ஜெயிக்கனும்னு வெறி இருக்குறங்களுக்கு வாய்ப்பளிப்பேன்.. – விஷால்

ஜெயிக்கனும்னு வெறி இருக்குறங்களுக்கு வாய்ப்பளிப்பேன்.. – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’.

இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில்வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் மாரிமுத்து பேசும்போது…

விஷாலுடன் இது எனக்கு 5வது படம். இயக்குனர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலர் பாக்கும் போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும்.

விஷாலின் அப்பா ஒருமுறை கை குலுக்கினார். 3 நாட்களுக்கு கை வலித்தது. அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கிறார். அப்பாவே அப்படின்னா மகன் அடிச்சா எப்படி இருக்கும். விஷால் ஆக்‌ஷ்னலில் கலக்கி இருக்கிறார்.

இப்படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் சண்டை காட்சிகள் தூள் பறக்கும் அளவிற்கு அருமையாக இருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டின் போது ஊரடங்கு அனைத்தும் நிறைவு பெற்று அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு விஷால் சார் அவர்களுக்கு தனிப்பட்ட வேண்டுகோள். உங்கள் கல்யாணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். மேலும், இயக்குனரின் முதல் படம் அவருக்கு வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்” என்றார்.

டப்பிங் கலைஞர் ரவீனா ரவி பேசியதாவது,

இந்த படம் என் வாழ்க்கையுடன் ஒன்றி இருக்கிறது. நானும் அப்பாவும் தான் இப்படத்தின் கதையை கேட்டோம். அப்பா பெரிதும் தலையிட மாட்டார். ஆனால், அப்பா இந்த படத்தில் என்னை நடிக்க சொன்னார். கொரோனா காரணமாக அவர் இப்போது என்னுடன் இல்லை. அவரின் ஆசிர்வாதம் என்னுடன் எப்போதும் இருக்கும் என்றார்.

தெலுங்கு மொழி வசனகர்த்தா ராஜேஷ் பேசியதாவது,

இந்த படத்திற்கு தெலுங்கு மொழியில் ‘சாமானியன்’ என்று பெயர். தற்போது, நடக்க கூடிய நடுத்தர குடும்பத்தின் பிரச்சனையை மையமாக கொண்ட படம். VFF என்னுடைய வீடு போன்றது. வசனம் எழுதுவது மட்டும் என் வேலை இல்லை. என்ன சொன்னாலும் செய்வேன். விஷாலுடன் கிட்டதட்ட 15-20 வருடம் பயணித்திருக்கிறேன்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் புதுமை காட்டியுள்ளார். நான் யுவன் ஷங்கர் ராஜாவின் பெரிய ரசிகன். ரவீனா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையின் திருப்பு முனையே அவர் தான். அனைவரும் படத்தை பார்த்து விட்டு எங்களை பாராட்டுங்கள்.

புதுமுகம் நடிகை டிம்பிள் ஹயாதி பேசும்போது,

இது என்னுடைய முதல் முழு நீள தமிழ் படம். இந்த வாய்ப்பளித்த இயக்குனர் சரவணன் சார் அவர்களுக்கு நன்றி. என்னுடைய நீண்ட நாள் கனவு நினைவேறியது போன்று இருக்கிறது. விஷால் சார் என்னுடைய இன்ஸ்பிரஷன். அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டாலும் பெரிதும் பொருட்படுத்த மாட்டார்.

மாரிமுத்து ஏற்கனவே ‘அட்ராங்கி ரே’ தெலுங்கு படத்தில் என் அப்பாவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் எனக்கு மாமனாராக நடித்துள்ளார். அனைவரும் படத்தை திரையரங்கில் பாருங்கள். நன்றி! என்றார்.

இயக்குனர் து.ப.சரவணன் பேசும்போது,

அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள், இந்த கதை வெற்றியடையும் என ஊக்கமளித்தவர் கருந்தேள் ராஜேஷ். அதேபோல், இறுதி வரை துணையாக இருந்தவர் பொன் பார்த்திபன்.

இந்த வாய்ப்பு குடுத்த விஷால் சாருக்கு நன்றி. இன்று நான் இங்கு நிற்பதற்கு காரணம் விஷால் சார் தான்.

இப்படத்தின் கதையை விஷாலிடம் கூறின பிறகு, யுவனிடம் கூறுங்கள் என்றார். பிறகு யுவன் சாரிடம் 30 நிமிடம் என்று தான் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், ஒன்றரை மணி நேரம் ஆனது.

பிறகு விஷால் சார் என்னை அழைத்து, யுவன் கதை ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னார். அந்த பெயரைக் காப்பாற்று என்றார். அது இந்த நிமிடம் வரை என் மனதில் அப்படியே இருக்கிறது. அதை ஓரளவு நிறைவெற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன் என்றார்.

யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது,

விஷாலுடன் நிறைய படங்கள் பணியாற்றியிருக்கிறேன். பல படங்கள் வெற்றியடைந்துள்ளது.ஆனால், இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது,

கொரோனாவின் இக்கட்டான சூழலில் இந்த விழா நடத்துவது குறித்து தயக்கம் இருந்தது.

து.ப. சரவணனின் ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும் படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை கூப்பிட்டு பாராட்டினேன். அவரிடம், நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்றேன். அப்படி உருவானது தான் ‘வீரமே வாகை சூடும்’.

இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை குடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

புது இயக்குனரிடம் நல்ல கதையை கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று அவரின் அனுமதியில்லாமலே கூறுவேன். இப்படத்திருக்கும் அதேபோல் யுவன் தான் மியூசிக்.

ஒரு வகையில் நான் சுயநலவாதி. ஜெயிக்கனும்னு வெறி இருக்குறங்களுக்கு வாய்ப்பளிப்பேன். புது இயக்குனர்களிடம் புதுமையான எண்ணங்கள் இருக்கும்.

நாயகி டிம்பிளை ஒரு விழாவில் எடுத்த ஸ்டில்லை பார்த்து ஒப்பந்தம் செய்தோம். அவரை இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். தமிழில் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள் தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் குடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெரும்.

ரவீனாவை என்னைப்போல் யாரும் படப்பிடிப்பில் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள். திறமையாக நடித்திருந்தார். மாரிமுத்து எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் அழ வைத்து விடுவார்.

மாரிமுத்து என்னிடம், நீ சண்டையை விடவே மாட்டியா? என்பார். அதை எதிரி தான் முடிவு செய்யணும் என்று கூறுவேன். இது தான் படத்தின் கரு.

வாசுகி என்னுடைய நெருங்கிய தோழி. என் பெற்றோர், மேலாளரை விட நான் படப்பிடிப்பிற்கு சென்றேனா இல்லையா என்று வாசுகி தான் முதலில் விசாரிப்பார்.

என்னைப் பொறுத்தவரை கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை; கோவில். என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னுடைய நண்பர்கள் என்று தான் கூறுவேன் என்றார்.

Vishal speech at Veerame Vaagai Soodum press meet

இலவசமா ஒரு சினிமா..: ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் தியேட்டர் ஹுட்ஸ்

இலவசமா ஒரு சினிமா..: ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் தியேட்டர் ஹுட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது.

தியேட்டர்ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில்…

“இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில் உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்,” என்றார்.

‘“உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை நாங்கள் வழங்கவுள்ளோம். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மொழி உள்ளடக்கம் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான அசல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை நாங்கள் தரவிருக்கிறோம்.

எனவே பார்வையாளர்கள் எங்களை நிச்சயம் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தியேட்டர்ஹூட்ஸின் நோக்கம் குறித்து விவரித்த அவர், “இப்போது ஒரு சில திரைப்படங்களே ஓடிடி தளங்களில் நேரடியாகத் திரையிடப்படுகின்றன. பெரிய திரைப்படங்கள் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகின்றன.

