மக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் அட்லீ ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

இதில் ரூ.5 லட்சம் பெப்சிக்கும், ரூ.5 லட்சம் இயக்குனர்கள் சங்கத்திற்கும் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows