விஷாலுடன் மோத தேதியை அறிவித்தார் அருள்நிதி

Vishals Irumbu Thirai and Arulnithis Iravukku Aayiram Kangal clash on 11th May 2018கோலிவுட் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 50 நாட்களாக (மார்ச் 1 முதல் ஏப்ரல் 19 வரை) புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

தற்போது ஸ்டிரைக் முடிவுக்கு வந்துவிட்டதாலும் கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டதாலும் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வருகிற மே 11ஆம் தேதி விஷால் தயாரித்து நடித்துள்ள இரும்புத்திரை படம் வெளியாகிறது.

இது தேதியில் மாற்றம் இருக்கும் என சில தினங்களுக்கு அறிவித்திருந்தார் விஷால். ஆனால் தற்போது இந்த தேதியிலேயே படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுடன் நாயகியாக சமந்தா நடிக்க, வில்லனாக அர்ஜீன் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.

இதே நாளில் மு. மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள `இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அருள்நிதியுடன் மஹிமா நம்பியார், அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படமானது ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது.

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

ரெமா மற்றும் வேலைக்காரன் படங்களை தயாரித்த 24 ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனத்தின் வெளியீட்டு நிறுவனமான 24 பிஎம் என்ற நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Vishals Irumbu Thirai and Arulnithis Iravukku Aayiram Kangal clash on 11th May 2018

Overall Rating : Not available

Latest Post