விஷ்ணு விஷால்-அமலா பால் இணையும் படத்தலைப்பு

விஷ்ணு விஷால்-அமலா பால் இணையும் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishnu Vishal and Amala Paul movie titled MinMiniநடிகராக அறிமுகமான விஷ்ணு விஷால், தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார்.

தற்போது ‘கதாநாயகன்’, ‘பொன் ஒன்று கண்டேன்’, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதில் நாயகியாக அமலாபால் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இவர்களுடன் சுஜானே ஜார்ஜ், சஞ்சய், காளிவெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

தற்பாது இப்படத்திற்கு ‘மின்மினி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தன் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார் விஷ்ணு.

Vishnu Vishal and Amala Paul movie titled MinMini

 

சிங்கத்தை விட்டு சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஹரி

சிங்கத்தை விட்டு சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hari Suriyaஆறு, வேல் உள்ளிட்ட பல படங்களில் சூர்யா-ஹரி கூட்டணி இணைந்தாலும், இவர்களின் கூட்டணியில் உருவான சிங்கம் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்த, சிங்கம் 2, சி3 ஆகிய படங்களில் தொடர்ந்து இணைந்தனர்.

மேலும் சிங்கம் 4 படத்தில் விரைவில் இணைய உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து ஹரி கூறியதாவது…

தற்போது நான் ‘சாமி 2’ படத்தின் ஆரம்பகட்ட பணியில் பிசியாக இருக்கிறேன்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா பிசியாக இருக்கிறார்.

இருவரும் அந்தந்த படங்களை முடித்துவிட்டு, விரைவில் இணைய உள்ளோம்.

ஆனால் அது சிங்கம் 4 அல்ல. இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

After Singam 3 movie Suriya and Hari will join soon

திருமண நாளில் ஷாலினியுடன் பேச முடியாமல் தவித்த அஜித்

திருமண நாளில் ஷாலினியுடன் பேச முடியாமல் தவித்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith shaliniசரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் அஜித், ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களின் திருமணம் கடந்த 2000ஆம் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது.

இதன்படி, இவர்களது திருமண நாளை நேற்று இவர்களது ரசிகர்களும் கொண்டாடினர்.

திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் அஜித் தற்போது சிவா இயக்கும் விவேகம் பட சூட்டிங்கில் பல்கேரியா நாட்டில் இருக்கிறார்.

அங்கு இவரது போன் நெட்வொர்க் சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தால், அப்போது ஷாலினியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.

அதன்பின்னர் இறுதியாக இரவு நேரத்தில்தான் காதல் மனைவி ஷாலினியுடன் பேசினாராம்.

Ajith couldnt make call to his wife Shalini on their Wedding Day

விஜய் 61 படத்திலிருந்து விலக யார் காரணம்.? ஜோதிகா ஓபன் டாக்

விஜய் 61 படத்திலிருந்து விலக யார் காரணம்.? ஜோதிகா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay jyothikaதிருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார் நடிகை ஜோதிகா.

இதன் வெற்றிக்கு பின்னர், அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் நடித்து வருகிறார்.

மேலும் பிரம்மன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் அட்லி இயக்கும் விஜய் 61 படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் அதன்பின்னர் சில காரணங்களால் அதிலிருந்து விலகினார்.

இவர் விலகலுக்கு சிவகுமார் மற்றும் சூர்யாதான் காரணம் என அப்போது சொல்லப்பட்டது.

ஆனால், இதை மறுத்துள்ள ஜோதிகா தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

விஜய் 61 படத்திலிருந்து விலக காரணம் என் குடும்பம் அல்ல. அவர்கள் என்னையே முடிவு செய்ய சொன்னார்கள்.

ஆனால் அதற்கான காரணத்தை என்னால் சொல்ல முடியாது.” என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

Why  Jyothika walked out of Vijay 61

பாகுபலி2 ரிலீஸ் அன்று விஜய் 61 படக்குழுவின் திட்டம்

பாகுபலி2 ரிலீஸ் அன்று விஜய் 61 படக்குழுவின் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 61 stillsஅட்லி இயக்கும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் இதன் சூட்டிங்கில் வடிவேலு கலந்து கொண்டு நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 28ம் தேதி இப்படக்குழு ஐரோப்பா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

அன்றைய தினத்தில்தான் பாகுபலி படம் நான்கு மொழிகளில் இந்தியாவில் மட்டும் 9,000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay 61 team plan on Baahubali 2 release date

கமலைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி பட டைட்டிலில் சிபிராஜ்

கமலைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி பட டைட்டிலில் சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sibirajசைத்தான் பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் சத்யா படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.

இதே தலைப்பில் உருவான படத்தை கமல் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

சத்யா என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் வரலட்சுமி மற்றும் சதீஷ் நடிக்கின்றனர்.

சத்யராஜின் குடும்ப நிறுவனமான நாதம்பாள் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் சிபிராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு ரங்கா என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

இது 1982ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த படத்தின் தலைப்பாகும்.

நாளைய இயக்குனர் புகழ் வினோத் இயக்கவுள்ள இப்படத்தில் நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார்.

இதன் சூட்டிங் தற்போது காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

ஜீவா, ஹன்சிகாவுடன் சிபிராஜ் நடித்த போக்கிரி ராஜா படத்தலைப்பும் ரஜினி படத்தலைப்பு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows