சிவாஜி குடும்ப பேனரில் இணைந்த விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் தனது ஈஷான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பாக மீன் குழம்பும் மண் பானையும் படத்தை தயாரித்தார்.

இதில் பிரபு உடன் காளிதாஸ், ஆஷ்னா சாவேரி நடிக்க, அமுதேஷ்வர் இயக்கியிருந்தார்.

தற்போது தங்களது ஈஷான் புரொடக்ஷன்ஸ் சார்பாக தனது அடுத்த படத்தை தயாரிக்கவிருக்கிறார் துஷ்யந்த்.

இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார்.

விஷ்ணு தற்போது நடித்து வரும் கதாநாயகன் படத்தின் இயக்குனர் முருகானந்தமே இப்படத்தையும் இயக்கவிருக்கிறாராம்.


vishnu vishal ‏@iamvishnuvishal

Really happy to sign a new project again wid #kathanayagan drctr Muruganandham for ESHAN productions @dusshyanth @abirami_D 🙂 details soon

விஜய்யுடன் மோதலை தவிர்க்க, சூர்யா இடத்திற்கு வந்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் அடுத்த ஆண்டு 2017 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

இதே நாளில் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கத்தி சண்டை படமும் வெளியாகவிருந்தது.

இதனிடையில் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட சூர்யாவின் சிங்கம் 3 படம் திடீரென தள்ளிப்போனது.

எனவே அன்றைய தினத்தில் (டிச. 23ஆம் தேதி) தனது கத்தி சண்டை படத்தை வெளியிடவிருக்கிறாராம் விஷால்.

ரஜினி ஆசியுடன் இணையும் ‘விஐபி’க்கள் தனுஷ்-அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோச்சடையான் படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படைப்பாக தனுஷ் நடிக்கவுள்ள விஐபி 2 படத்தை இயக்கவிருக்கிறார் சௌந்தர்யா ரஜினி.

இப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சியை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் ரஜினிகாந்த்.

இதில் தனுஷ் உடன் அமலாபால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

முக்கிய வேடத்தில் மின்சார கனவு படப்புகழ் பாலிவுட் நடிகை கஜோல் நடிக்கிறார்.

இன்றைய பூஜையில் லதா ரஜினிகாந்த், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரஜினி-விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் இணைந்த பாடகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வளர்ந்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது.

சிவா இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை மலேசியாவை சேர்ந்த பிரபல பாடகர், இசையமைப்பாளர் யோகி பி என்ற யோகேஸ்வரன் வீரசிங்கம் பாடியிருக்கிறாராம்.

இவர் ரஜினியின் ‘எந்திரன்’, விஜய்யின் குருவி மற்றும் தனுஷின் ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது இவர் அஜித் படத்தில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா முடிவால் அப்செட் ஆன ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சி3 (‘எஸ் 3’) படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

எனவே படத்தை திரையில் பார்க்க ஆவலாக ரசிகர்கள் இருந்தனர்.

முதலில் இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என பரபரப்பாக வெளியிட்டு டிரெண்டாக்கினார்கள்.

அதன்பின்னர் டிசம்பர் 23 படம் ரிலீஸ் என்றார்கள்.

தற்போது அந்த தேதியும் தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக சூர்யா அறிவித்துவிட்டார்.

எங்களது முயற்சிகளையும் மீறி எதிர்பாரா விதமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுவும் நன்மைக்கே என்று கருதி இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் என்ன காரணம் என்பதை தெரிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அப்செட் ஆக உள்ளனர்.

பாகுபலி-பைரவா பாடல்களுக்கு உள்ள ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள பைரவா படப் பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மறைவு, வர்தா புயல் ஆகியவற்றால் தமிழகம் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மிக எளிமையாக வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமைக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இதன் உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமாக லஹரி நிறுவனம் பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களின் பாடல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் வெளியான பாகுபலி படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோ உரிமைகளை இந்நிறுவனமே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Lahari Music may acquire the right of Bairavaa Audio

More Articles
Follows