தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தயாரிப்பாளர் விஷால் கடந்த 17.08.2016 அன்று ஆனந்த விகடன் இதழில் அளித்த பேட்டி சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது.
மேலும் இதுபோல் தொடர்ந்து அவர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்துகொண்டதை குறிப்பிட்டு, அவருக்கு கடந்த 02.09.2016 அன்று தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில் 12.11.2016 அன்று நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததில் திருப்தியாக அமையாத பட்சத்தில் செயற்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி சங்க விதி எண் 14D-யில் உள்ளபடி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் விஷாலை சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் (14.11.2016) தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.