ஓடிடியில் பார்க்க சினிமா ரசிகர்கள் 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இது தவிர, சினிமா தியேட்டரில் புதிய திரைப்படத்தை ரசிக்கும் அனுபவமே தனி. இந்த இடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம். திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும் இலவச டிக்கெட்டுகளையும், எங்கள் தியேட்டர்ஹுட்ஸ் தளத்தில் அளவில்லா உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தையும் நாங்கள் வழங்கவுள்ளோம்,” என்றார்.

புத்தம் புதிய ஸ்ட்ரீமிங் சேவையான theaterhoods.com, சிறந்த திரைப்படங்கள் மற்றும் சுவாரசியமான வலை தொடர்களை மொபைல் மற்றும் இணையதளம் சார்ந்த உங்கள் சொந்தத் திரைகளுக்கு கொண்டு வரும். அளவற்ற பொழுதுபோக்கு சேவைகளை இது வழங்கும்.

அதுமட்டுமில்லாமல், திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டு ரசிப்பதற்கான டிக்கட்டுகளை இலவசமாகவும் வழங்கி, பொழுதுபோக்கிற்கான புகலிடமாக அமைய உள்ளது theaterhoods.com.

15 ஜனவரி 2022 அன்று பொங்கல் தின விருந்தாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனது செயல்பாடுகளை தொடங்க உள்ள இந்த தளம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் திரையரங்கு மற்றும் ஒடிடி அனுபவத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது.

சந்தாதாரர்களுக்கு அளவற்ற பொழுதுபோக்கை வழங்கும் அதே வேளையில், திரையரங்குகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த செலவில்லாத தீர்வையும் இது வழங்குகிறது. மேலும், பிவிஆர் போன்ற முன்னணி திரையரங்க குழுமங்களுடன் இந்த தளம் கைகோர்த்துள்ளது.

ஆகையால், சந்தாதாரர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகவும் விரும்பும் ஓடிடி தளமாக theaterhoods.com விளங்கும். திரைப்படங்கள், இணையத் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இசை போன்ற உள்ளடக்கங்கள் இந்த தளத்தில் கிடைக்கும்.

இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிகள் மூலம் உலகம் முழுவதும் தியேட்டர்ஹூட்ஸின் சேவை கிடைக்கும்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் தயாரிப்புகளை செலவில்லாத விளம்பரத்திக்கு (புரமோஷனுக்கு) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் ட்ரைலர் மற்றும் தயாரிப்பு விவரங்களுடன் எங்களை அணுகலாம்.

Theater hood new OTT launch updates

JUST IN கமல்ஹாசன் உடன் இணைந்தார் சிவகார்த்திகேயன்.; டைரக்டர் யார் தெரியுமா.?

JUST IN கமல்ஹாசன் உடன் இணைந்தார் சிவகார்த்திகேயன்.; டைரக்டர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் தனது தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

இதில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த படத்தை ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

Sivakarthikeyan collaborates with Kamal Haasan

Kamalhassan Sivakarthikeyan Rajkumar Periyasamy

இளையராஜாவின் பொங்கல் பரிசாக வந்த ‘சிங்கார மதன மோகனா..’

இளையராஜாவின் பொங்கல் பரிசாக வந்த ‘சிங்கார மதன மோகனா..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையிசை ரசிகர்களிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயோனே..’ எனத் தொடங்கும் முதல் பாடலுக்கு பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், இந்த படத்தில் இடம்பெறும் ‘சிங்கார மதன மோகனா..’ எனத்தொடங்கும் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’.

இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த ‘சிங்கார மதன மோகனா..’ என தொடங்கும் பாடலை பின்னணி பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் பாடியிருக்கிறார்.

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை பாசூரங்களைப் பாடி மக்கள் இறைவனை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தை திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்ற வகையில் அனைவரின் இல்லத்திலும் ஒலிக்க கூடிய பாடலாக ‘சிங்கார மதன மோகனா.. பாடல் உருவாகியிருக்கிறது.

நாம சங்கீர்த்தனம் பாணியில் தயாராகியிருக்கும் இந்த கிருஷ்ண பகவானைப் பற்றிய பக்தி பாடலைக் கேட்கும் பொழுதே இணைந்து பாடவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. இந்தப் பாடல் பொங்கல் திருநாளன்று இணையத்தில் வெளியாகிறது.

‘மாயோனே. மணிவண்ணா..’ எனத் தொடங்கும் பாடல் வெளியான குறுகிய காலத்திற்குள் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.

அதேபோன்றதொரு சாதனையை இசைஞானி இசையில் பாடகி ஸ்ரீநிதி பிரகாஷின் இனிய குரலில் வெளியாகிவிருக்கும் ‘சிங்கார மதனமோகனா..’ என்ற பாடலும் படைக்கும்.

இளைய தலைமுறையினரிடத்தில் ‘லவ் ஆந்தம்’, ‘யூத் ஆந்தம்’, ‘ப்ரண்ட்ஸ் ஆந்தம்’, ‘பார்ட்டி ஆந்தம்’, ‘ராக் ஆந்தம்’ போன்ற பல ஆந்தம் பாடல்கள் பெற்ற வரவேற்பை, பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாசின் ஆன்மீக குரலில் வெளியாகியிருக்கும் ‘சிங்கார மதன மோகனா..’ எனத் தொடங்கும் ‘கிருஷ்ணர் ஆந்தம்’ பாடலும் பெறும் என திரையிசை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழ் திரையிசை உலகில் கிருஷ்ணரைப்பற்றிய பாடலாக ‘முகுந்தா..முகுந்தா..’ என்ற தசாவதார பட பாடல் இடம்பிடித்திருந்தது.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘சிங்கார மதன மோகனா.. ’என்ற பாடல் விரைவில் அனைவரின் மனதிலும், கிருஷ்ண பகவானைப் பற்றிய ஒப்பில்லா துதிப் பாடலாக இடம்பிடித்து புதிய சாதனையை படைக்கும்.

Maayon team’s Pongal Treat – Krishna Bhajan– A Musical Delight

ஒன் 2 ஒன்..: த்ரிஷாவை அடுத்து சுந்தரை இயக்கும் திருஞானம்

ஒன் 2 ஒன்..: த்ரிஷாவை அடுத்து சுந்தரை இயக்கும் திருஞானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் “ஒன் 2 ஒன்” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார்.

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது.

விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார்.

விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த நடிகர் பற்றி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – 24 HRS புரொடக்‌ஷன்ஸ்
எழுத்து இயக்கம் – K.திருஞானம்
ஒளிப்பதிவு – விக்ரம் மோகன்
இசை – சித்தார்த் விபின்
கலை – R.ஜெனார்த்தனன்
காஸ்டுயும் டிசைனர் – நிவேதிதா
புரொடக்ஷன் எக்ஸிகியுடிவ் – விஜய்
சண்டை பயிற்சி – “Rugger” ராம்
நடனம் – தீனா
ஸ்டில்ஸ் – பாக்யா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Sundar C starrer K. Thirugnanam directorial “One 2 One”

கருணாஸ் கையிலெடுத்த ‘ஆதார்’.; 3வது முறையாக இணைந்த ஹிட் கூட்டணி

கருணாஸ் கையிலெடுத்த ‘ஆதார்’.; 3வது முறையாக இணைந்த ஹிட் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’.

இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா. உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார்.

பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, ‘அசுரன்’ புகழ் ராமர் படத்தை தொகுத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான சீனு படத்தின் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ‘ஆதார்’ படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த சினிமாவாக ‘ஆதார்’ உருவாகியிருக்கிறது,” என்றார்.

‘ஆதார்’ தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் என்ற நம்பிக்கையை பட குழுவினர் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு சான்றாக ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முன்னர், உலக அளவில் யதார்த்த சினிமா படைப்பாளியாக போற்றப்படும் இந்திய திரை சிற்பி சத்யஜித்ரேயின் உருவப்படத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கின்றனர்.

‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பொங்கல் திருநாளான இன்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் கருணாஸின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருவதால் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் – நடிகர் கருணாஸ் மீண்டும் ‘ஆதார்’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால், ‘ஆதார்’ ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் திரை உலகில் ஏற்பட்டிருக்கிறது. .

Director Ramnath and Karunaas joins for Aadhaar

More Articles
Follows